. பு.த்திசாலித்தனமும் அடக்கமும் கொண்ட குணம், இசையில் ஈடுபாடு, வாக்கில் சுத்தம், நினைத்ததை அடைவதில் முனைப்பு, நற்காரியங்களில் ஆர்வம், பழி பொறுக்காத தன்மை, எதிரிகளை வீழ்த்தும் திறன்... ஆகிய இந்தக் குணங்கள் பெரும்பாலான அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு உரியவை..
சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், அவிட்ட நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். மகரம், கும்பம் ஆகிய ராசிகள், சனிக் கிரகம் ஆகியவை அவிட்ட நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டவை. இதன் கதிர்கள், மேற் குறிப்பிட்ட நாட்களில் அதிக அளவில் பூமியில் விழும். அதன் நல்ல கதிர்வீச்சுகள் நன்மையையும், கெட்ட கதிர்வீச்சுகள் தீமை மற்றும் நோய்களையும் விளைவிக்கும். வாத நோய், பித்தம் தொடர்பான நோய்கள், இருமல், சொறி, சிரங்கு, மார்புச் சளி, விஷக்கடி ஆகியவை அவிட்ட நட்சத்திர தோஷத்தால் ஏற்படும். இதிலிருந்து விடுபட, வன்னி மர நிழலில் சிறிது இளைப்பாறுவது நல்லது. வன்னி மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளையும் உட்கொள்ளலாம்.

வேதாரண்யம் ஆலயத்தின் தல விருட்சமாக விளங்குகிறது வன்னி மரம். நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில், வேதவனம் எனும் வேதாரண்யம் தலம் அமைந்துள் ளது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி என்பார்கள். அதுபோல், வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது ஐதீகம்.

வேதங்கள் நான்கும் பூஜித்த தலம்; ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவேதாரண்யேஸ்வரர். சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னே, உமைய வளுடன் சிவனார் திருமணக் கோலத்தில் காட்சி தரும் அற்புதத் தலம். அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீவேதநாயகி. இந்தத் தலத்து ஸ்ரீசரஸ்வதி தேவி, தனது திருக்கரத்தில் வீணையின்றிக் காட்சி தருகிறாள். ஸ்ரீசரஸ்வதி தேவி வீணை வாசிக்க, அதைக் கேட்ட அம்பிகை, 'சபாஷ்’ என்று பாராட்டினாள். அவளின் குரல், வீணை இசையைவிட சிறந்திருக்க, அதற்கு இணையாக ஸ்ரீசரஸ்வதி தேவியால் வீணையை இனிமையாக மீட்ட முடியாமல் போனதாம். எனவே, அவளின் கர்வம் அழிந்தது; கற்றது கையளவு என அறிந்து உணர்ந்தாள் என்கிறது ஸ்தல புராணம். அதுமட்டுமா... இலங்கை செல்லும் முன் ஸ்ரீராமர், இங்கே சிவலிங்க பூஜை செய்து, சாந்தரூபினியாகத் திகழும் ஸ்ரீதுர்கையை வழிபட்டுச் சென்றார் என்கிறது ஸ்தல புராணம்.

வழக்கமான அமைப்பில் இல்லாமல், நேர்ப்பக்கமாக இருக்கிற நவக்கிரகங்களும் நடுக்கம் தீர்த்த விநாயகரும் இங்கு சிறப்பு! மேலும் ஸ்ரீவீரகத்தி விநாயகர், மோட்சத்துவாரேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோரும் இங்கே தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.

நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் பதிகம் பாட...

பூட்டப்பட்டிருந்த ஆலயக் கதவுகள் தாமே திறந்து- மூடிய அற்புதம் நிகழ்ந்த தலமும் இதுவே. மாசி மக நன்னாளில், கதவு திறக்கும் ஐதீக விழா சிறப்புற நடைபெறுகிறது.

வன்னி மரத்தடியில் அமர்ந்து கடும் தவம் செய்து, ஸ்ரீபிரம்மனின் தரிசனமும் கிடைக்கப் பெற்று, ஸ்ரீவசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷி என்கிற பட்டத்தை ராஜரிஷி விஸ்வாமித்திரர் பெற்றது, இந்தத் தலத்தில்தான்!

ராவணனுடன் போரிடுவதற்கு முன்னதாக, ஸ்ரீராமர் வன்னி மரத்தைத் தொட்டு வணங்கி விட்டுப் போர் செய்யக் கிளம்பியதாக ராமாயணம் தெரிவிக்கிறது. பாண்டவர்கள், தங்களது போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதக் குறிப்பு தெரிவிக்கிறது!

வன்னிக் காய்களைப் பவுடராக்கி, காலையும் மாலையும் சாப்பிட்டு வர, மாதவிலக்கு மற்றும் ரத்தப் போக்குக் கோளாறுகள், கர்ப்பப்பை புண் மற்றும் வீக்கம் ஆகியன குணமடையும். வன்னிக் காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால், பற்களும் ஈறுகளும் பலமாகும். வன்னிக்காய் பவுடரை தேங்காய் எண்ணெய் அல்லது தேன்மெழுகில் கலந்து களிம்பாக்கி, மூலக் கட்டிகள் கரைவதற்குப் பயன்படுத்தலாம்.

விருத்தாசலம், திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி போன்ற பல தலங்களின் விருட்சமாகவும் திகழ்கிறது வன்னி மரம்.

நீதி, நேர்மை, நல்லறிவு, பிறருக்கு உதவும் குணம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை சதய நட்சத்திரக்காரர்களின் குணங்கள். சதயம் (சதம்) என்பது, சம்ஸ்கிருதம். இதற்கு நூறு என்று பொருள். நூறு நட்சத்திரங்களின் கூட்டம், வானில் கோள வடிவில் காணப்படுவதால், இந்த நட்சத்திரத்துக்கு சதம் என்று பெயர் வந்து, அதுவே சதயமானதாகச் சொல்வர்!

. இது, கும்ப ராசி மற்றும் சனிக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமைகள் மற்றும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரையுள்ள தேதிகளில் பிறந்தவர்களை சதய நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இதன் நல்ல கதிர் வீச்சுகள், ஆரோக்கியம் தரவல்லவை; கெட்ட கதிர்வீச்சுகள், நோய்களை உண்டாக்குபவை. இந்த நோய்களைக் குணப்படுத்த, கடம்ப மரம் பெரிதும் உதவுகிறது..
மேலைக்கடம்பூர் ஸ்ரீஜோதி மின்னம்மை சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலின் தல விருட்சம் கடம்ப மரம். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியே சுமார் 31 கி.மீ. தொலைவு பயணித்தால், இந்தத் தலத்தை அடையலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற பல அடியார்கள் வழிபட்ட தலம் இது. திரேதா யுகத்தில் சூரிய- சந்திரர்கள், இந்திரன், ரோமரிஷி ஆகியோரும், துவாபர யுகத்தில் அஷ்ட பர்வதங்களும், பர்வத ராஜனும், கலியுகத்தில் பதஞ்சலி முனிவரும் இங்கு வழிபட்டதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில், காலையில் சூரியன் தன் கதிர்களால் மூலவரை வழிபடுகிறான். இந்தத் தலத்து நாயகி, காலையில் கலைமகளாகவும், மாலையில் திருமகளாகவும், இரவில் மலை மகளாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

தில்லை ஸ்ரீநடராஜரிடம் பதஞ்சலி முனிவர் விடுத்த வேண்டுகோளின்படி, இந்தத் தலத்தில் ஸ்ரீநடராஜர் ஆனந்தக் கூத்தாடினார். பதஞ்சலி முனிவர் தன் சிரசின் மீது ஸ்ரீநடராஜரைச் சுமந்தபடி ஆடும் கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.இங்குள்ள விநாயகரும் விசேஷமானவர்.

அரக்கர்களும் தேவர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தபோது, விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை பூலோகத்தில் மறைத்துவைக்க விநாயகர் எடுத்து வரும் வேளையில், அமிர்தத்திலிருந்து ஒரு துளி தெறித்து, கடம்பவனத்தில் விழுந்தது. அந்த இடத்தில் லிங்கத் திருமேனி ஒன்று தோன்றியது. பிற்காலத்தில் அந்தக் கடம்பவனம், திருக்கடம்பூர் என்றானது; ஸ்தல விருட்சம், கடம்ப மரமாகத் திகழ்கிறது. ஸ்ரீவிநாயகர், அமிர்தத்தை மறைத்து வைத்த தலம், திருக்கடவூர் (திருக்கடையூர்). எனவே, இந்த இரண்டு தலங்களிலும் ஸ்வாமி யின் திருநாமம் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என அழைக்கப்பட்டது. திருக்கடவூர் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாகவும், திருக்கடம்பூரில் சாந்த மூர்த்தியாகவும் அருள்கிறார். திருக்கடம்பூரிலும் மக்கள் மணிவிழாச் சடங்குகளைச் செய்து, இறையருளைப் பெறுகின்றனர்.

கடம்ப இலையின் சாற்றை எடுத்து, அதில் சீரகமும் சர்க்கரையும் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க, வயிற்றுப் பொருமல் மற்றும் அழற்சி நீங்கும்; அதிக தாகத்துடன் கூடிய ஜுரத்துக்கும் நல்லது. இலைச்சாறு வாய்ப்புண், தொண்டைப் புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும். 50 கிராம் பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சி அருந்தி வர, காய்ச்சல் குணமாகும். பட்டையை இடித்து, வலியுள்ள இடத்தில் வைத்துக் கட்டுப் போட்டால், வலி குணமாகும். ஜுரத்துக் கும், வயிற்றுப் போக்குக்கும் கடம்ப பழச்சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொடுப்பது நல்லது. இதன் விதையை அரைத்து நீரில் கலந்து குடித்தால், கடும் விஷமும் முறிந்துவிடும். விதையைப் பொடித்து மூக்கில் உறிஞ்ச, தலைவலி நீங்கும். பூக்களைச் சமையலுக்குப் பயன் படுத்தலாம். இதற்கு ரத்தத்தைச் சுத்தம் செய்யும் குணம் உண்டு.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் திருக்கோயில், குளித்தலை திருக்கடம்பூர் ஆலயத்திலும் தல விருட்சம், கடம்ப மரமே!

- விருட்சம் வளரும்...
படங்கள்: கே.கார்த்திகேயன், கே.குணசீலன்

பிரதோஷத்தில் தரிசனம் தரும்
ஸ்ரீதசபுஜ ரிஷபதாண்டவ மூர்த்தி!

முதலாம் குலோத்துங்க சோழனின் அவையில் ராஜகுருவாக இருந்தவர், வங்க தேசத்தைச் சேர்ந்த ஸ்ரீகண்டசிவன். அவர் தனது தேசத்தில் இருந்து செம்பில் வடிவமைத்த ஸ்ரீதசபுஜ ரிஷபத் தாண்டவ மூர்த்தி விக்கிரகத்தைக் கொண்டு வந்தார். அதை அவர், ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட மேலைக் கடம்பூர் கோயிலில் வைத்து வழிபட்டார்.

மேல் நோக்கி நிற்கும் ரிஷபத்தின் மேல், பத்துக் கரங்களில் கத்தி, சூலம், தீச்சட்டி, கபாலம், பாம்பு, கேடயம், தண்டம், குத்தீட்டி ஏந்தியவராய் ஸ்ரீதசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி காட்சி தருகிறார். பிரளய காலத்தில் சகல ஜீவராசிகளும் அவரது அடியில் ஒடுங்கிய காட்சியினைக் காட்டிடும் அற்புதத் திருவுருவம் இது. இவரை, பிரதோஷ நாளில் மட்டுமே தரிசிக்கலாம்!