Published:Updated:

தேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்!
தேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்!

தேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்!

பிரீமியம் ஸ்டோரி

மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெறவும் சக்தி விகடன் சார்பில் கடந்த சில வருடங்களாக ஹயக்ரீவ ஹோமம் நடை பெறுவது நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் இந்த வருடம், கடந்த 28.2.16 ஞாயிறு அன்று, கோவை- பெரிய தடாகம் பகுதியில், அனுவாவி சுப்ரமணியர் மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் (ஸ்ரீலலிதாம்பிகை பீடம்), லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் ஸ்ரீசரஸ்வதி ஹோமம் சிறப்புற நடைபெற்றது.

தேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்!

சக்தி விகடனும் ஸ்ரீ லலிதாம்பிகை பீடமும் இணைந்து நடத்திய இந்த பூஜைக்கு  கோவை மட்டுமின்றி திருப்பூர், நாமக்கல், பொள்ளாச்சி முதலான வெளியூர்களில் இருந்தும் வாசகர்கள் திரளாக வந்திருந்தனர். பூஜ்யஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள் தலைமையில் காலை 9 மணி அளவில் துவங்கிய பாராயணம் மற்றும் ஹோமத்தை, ஸ்ரீலலிதாம்பிகை கோயிலின் சிவாசார்யர்கள்  மிகச் சிறப்பாக நடத்தித் தந்தனர். முன்னதாக “பிரபஞ்சத்தின் தாயான அம்பிகையை வழிபடுவதற்குப் பல வழிகள் இருந்தாலும், அவளுக்கு பிரியமான பெயர்களால் அவளை அழைத்து வழிபடுவது விசேஷம். அந்த வகையில் லலிதா சகஸ்ரநாம பாரயணம் உன்னதமான பலன்களைப் பெற்றுத் தரும்” எனத் துவங்கி பூஜையின் மகிமையை விவரித்தார் பூஜ்யஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள். வர்மக்கலை ஆராய்ச்சியாளரும் மருத்துவ ஆலோசகருமான இரா.பாசுக்கண்ணா, பூஜைக்கு வந்திருந்த மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன், அவர் சார்பில் பேனா, பென்சில் முதலானவை ஹோமத்தில் வைத்து சங்கல்பம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஸ்ரீலலிதாம்பிகை பீடம் சார்பில் `கல்விச் செல்வம்' புத்தகம், பேனா, ஸ்ரீலலிதாம்பிகை அம்மன் படம், பிரசாதப் பை ஆகியவை வழங்கப்பட்டன. நிறைவாக மதிய உணவும் பரிமாறப்பட்டது.

தேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்!
தேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்!

நிறைவாக, ஸ்ரீலலிதாம்பிகையின் அருளால் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற பூஜ்யஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள் வாழ்த்துக்களும் ஆசிகளும் கூறி வழியனுப்ப நிறைவும் மகிழ்வுமாக விடைபெற்றார்கள் மாணவர்களும் வாசகர்களும்.

- ரா.வளன், படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு