ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பூரித்து நெகிழ்ந்த வாசகிகள்!

பூரித்து நெகிழ்ந்த வாசகிகள்!

பூரித்து நெகிழ்ந்த வாசகிகள்!

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை சென்னை வடபழநி முருகன் கோயிலில், கடந்த 11.10.11 அன்று நடந்தது. சக்தி விகடனின் 71-வது திருவிளக்கு பூஜை இது! புரட்டாசி- பௌர்ணமி நாளில், விளக்கு பூஜை நடைபெற்றதை நினைத்து, பூரித்துப் போனார்கள் வாசகிகள்.

''மகனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்'' என்பது வாசகி லலிதா ராஜகோபாலின் பிரார்த்தனை.

##~##
''தெலுங்கு மட்டுமே தெரிஞ்ச நான், சக்தி விகடன் பற்றி கேள்விப்பட்டு, தமிழ் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். இப்ப, தொடர்ந்து சக்தி விகடன் படிச்சுக்கிட்டு வரேன். இந்த விளக்கு பூஜை பத்தி படிக்கும்போதெல்லாம், நாமளும் கலந்துக்கணும்னு ஆசைப்பட்டேன். அது இப்ப நிறைவேறிருச்சு'' என்று அழகு தமிழில் பேசுகிறார் வாசகி

ருக்மிணி. ''சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல நிறைய முறை கலந்துக்கிட்டிருக்கேன். என் பிரார்த்த னைகள் எல்லாமே, இந்த பூஜையின் மூலமா நிறைவேறியிருக்கு. அந்த சந்தோஷத்தோடயும் பூரிப்போடயும் இப்ப கலந்துக்கறேன்'' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார், லட்சுமி ஸ்ரீநிவாசன்.

எல்லோருக்கும் இந்தப் பூரிப்பு கிடைக்கவேண்டும் என்பதே இந்த விளக்கு பூஜையின் நோக்கம்! நல்ல காரணங்கள் எப்போதுமே நல்லவிதமாகவே நடந்தேறும் அல்லவா?!

- பொ.ச.கீதன்
படங்கள்: ப.சரவணகுமார்