மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

மகாமக மகிமை!

ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணிய தலங்களிலேயே வாழ்வோர் செய்த பாவங்கள், காசியில் உள்ள கங்கையில் நீராடினால் மறையும். அந்தக் காசியில் உள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணத் தீர்த்தத்தில் நீராடினால் அகலும்! கும்பகோணத்தில் உள்ளோர் செய்த பாவங்கள், கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினாலே அகலும்..’ என்கிறது வடக்கத்திய நூல் ஒன்று. அதனால்தான் காசியில் உள்ளவர்கள்கூட புண்ணியம் தேடுவதற்காகக் கும்பகோணத்துக்கு வருகிறார்கள்.

அருட்களஞ்சியம்

மதங்களைத் தாண்டி..!

குடந்தையில் 1921-ம் ஆண்டு நடந்த மகாமகப் பெருவிழாவில் சென்னை முஸ்லிம் இளைஞர் சங்கத்தைச் சார்ந்த இருநூறு இளைஞர்கள் வருகை தந்து பொதுமக்களுக்குச் சீரிய தொண்டாற்றி இருக்கிறார்கள். அப்போது, பட்டீஸ்வரத்தில் முகாமிட்டிருந்த மகா பெரியவர் இந்த விஷயம் தெரிந்து அத்தனை முஸ்லிம் இளைஞர்களையும் அழைத்து அகமகிழ்ந்து போனாராம். அதோடு மட்டுமில்லாமல், அவர்கள் அனைவருக்கும் ‘உங்கள் சங்கத்துக்கு ஸ்ரீமடத்தின் அன்புப் பரிசு’ எனச் சொல்லி வெள்ளிக் கோப்பைகளையும் பரிசாக வழங்கினாராம்!

இள மாமாங்கம்!

பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல, குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாட்கள் ஆகும். இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11.868 வருடங்கள்தான்!

அதனால்தான் மகாமகம் சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே வந்துவிடும் என்கிறார்கள் வானியல் தெரிந்தவர்கள். 1929, 1600, 1683, 1778, 1861, 1956 வருடங்களில் பதினோரு வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டதாம். இந்த மகாமகங்களை 'இளமாமாங்கம்' என்கிறார்கள்.

** 29.2.04 ஆனந்த விகடன் இணைப்பிதழிலிருந்து...

சித்திர ராமாயணம் அடுத்த இதழில்...

அருட்களஞ்சியம்
அருட்களஞ்சியம்
அருட்களஞ்சியம்

எடைக்கு எடை தங்கம்!

தஞ்சையை அச்சுதப்ப நாயக்கர் ஆண்டபோது, அவரது முதலமைச்சராகப் பணிபுரிந்தவர், கோவிந்த தீட்சிதர். இவர் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் வாழ்ந்தார். ஒரு சமயம் மன்னருக்கும் அமைச்சருக்கும் திருப்பணி சம்பந்தமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில் பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் குளத்தின் அருகில் அமர்ந்திருக்கும்
ஸ்ரீஆக்ஞா கணபதிக்குத் தீட்சிதர் அபிஷேகம் செய்வதற்காக வைத்திருந்த பாலை மன்னர் தட்டி விட்டுவிட்டார். ஆனாலும், தீட்சிதர் அதைப் பொருட்படுத்தாமல் குளத்திலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்ய, அந்த நீர் பாலாக மாறியது. இந்த அதியசயத்தைக் கண்டு பயந்துபோன மன்னர், கோவிந்த தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டதுடன், தான் செய்த தவறுக்குப் பரிகாரம் கேட்டார். ‘ஸ்ரீஆக்ஞா கணபதியின் பெயரிலேயே மானியம் எழுதிக் கொடுக்க வேண்டும். தன்னை அவமதித்த குற்றத்துக்கு தன் எடைக்கு எடை பொன் தரவேண்டும்’ என்று கூற... மன்னரும் அவ்வாறே செய்தார். அப்படித் தராசில் உட்கார்ந்து தான் பெற்ற தங்கத்தைக் கொண்டுதான் தீட்சிதர் மகாமகக் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள பதினாறு லிங்கங்களுக்கும் கல் மண்டபங்கள் கட்டி, குளத்துக்கும் கற்கள் வைத்து செப்பனிட்டார். தீட்சிதர் தராசில் அமர்ந்த கோலத்தை இன்றும் மண்டபம் ஒன்றில் காணலாம்.

அருட்களஞ்சியம்

மகான் கோவிந்த தீட்சிதர் வம்சத்தில் வந்தவர்தான் - நமது காஞ்சி மாமுனிவர் பரமாச்சார்ய சுவாமிகள். அதுமட்டுமல்ல. தீட்சிதர் தஞ்சை மன்னனுக்குச் சரிசமமாக, ஒரே ஆசனத்தில் அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்தவர். தஞ்சை அரசின் முதலமைச்சராக இருந்துகொண்டே அவர் ஆலயங்களைப் பராமரிக்கும் துறையையும் கவனித்துக் கொண்டார். பட்டீஸ்வரம் ஞானாம்பிகை அம்மனிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவர், அந்தத் திருக்கோயிலுக்கு அப்போதே திருப்பணி செய்தவர். இன்றும் தீட்சிதர் தன் மனைவியுடன் கைகுவித்த நிலையில் பட்டீஸ்வரம் ஸ்ரீஞானம்பிகை சந்நிதியில் சிலை வடிவில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்!

- வி.ஆர்.கோபாலன் 


** 16.2.92 ஆனந்த விகடன் இதழிலிருந்து...

அருட்களஞ்சியம்