Published:Updated:

காலத்தை வென்ற கலையழகு!

கல்லிலே கலைநயம்... தகவல்கள்-படங்கள்: பராந்தகச் சோழன்

காலத்தை வென்ற கலையழகு!

கல்லிலே கலைநயம்... தகவல்கள்-படங்கள்: பராந்தகச் சோழன்

Published:Updated:

கோயில்கள் சொல்லும் வரலாற்றை நோக்கிப் பயணிப்பது, ஓர் இனிய அனுபவம். சரித்திரம் கல்வெட்டுகளாகவும், கலையாகவும் காலம் கடந்து நம் கண் முன்னே நிற்பது கோயில்களில்தான்!
அந்தக் கோயில்கள் தமக்குள் பொதிந்து வைத்திருக்கும் சிற்பங்களும், அவற்றில் கையாளப்பட்டிருக்கும் கலைநுட்பங்களும் சிலா சாசனம் சொல்லும் பல தகவல்களும்... அதீத தொழில்நுட்பம் என்று வியக்கக்கூடிய இன்றைய விஷயங்களை எல்லாம் மறந்துவிடும் அளவில்... ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இவையெல்லாம் இருந்திருக்கிறதா என்று நம்மை அதிசயிக்கவைக்கும்.

அந்த அதிசயங்களைத் தேடி அலையவும், தரிசிக்கவும் கசக்குமா என்ன? ‘அப்படி தேடிக் கண்டடைந்து மகிழ்வதும், முன்னோரின் பெருமையை மற்றவருக் கும் பறைசாற்றி மகிழ்விப்பதுமே வேலை’ என்கிறார் பராந்தகச் சோழன்.

காலத்தை வென்ற கலையழகு!

இந்தப் பெயர் முகநூலில் மிகவும் பிரபலம். இயற்பெயர் தமிழ்ச் செல்வம். பூர்வீகம் கும்பகோணம்; படித்தது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பு. ஆட்டோமொபைல் துறையில் 15 வருடங்கள் பணிபுரிந்தவர், தற்போது பாண்டிச்சேரியில் டிராவல் ஏஜென்சி வைத்திருக்கிறார்.

நமது பாரம்பரியம் மற்றும் சரித்திரம் பற்றி  தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு, 14 வயதில் புத்தக வாசிப்பில் துவங்கிய இவரது தேடல், களஆய்வாகவும் பரிணமித்து இன்றும் நீள்கிறது! உலகம் போற்றத் திகழ்ந்த நம் முன்னோரின் நாகரிகச் செழுமைக்கும், கலைத் திறனுக்குமான சான்றுகள் குறித்த இவரது தேடல் மற்றும் சேமிப்புகளில் சிறு துளிகள் இங்கே உங்களுக்காக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலத்தை வென்ற கலையழகு!
காலத்தை வென்ற கலையழகு!
காலத்தை வென்ற கலையழகு!
காலத்தை வென்ற கலையழகு!
காலத்தை வென்ற கலையழகு!
காலத்தை வென்ற கலையழகு!
காலத்தை வென்ற கலையழகு!
காலத்தை வென்ற கலையழகு!

மேலும் பல...

ராவணன் இருக்கை போடாது அவமதிக்க, அவனுக்கு இணையாக அனுமன் தனது வாலையே இருக்கையாக்கி அமர்ந்த கதையைச் சிற்ப வடிவில் தரிசிக்க ஸ்ரீமுஷ்ணத்துக்கும், இசைவாணியின் கையில் உள்ள இசைக் கருவியை நாமும் மீட்ட இயலுமா என முயற்சித்துப் பார்க்க கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயிலுக்கும், போர்க்கள காட்சிகளைச் சித்திரிக்கும் சிற்பங்களைக் காண நாச்சியார் கோவிலுக்குச் செல்லவேண்டும்.

அதுமட்டுமா? இன்றைய நவீனத்துவ பொறியியலுக்கும் பெரும் சவாலாக அமைந்த செஞ்சி ஸ்ரீபட்டாபிராமர் கோயிலின் பன்னிரு கால் மண்டபம், தர்மபுரி மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் உள்ள தரை தொடாத - ஒன்றரை டன் எடைகொண்ட தூண், எந்த திசையில் நின்றாலும் முழுப் பரிமாணத்தையும் காண இயலாத சூட்சுமத்துடன் திகழும் - திருச்சி அருகே திருவெள்ளறையில் உள்ள பல்லவர்கால ஸ்வஸ்திக் கிணறு, எந்தவிதமான இணைப்புக் கலவையும் பயன்படுத்தாது முழுவதும் கருங்கற்களை அடுக்கி 216 அடி உயரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் தஞ்சை பெரியகோயில் விமானம்... இவையாவும் தமிழர்களின் கலை சாகசங்கள் அல்லாமல் வேறென்ன?

தொகுப்பு: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism