பிரீமியம் ஸ்டோரி

‘வேலுண்டு வினையில்லை’ என்று நம் முன்னோர்கள் சாதரணமாகச் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. முருகப்பெருமானின் கையில் உள்ள வேல், வினைகளை களைந்து வேரறுக்க வல்லது என்று அனுபவித்தே சூளுரைத்திருக்கிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த வேலின் மகிமைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக வேல்மாறல் பாராயணம் -  பூஜையை குறிப்பிட்ட கால இடைவேளையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நம் சக்தி விகடனின் சார்பில் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம்.

அவ்வாறே, கடந்த 31.1.16 ஞாயிற்றுக் கிழமையன்று கோவிந்தச்சேரி கிராமம் ஞானமலையில் அமைந்துள்ள ‘ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் சக்தி விகடனின் சார்பில் ‘வேல்மாறல் பாராயணம் பூஜை’ சிறப்பாக நடத்தப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஞானமலை ஞானச்ரமம் அறக்கட்டளை அமைப்பினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

வேலை வணங்குவதே வேலை!

“வேல் தீர்க்க முடியாத வினைகள் இவ்வுலகில் உண்டா? வேல்மாறல் என்னும் மஹாமந்திரத்தை உலகறியச் செய்ய வேண்டும். இங்கு, ‘வேலவனே.. வேலாகவும், வேலே.. வேலவனாகவும் இருப்பதே நிதர்சனம். இங்கு வந்துள்ள பக்தர்களின் வினைகளைக் களைந்து, வேலவன் நம்மைக் காப்பான் என்று கூறியவாறு, வேல்மாறல் பாராயணத் தின் மகிமையை முழுவதுமாக விளக்கி, பாராயண பூஜையை வலையப் பேட்டை ரா.கிருஷ்ணன் தொடங்க, பக்தர்கள் அனைவரும் மனமுருகி பாராயணம் செய்தனர்.

இறுதியாக, வேல்மாறல் பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டு, சாமி படங்களும் கொடுத்து வழியனுப்பப்பட்டது.

வேலை வணங்குவதே வேலை!

பூஜையில் சக்தி விகடன் வாசகர்களோடு பெங்களூர் அல்சூர் திருப்புகழ்த் தேவாரம் பாராயண சபை, சுவாமி குஹானந்தா திருப்புகழ்சபை, சேலம் வல்லக்கோட்டை முருகனடியார் திருப்புகழ் சபை, சென்னை குமரன்குன்றம் திருப்புகழ் மன்றம், திருமயிலை சிங்காரவேலர்திருப்புகழ் சபை, அருள்நெறி அவை,முருகன் திருப்புகழ் சபை, திருப்புகழ்ச் சங்கமம், வைஷ்ணவி நகர் மாதர் திருப்புகழ் சபை, வள்ளிசேர்பார்க்கம் திருப்புகழ் சபை, ஆரணி திருப்புகழ் பக்த கான சபை, ஞானமலை பஜனைக்குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த வர்களும் கலந்துகொண்டது, விழாவை மேலும் சிறப்பித்தது. அனைவரும் முருகப்பெருமானை முழு மனதாக வேண்டியவாறு விடைபெற்றனர்.

- ரா.வளன்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு