Election bannerElection banner
Published:Updated:

புதுமண்டப வியாபாரிகள் வழக்கு..! இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுமண்டப வியாபாரிகள் வழக்கு..! இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுமண்டப வியாபாரிகள் வழக்கு..! இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுமண்டப வியாபாரிகள் வழக்கு..! இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிப்ரவரி 2 ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயிலில் வைக்கப்பட்ட கடைகள் மற்றும் புதுமண்டபம் என்று அழைக்கப்படும் வசந்த மண்டபத்தை காலி செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.  இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் தையல் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முத்துப்பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

புதுமண்டபத்தில் கடை அமைத்திருந்த எங்களுக்கு குன்னத்தூர் சத்திரம் பகுதியில் வணிக வளாகம் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். இதனை நாங்களும் ஏற்ற நிலையில், குன்னத்தூர் சத்திர கட்டுமான பணிகள் தொடங்கின. ஆனால் இன்று வரை பணிகள் நிறைவடையவில்லை. இதனால் புதுமண்டபத்திலேயே கடைகளைத் தொடர 2007 அரசாணைப்படி குத்தகை நீட்டிப்பு வழங்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து சேதமடைந்தன. அதோடு வீரவசந்தராயர் மண்டபமும் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, கோவிலுக்கு வெளிப்புறத்தில் உள்ள கடைகளையும் ஒரு வாரத்திற்கு பிறகு திறக்கலாம் என்ற உறுதியுடன் மூட மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் உத்தரவிட்டார்.

அதனை ஏற்று நாங்களும் கடைகளை மூடி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைத்தோம். இந்நிலையில், புதுமண்டபத்திலுள்ள கடைகளை முழுவதுமாக அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக எங்களுக்கு எவ்வித நோட்டீஸோ, அறிவிப்போ வழங்கப்படவில்லை. இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. ஆகவே, புதுமண்டப்பத்திலுள்ள கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும். மேலும், மாற்றிடம் வழங்கும் வரை கடைகளை காலி செய்யவோ, வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும். மீனாட்சியம்மன் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு