பிரீமியம் ஸ்டோரி

வாரியார் சுவாமிகளின் அபிமானியா நீங்கள்!

உங்களுக்காக  ஒரு கூகுள் ஆப் (App)!

வலைத்’தலம்’!
வலைத்’தலம்’!

ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் நாம் இல்லை என்ற காலம் வந்துவிட்டது. இந்த ஸ்மார்ட்ஃபோனால் பல கெட்ட விஷயங்களை இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்கிறார்கள், நேரத்தை மிச்சப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், தற்போது அதுவே நேரத்தை வீணடிக்கிறது. ஆனாலும் நம்மால் யூகிக்க முடியாத பல நல்ல விஷயங்களையும் இந்த ஸ்மார்ட்ஃபோன் அளித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒன்றுதான் ‘சுவாமி கிருபானந்த வாரியார்’ ஆப்ஸ். உங்களது போனில் ‘கூகுள் ஸ்டோர்’ சென்று அதில் Swami Kirubananda Variyar என டைப் செய்து, டவுன்லோடு செய்துகொள்ளலாம்!

வலைத்’தலம்’!

வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள், அவர் கூறிய ஆன்மிகக் கதைகள், அவரைப் பற்றிய சிறு குறிப்பு, அவரது பொன்மொழிகள் என அனைத்து விஷயங்களையும் தருகிறது இந்த ஆப்ஸ்!

வலைத்’தலம்’!

மகா சிவராத்திரியன்று மதுரை மும்மூர்த்தி கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையை நமது சக்தி விகடன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தோம். அந்த அபிஷேக வீடியோவை இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். சுமார் ஏழாயிரம் பேர் பகிர்ந்திருக்கிறார்கள். அந்த வீடியோவை நீங்களும் கண்டு மகிழ, மேலே கொடுக்கப்பட்டுள்ள QR code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!
வாசகர்களே! ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான - பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்!  மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு