Published:Updated:

ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’
ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

பிரீமியம் ஸ்டோரி

குடந்தையில் மகாமக நாயகன் ஆதிகும்பேஸ்வரர். இவருக்கு மட்டுமே திருப்பெயரில் ‘ஆதி’ என்ற சிறப்பும் சேர்ந்திருக்கும். அந்தச் சிறப்புக்கான காரணம் குறித்து, ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் கே.என்.சிவசங்கர சிவாச்சார்யரிடம் கேட்டோம். இவர் திருச்சி அல்லூர் பாடசாலையில் ஆகம பாடங்கள் பயின்று சிவாகம சிரோமணி பட்டமும், சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் சாஹித்ய சிரோ மணி பட்டமும் பெற்றவர்.

ஆதிகும்பேஸ்வரரின் திருப்பெயர் மகிமை குறித்துக் கேட்டதும், சிலிர்ப்புடன் விவரித்தார்.

‘‘சொல்லிக்கொடுக்க ஒருவர் இருந்தால்தான் ஒன்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும், குருவிடமிருந்துதான் கற்க வேண்டும் என்பதும் உலக நியதி. இந்தத் தலத்தில் கும்பம் தரை தட்டியபின், ஈஸ்வரனால் புதிய உலகம் உருவானது. பிரளயத்துக்குப் பின் உலகம் அப்படி உருவானதும் சிவபூஜை செய்வது எப்படி என்று எவருக்கும் தெரியாத நிலை. ஆக, முதல் குருவாக இருந்து, கும்பத்துக்குள் இருந்து சிதறிய எஞ்சிய அமிர்தத்தையும், உடைந்த கும்பத்தையும் புதிய கும்பத்தில் இட்டு, லிங்கம் பிரதிஷ்டை செய்து ஈஸ்வரன் தன்னைத் தானே பூஜை செய்துகொள்கிறார். பிரளயம் தோன்றியபோது, அதாவது ஊழிக்காலத்தில் முதலில் தோன்றியவராதலால், ஈசனை ‘ஊழி முதல்வர்' என்பர். அதற்கு இன்னொரு பொருள் ஆதி (துவக்கம்). ஆதியாகத் தோன்றிய கும்பேஸ்வரரானதால் ஆதிகும்பேஸ்வரர் எனப்படுகிறார்’’ என்றவர், இத்தலத்தில் மும்மூர்த்திகளின் சாந்நித்தியமும் ஒன்றிணைந்து திகழ்வதையும் விவரித்தார்.

ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

‘‘இந்த ஆலயத்தில் சிவன்,  பீடத்தில் பிரம்மாவாகவும், ஆவுடையில் விஷ்ணுவாகவும் பாணத்தில் ருத்ரனாகவும் காட்சியளிக்கிறார்.  ஆலயத்தின் மூல மூர்த்தி, மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தி என்பதால், பாணத்தின் அடிப்பகுதி  வெள்ளிக்கவசம் அணியப்பட்டு இருக்கும்.  நீர் பட்டால் லிங்கம் கரைந்துவிடும் என்பதால், ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் செய்யப் படுகின்றன. திங்கட்கிழமை, பிரதோஷம் மற்றும் உற்சவ காலங்களில் சுயம்பு மூர்த் திக்கு எட்டுவிதமான நறு மணப் பொருட்களின் கலவை கொண்டு அஷ்டகந்த காப்பு  சார்த்தப்படும்.

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய பணியைச் செய்வதாக நமது தர்மம் சொல்கிறது. ஆனால் இங்கே அவர்கள் தங்கள் பணியை மாற்றிக்கொண்டது போலத் தோன்றும். படைக்கும் தொழில் புரியும் பிரம்மா கும்பத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறார். சத்ருக்களை சம்ஹாரம் செய்ய வேண்டிய ஈசன், ஊழிக்குப் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குகிறார். காத்தல் தொழிலைச் செய்யவேண்டிய மஹாவிஷ்ணுவோ சுதர்சன சக்கரத்தை ஏவி சூரியனின் அகந்தையையும், எதிரிகளையும் அழித்தருள்கிறார். இதன் பொருள்,  அவர்கள் நிலை மாறிவிட்டார்கள் என்பதல்ல; மும்மூர்த்திகள் அனைத்தையும் செய்யக்கூடியவர்கள், அவர்கள் அனைவரும் ஒரே சக்தியின்  வடிவம் என்பதை நாம் உணரவேண்டும் என்பதே! மன்னன் க்ருதவீர்யன், ஸ்ரீராகவேந்திரரின் குருவான ஸ்ரீவிஜயேந் திர மடத்தின் ஸ்ரீஸ்ரீவிஜயேந்திர தீர்த்தர் உள்ளிட்ட இன்னும் பலரும் இங்கு வழிபட்டு, தவம் செய்து, மகான்கள் ஆன குறிப்புகளும் உண்டு!’’ என்றார்.

ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

‘51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றா?’’

‘‘அதைவிட ஒரு படி மேலே என்று சொல்லலாம்.இங்கு அருள்புரியும் மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை அவர்களுக்கெல்லாம்  தாய் போன்றவள்! அவள் சக்தி பீடங்களுக்கெல்லாம் மாத்ரு ஸ்தானமாக விளங்கு கிறாள். மக நட்சத்திரத்தில் சிவ பூஜை நியதியை உருவாக்கிய ஈஸ்வரன், சிவ பூஜையைத் துவக்கிய பிறகு, சிவ தத்துவ மந்திரங்கள் 36000 கோடி, சக்தி தத்துவ மந்திரங்கள் 36,000 கோடி... ஆக மொத்தம் 72,000 கோடி மந்திரங்களால் ஆன ஒரு சக்திபீடத்தை ஸ்தாபித்தார். உத்திர நட்சத்திரத்தில் தேவி பார்வதியை கயிலையில் இருந்து குடந்தைக்கு வரவழைத்து, தேவியை மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகையாக பிரதிஷ்டை செய்த தலம் இது. திருச் செங்கோட்டின் அர்த்தநாரீஸ்வர தத்து வத்தைப் போன்றே இங்கும் சிவசக்தி அம்சமாக மங்களாம்பிகை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது  விசேஷம்.

ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

இந்த 72,000 எண்ணிக்கையைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.  மனித உடலில்  இருப்பது 72,000 நாடி நரம்புகள். அவற்றை  இயக்கக்கூடியவை  மூலாதாரம், ஸ்வா திஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா எனும் ஆறு சக்கரங்களாகும். இந்த அடிப்படையில் 72,000 கோடி மந்திரங்களை 72,000 நாடிகளாக, ஆறு பெயர்களுடனான  சக்கர வடிவத்தில்  சிவசக்தி ரூபினியாக  இங்கு மங்களாம்பிகை அருள்பாலிக்கிறாள்!

ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

சிவனின் சீற்றத்தால் நொறுங்கிய சக்தியின் உடல் 51 பாகங்களாகப் பிரிந்து 51 சக்தி பீடங்களாக (பிற்காலத்தில்  64, 108 என எண்ணிக்கை மாறுபட்டது) ஸ்தாபிக்கப்பட்டன. இதைத்தான் வ்யஷ்டி தத்துவம் என்கிறோம். வ்யஷ்டி என்றால், வடமொழியில் ‘பிரிந்து வந்தது' என்று அர்த்தம். அதாவது, உடலின் சக்திகள் பிரிந்து, தனித்தனியாக நிலைபெற்றது எனப்படுகிறது.  ஆனால், மந்திர பீடேஸ்வரி மங்களாம்பிகையோ இங்கு சமஷ்டி தத்துவமாக, அதாவது ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த சக்தியாக விளங்குகிறாள். ஈஸ்வரனே உருவாக்கியதால், இதனை சக்தி பீடங்களுக்கெல்லாம் மாத்ரு பீடம் (தாய் பீடம்) எங்கின்றனர்’’ என்றவர். இந்த ஆலயத்தின் மகாமக பூஜையின்  சிறப்பு அம்சத்தையும் பகிர்ந்துகொண்டார்.

ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

‘‘மாசிமகம்- மகாமகம் பிரம்மோத்ஸவத்தின் கொடியேற்றத்துக்கு முதல் நாள், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு கும்பம் வேத கோஷத்துடன் புறப்பட்டுச் சென்று, மகாமகக்குளத்தில் இருந்து புனித நீரை நிரப்பி வந்து ஆலயத்தின் யாகசாலையில் ஸ்தாபனம் செய்யப்படுகிறது. தினமும் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள்  செய்யப்பட்டு  நிறைவுநாளான  மாசி-மகாமகத்தன்று ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது. புராணத்தில் நடந்ததாகச் சொல்லப்படுவதை மறுபடியும்  நினைவுக்கு கொண்டு வரும் நிகழ்வாக இன்றைக்கும் இது தொடர்வது சிறப்புக்குரியது!''

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன், படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு