ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கிராமங்கள்தோறும் சாஸ்தாவுக்கு கோயில்!

கிராமங்கள்தோறும் சாஸ்தாவுக்கு கோயில்!

கிராமங்கள்தோறும் சாஸ்தாவுக்கு கோயில்!
##~##
கி
ருத யுகத்தின்போதே, சாஸ்தா வழிபாடு என்பது தமிழகத்தில், குறிப் பாக திருநெல்வேலி ஜில்லாவில் இருந்த தற்கான ஆதாரங்களை இலக்கிய நூல்கள் எடுத்துரைக்கின்றன. ஐயனார், சாத்தன், ஐயப்பன், அரிஹரபுத்திரன் எனப் பல பெயர்கள் உள்ளன சாஸ்தா வுக்கு என்கின்றன ஆய்வு நூல்கள்.  

கிராமங்களில், ஊருக்கு வெளியே உள்ள வனாந்திரங்களில், கண்மாய்க் கரைகளில் சாஸ்தாவுக்கு கோயில் கட்டி வழிபடத் துவங்கினர், மக்கள். ஊர் எல்லையில் இருந்தபடி, தீய சக்திகள் ஊருக்குள் வராமல் தடுத்து விரட்டுவார் சாஸ்தா என்றும், விளைநிலங்களைப் பாதுகாத்து, அமோக விளைச்சலைத் தருவார் என்றும் மக்கள் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர். தவிர, நாட்டார் தெய்வங்கள் என அழைக் கப்படும் கிராம தெய்வங்களின் வரிசை யில், முதன்மையாகத் திகழ்பவரும் சாஸ்தாவே! பௌத்தர்கள்கூட, இவருக்கு 'பிரம்ம யட்சனர்’ எனும் பெயர் சூட்டி, பரிவார தெய்வமாக வழிபடுகின்றனர்.  சாஸ்தாவுக்கு, பங்குனி உத்திர திருநாள் விசேஷம். அன்று நெல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், சாஸ்தாவுக்கு விழா களைகட்டும். இதனை 'கொடை விழா’ என்கின்றனர். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் வசிக்கிற திருநெல் வேலிக்காரர்கள், அன்று குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்துகொண்டு, தரிசித்துச் செல்வார்கள்.

கிராமங்கள்தோறும் சாஸ்தாவுக்கு கோயில்!

பொதுவாக, சாஸ்தாவுக்கு பச்சைக் காய்கறிகளும் பழங்களும் முக்கியப் படையலாக இருக்குமாம். அதேபோல், ஆடு, மாடு மற்றும் கோழிகளை சாஸ்தாவுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தும் வழக்கமும் உண்டு. சாஸ்தா கோயில்கள் சிலவற்றில் மட்டுமே பலியிடுகிற வழக்கம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அப்படி பலியிடுதல் முடிந்ததும், அந்த இறைச்சியைக் கொடிபோல் கட்டி, வண்டியில் ஊர்வலமாக எடுத்து வந்து, பிறகு நன்றாகக் காயவைத்து சமைத்துச் சாப்பிடுகிற வழக்கமும் உண்டாம். இதனை, 'கொடியிறைச்சி’ என்றும், இந்த வழிபாட்டை, 'சாஸ்தா பரிதி’ என்றும் சொல்கின்றனர்.

ஆலயங்களில், மூலவர் கல் விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தருவார். ஆனால், சாஸ்தா முதலான கிராம தெய்வங்கள், களிமண்ணால் செய்யப்பட்டு, சூளையில் வைத்துச் சுட்டு, உருவாக்கப்படுகின்றன.

தஞ்சையின் சோழ நாகரிகம், மதுரையின் பாண்டிய நாகரிகம் மற்றும் கேரளாவின் திருவிதாங்கூர் நாகரிகம் எனப் பல வழிபாட்டு முறைக ளைத் தனது பாரம்பரியத்துடன் கொண்டுள்ள நெல்லை சீமையின் கிராமங்களில், சாஸ்தா வழிபாடு செய்தால், சங்கடங்கள் யாவும் தீரும் என்பது பிரசித்திம்!

- சீ.சுசித்ரா
படங்கள்: எல்.ராஜேந்திரன்