Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

பழநியில் தொடரும் பகல் கொள்ளை!

நாரதர் உலா

பழநியில் தொடரும் பகல் கொள்ளை!

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

‘தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி...’ என்று பாடியபடியே நம் அறைக்குள்

நாரதர் உலா

பிரவேசித்தார் நாரதர்.

‘‘என்ன நாரதரே, பாட்டு பலமாக இருக்கிறதே! கோயில்களில் தேவார பதிகங்களைச் சரியாக ஓதுவதில்லை என்று ஏதேனும் பிரச்னையை முன்வைக்கப்போகிறீரா?’’ என்று கேட்டோம்.
‘‘பதிகங்களை ஓதுவதில் பிரச்னை இல்லை.

பதிகங்களைப் பாடுவதற்காக நியமிக்கப் பட்டுள்ள ஓதுவார்களுக்குத்தான் பிரச்னை!’’

‘‘அடடா! மனம் உருக இறைவனின் சந்நிதி யில் திருமுறை ஓதும் பாக்கியம் பெற்றவர்கள் அல்லவா ஓதுவார்கள்! அவர்களுக்கு யாரால், என்ன பிரச்னை?’’

‘‘ஓதுவார்களுக்கு மட்டுமின்றி வாத்தியக் கலைஞர்களுக்கும் பிரச்னைதான். ஆரம்பக் காலத்தில் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் திருமுறைகளை ஓதும் ஓதுவார்களுக்காகப் பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வந்தன. பிறகு, தமிழக அரசின் இசைக் கல்லூரியில் திருமுறைகளும் பாடமாகச் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மிகவும் குறைவு. தேர்ச்சி பெற்று வரும் சிலருக்கும், ஒரு சில அதிகாரிகளை ‘கவனித்தால்’தான் கோயில்களில் வேலை கிடைக்கும் என்கிற நிலை. இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கும் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அப்படியே மேலதிகாரி களுக்குப் பணம் கொடுத்து வேலையில் சேர்ந் தாலும், அவர்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது’’ என்றார் நாரதர்.

‘‘புரியவில்லையே சுவாமி, திருமுறைகளை ஓதுவதைவிட வேறு பணிகளும் அவர்களுக்குத் தரப்படுகிறதா என்ன?’’

‘‘அறநிலையத் துறையில் 30 சதவிகிதத்துக்கும் மேலாகப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. போதுமான பணியாளர்களை நியமிக்காமல், கடந்த ஆண்டு அறநிலையத்துறை ஓர் உத்தரவு பிறப்பித்ததாம். அதன்படி, ஓதுவார்கள் திருமுறை களை ஓதும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நூலகத்தைப் பார்த்துக் கொள்வதுடன், கோயில் அலுவலகத் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்லவேண்டும். அவர்கள் மட்டுமல்ல... இசைக் கலைஞர்கள், பரிசாரகர்கள் என ஒவ்வொருவருக்குமே அவர்களுக்கான பணியைத் தவிர, கூடுதல் பணிகளைச் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதனால் பலரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்’’ என்றார் நாரதர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா

‘‘இறைவனின் சந்நிதியில் புனித கைங்கர்யம் செய்யும் இவர்களை அந்த இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். அதிருக்கட்டும்... மகாமகத்துக்குச் சென்று வந்தீரா?’’ என்று கேட்டோம்.
‘‘போகாமல் இருப்பேனா? கடைசி மூன்று நாட்களும் அங்குதானே இருந்தேன்!’’

‘‘மகாமகத் திருவிழா நல்லபடியாக நடந்ததா?

பக்தர்களுக்கு அசௌகர்யம் எதுவும் இல்லையே?’’

‘‘ஏன் இல்லாமல்? புறநகர்ப் பகுதியில் இருந்து வரும் பக்தர்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை மகாமகக் குளத்துக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், அதெல்லாம் எங்கே இருந்தன என்பது ஆதிகும்பேஸ்வரருக்கே வெளிச்சம். பல தொல்லைகளுக்கும் துயரங்களுக்கும் ஆளாகித்தான் முதியோர்களும் மாற்றுத் திறனாளிகளும் மகாமகக் குளத்துக்கு வந்தனர் என்ற நாரதர் தொடர்ந்து,

‘‘மகாமகப் பணிகளுக்காக 20,000 காவலர் களுக்கு மேல் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர் களில் பெரும்பாலானவர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்கள். உள்ளூர் வழித்தடங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே அவர்களில் பலரால் பக்தர்களுக்குச் சரியான வழிகளைச் சொல்லத் தெரியவில்லை. இதனால் பக்தர்கள் பெரிதும் குழம்பிப் போனார்கள்’’ என்றார்.

‘‘மகாமகக் திருவிழாவில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டர்களாகப் பணியாற்ற விரும்பி உள்ளூரைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்திருந்தார்களே!  அவர்களை நேரடியாக
பக்தர்களுக்கு உதவ விட்டிருந்தால் சரியான விளக்கங்களைத் தெரிவித்திருப்பார்களே?’’

‘‘உமக்குத் தெரிகிறது. அவர்களை ரெட் கிராஸ் மற்றும் ஸ்கவுட் போன்ற அமைப்பினர்களின்  வரிசையில் சேர்த்து போலீஸாருடன்  இணைந்து பணியாற்ற சொல்லியிருக்கிறார்கள். அங்கே தான் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இன்னொரு சங்கடமும் பக்தர் களுக்கு ஏற்பட்டது. திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பல்வேறு நபர்கள் அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்கள்.

ஆனால், கடைசி வரை இழுத்தடிப்பு செய்த மாவட்ட நிர்வாகம், சுமார் 20 பேர்களுக்கு மட்டுமே ஏகப்பட்ட நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியதாம்! மகாமகத்துக்கு வந்த 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இது எப்படிப் போதும்? இதனால், சில தனியார் ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையை திடீரென ஏகத்துக்கும் உயர்த்தியும், தரமில்லாத உணவு அயிட்டங்களை அவசரக் கோலத்தில் தயாரித்து விற்பனை செய்தும் கொள்ளை லாபம் பார்த்துவிட்டார்கள். அன்னதானம் வழங்க தாராள மனப்பான்மையை கடைப்பிடிக்கத் தயங்கிய அரசு, தானாவது அனைவருக்கும் அன்னதானம் வழங்கி யிருக்கலாம். பாவம், பக்தர்கள்!’’ என்றார் நாரதர்.

நாரதர் உலா

‘‘அப்படியானால், தனியார் யாரும் அன்னதானம் செய்யவில்லையா?’’

‘‘ஒரு சிலர் என்ன நடந்தாலும் சரி, பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து, திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, தலைவாழை இலை போட்டுப் பக்தர்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள். நல்ல உள்ளம் கொண்ட ஒருவர், ஒரு தனியார் உணவகத்தின் மதிய உணவு டோக்கன்களை மொத்தமாக வாங்கி, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினாராம்!’’

‘‘பாராட்டவேண்டிய விஷயம்தான். வேறு ஏதும் விசேஷம் உண்டா நாரதரே?’’

‘‘பங்குனி உத்திரம் நெருங்குகிறதே! அதனால், ஒரு நடை பழநிக்கும் போய் வந்தேன்.’’

‘‘போன பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நீர் போய் வந்து பட்டியலிட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதா?’’

நாரதர் உலா

‘‘அப்படி எதுவும் தெரியவில்லை. தன் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காகத் திருச்சியில் இருந்து வந்திருந்தார் ஒருவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘நான் மலை அடிவாரத்துக்கு வந்ததுமே கடைக்காரர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு, அவர்களின் கடைக்கு முன்புதான் எங்கள் காரை நிறுத்தி விட்டுச் செல்லவேண்டும் என்று மிரட்டினார்கள். காரை நிறுத்தியதும், ஒரு கடைக்காரர் வந்து, பக்கத்தில் இருக்கும் இடத்தில் முடி எடுத்துவிட்டு, தங்கள் கடையின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையைக் குளிப்பாட்டிவிட்டுச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினார். ஒருவழியாகக் குழந்தைக்கு மொட்டை போட்டுக் குளிப்பாட்டியதுமே, அந்தக் கடைக்காரர் எங்களிடம் மீண்டும் வந்து, பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வது நல்லது என்று சொல்லி, ஒரு அவுன்ஸ் பாலில் இரண்டு லிட்டர் தண்ணீர் கலந்து, கூடவே அர்ச்சனைத் தட்டையும் கொடுத்தார். மொத்தம் 350 ரூபாய் என்று சொன்னவர், கோயிலுக்குப் போய்விட்டு வந்து கொடுத்தால் போதும் என்றார். அதைத் தொடர்ந்து, நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்து வைக்கிறோம் என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தை நம்மிடம் பிடுங்கிக் கொண்டார்கள் சிலர்.

பின்னர் அர்ச்சகர் ஒருவரை அழைத்து, அவரிடம் எங்களை விட்டுவிட்டார்கள். அவரும் பின்வாசல் வழியாக எங்களைச் சந்நிதிக்கு அழைத்துச் சென்று, தரிசனம் செய்ய வைத்தார். தரிசனம் முடிந்து, காரை நிறுத்திய இடத்துக்கு வந்து, கடைக்காரரிடம் 350 ரூபாய் கொடுத்தபோது, அங்கே கடைக்காரருடன் ரௌடிகள்போல் இருந்த சிலரில் ஒருவன் ஒரு துண்டுச் சீட்டில் எதோ கணக்குப் போட்டு, மொத்தம் 3,600 ரூபாய் ஆகிறது என்றான்.

நாரதர் உலா

கேட்டதற்கு, சாமிகிட்ட உட்கார்ந்து அர்ச்சனை செய்ததுக்குத்தான் இந்தப் பணம். இதுல எங்களுக்கு நூறோ, இருநூறோதான் கிடைக்கும். மிச்சமெல்லாம் மேலே இருக்கற அர்ச்சகர்களுக்கும் அதிகாரிகளுக்கும்தான் என்று சொல்லி, வம்படியாகப் பணத்தைப் பறித்துக்கொண்டார்கள்’ என்று புலம்பித் தீர்த்துவிட்டார் அந்த பக்தர்’’ என்று நாரதர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அவரின் செல்போன் ‘கிணுங்’ என்று ஒலிக்க, ‘‘அவசரமாக வடபழநி வரை செல்லவேண்டி இருக்கிறது. அப்புறம் பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டு, நம்முடைய பதிலை எதிர்பார்க்காமல் சிட்டாகப் பறந்துவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism