Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

நாரதர் உலா

நாரதர் உலா

நாரதர் உலா

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சியில் உள்ள கோதண்டராமர்

நாரதர் உலா

கோயிலுக்குச் சென்று வந்ததைப் பற்றி ஆசிரியர் இலாகா பேசிக்கொண்டு இருந்த நேரம் பார்த்து, அறைக்குள் பிரசன்னமானார் நாரதர்.

‘‘சென்றமுறை வந்தபோது வடபழநி வேங்கீஸ்வரர் கோயில் நிர்வாகத்தில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாகச் சொன்னீர்களே, அதுபற்றி விசாரித்தீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘அதுகூட செஞ்சி கோதண்டராமர் கோயிலைப் போலவே கோயில் சொத்துக்கள் பற்றிய பிரச்னைதான். 2.2.16 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் வேங்கீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர் நீக்கம் தொடர்பான செய்தியைப் பார்த்ததுமே பாரம்பர்ய கலாசார மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த சாஜாகுணா என்பவர் நம்மைத் தொடர்புகொண்டார்.

நாம் அவரை நேரில் சந்தித்தபோது, ‘வேங்கீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 27 ஏக்கர் நிலமும், 100 அடி சாலையை ஒட்டி சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ஒரு தெப்பக்குளமும் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தெப்பக்குளத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இப்போது தெப்பக்குளமே காணாமல் போய்விட்டது. தெப்பக்குளம் இருந்த இடத்தில் இப்போது வணிக வளாகங்களும் உணவு விடுதிகளும் வந்துவிட்டன.

நாரதர் உலா

தெப்பக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டபோதே பக்தர்கள் தெப்பக்குளத்தை மீட்க பல போராட்டங்களை நடத்திப் பார்த்துவிட்டார்கள். இதுபற்றி ஜூனியர் விகடன் 17.4.13 இதழில் குளத்தைக் காணோம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

இத்தனைக்கும் கோயில் சொத்துக்களை விற்கும் உரிமை பரம்பரை அறங்காவலர்களுக்கோ, அறநிலையத் துறைக்கோ கிடையாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. அப்படி இருந்தும் சட்டத்துக்குப் புறம்பாக கட்டடங்களைக் கட்டியதுடன், மின் இணைப்பும் குடிநீர் இணைப்பும் கொடுத்துள்ளனர்’ என்று நம்மிடம் உரிய ஆவணங்களைக் காட்டி கூறினார்'' என்றார் நாரதர்.

அவரிடம் நாம், ‘‘இப்போதுதான் பரம்பரை அறங்காவலரை நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்களே’’ என்று கேட்டோம்.

‘‘பரம்பரை அறங்காவலரை நீக்கியது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த இடத்தில் நீக்கப்பட்டவரின் மனைவியையே நியமித்து இருப்பதுதான் இப்போது சர்ச்சையாகி விட்டது’’
‘‘இந்தக் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அல்லவா? இந்தக் கோயிலுக்கு தனிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும்? இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் பேசினீர்களா?''

‘‘நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, ‘எல்லாமே சட்டப்படித்தான் நடக்கிறது' என்றுதான் சொல்கிறார்கள். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மேற்கொண்டு விவரங்களைக் கேட்டு சொல்கிறேன்’’ என்று நாரதர் சொல்லிக் கொண்டு இருந்தபோது, அவருடைய வாட்ஸப்பில் ஏதோ தகவல் வந்தது. அதைப் படித்த நாரதர் நம்மிடம், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை, அதற்கென்று உள்ள மடப்பள்ளியில் தயாரிக்காமல், அன்னதானக் கூடத்திலேயே தயாரிக் கிறார்களாம்’’ என்றார்.

‘‘ஏனாம்?’’

நாரதர் உலா

‘‘கோயிலில் சில திருப் பணிகளுடன் மடப்பள்ளி பராமரிப்புப் பணியும் நடந்து வருகிறதாம். சுவாமிக்கு நைவேத்தியம் தயாரிக்க தனியாக இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்.

ஆனால், அப்படிச் செய்யாமல் அன்னதான கூடத்திலேயே சுவாமிக்கு பிரசாதம் தயாரிக்குமாறு நிர்வாகம் வற்புறுத்தி உள்ளது’’ என்ற நாரதரிடம்,

‘‘அன்னதான கூடத்தில் பிரசாதம் தயாரிப்பதில் ஏதும் ஆகம விதிகள் மீறப்படுகிறதா என்ன?’’ என்று ஒன்றும் தெரியாதவர்போல் கேட்டோம்.

‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? அன்ன தான கூடத்தில் பொதுமக்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகளில் பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. சாஸ்திரப்படி இந்த இடத்தில் பிரசாதம் தயாரிக்கக்கூடாது. இதுபற்றி அர்ச்சகர்கள் எடுத்துச் சொல்லியும் கோயில் நிர்வாகம் கேட்க வில்லையாம்.

அதுமட்டுமல்ல, கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும்போது எந்த திருவிழாவும் நடத்தக்கூடாது. ஆனால், இப்போது பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

நாரதர் உலா

‘‘இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் பேசினீர் களா?’’ என்று கேட்டோம்.

‘‘கோயிலின் இணை ஆணையர் காவேரியிடம் பேசினோம். அவர், ‘கோயில் மடப்பள்ளியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால்தான் வேறு வழி இல்லாமல் அன்னதான கூடத்தில் நைவேத்திய பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. அங்கும் கூட சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு தான் பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மடப்பள்ளி பராமரிப்புப் பணிகள் முடிந்துவிடும். பிறகு அங்கேயே பிரசாதங்கள் தயாரிக்கப்படும்' என்றார். மேலும் அவர் பங்குனி உத்திர திருவிழா குறித்தும் கூறினார்.

நாரதர் உலா

‘‘கோயிலில் முழு அளவு திருப்பணிகள் நடை பெறவில்லை. கோபுரங்களுக்கு மட்டும்தான் திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறு வதில் ஆகம விதிகள் மீறப்படுகிறது என்று சொல்வதற்கு இல்லை’ என்று கூறினார்’’ என்று நாரதர் சொல்லி முடிக்கவும், அவருடைய மொபைல் ஒலித்தது.

எடுத்துப் பேசியவர் விவரம் எதுவும் சொல்லாமலே அந்தர்தியானம் ஆனார்.