திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

அருள் பெற அழைக்கிறோம்!

அருள் பெற அழைக்கிறோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அருள் பெற அழைக்கிறோம்!

அருள் பெற அழைக்கிறோம்!

அருள் பெற அழைக்கிறோம்!

• ஏப்ரல் 10–ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கிய  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 21-ம் தேதி வரை நடக்கிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 17–ம் தேதியும், திருக்கல்யாணம் 19–ம் தேதியும், தேரோட்டம் 20–ம் தேதியும்  நடைபெற இருக்கிறது.

கள்ளழகர் கோயில் திருவிழாவும் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  சிறப்பாக நடைபெற்று வருகிறது.
 
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நிறைவடைந்த மறுநாள் கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பாடாகிறார். 20-ம் தேதி மாலையில்  தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பாடாகி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, சுந்தரராஜன்பட்டி, கண்ணனேந்தல் வழியாக மதுரை எல்லையான மூன்றுமாவடிக்கு 21-ம் தேதி காலை எழுந்தருள்வார். 21-ம் தேதி தல்லாகுளம் பிரசன்னவேங்கடாசலபதி திருக்கோயிலில் எழுந்தருள்வார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 22-ம் தேதி நடைபெறுகிறது.

• திருத்தணி முருகன் கோயிலில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அருள்பாலிக்கும் முருகப் பெருமான் 18-ம் தேதி இரவு 7 மணிக்கு தங்கத் தேரில் அருள்பாலிக்கிறார்.

19-ம் தேதி இரவு தெய்வானையுடன் திருக்கல்யாணமும் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழாவும் இரவு 8 மணிக்கு சண்முக சுவாமி உற்சவமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 21-ம் தேதி காலை 5 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

• கும்பகோணம் ராமசுவாமி கோயிலில்  ஸ்ரீராமநவமி விழா ஏப்ரல் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும்15-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

• காஞ்சிபுரம் மாவட்டம் பெரியவெளிக்காட்டில் அருள்புரியும் வெக்காளி அம்மனுக்கு வரும் 21-ம் தேதி சித்ரா பௌர்ணமி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று பகல் 12 மணியளவில் பால்குட ஊர்வலம், அம்மனுக்கு பாலபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற இருக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் திருவிளக்கு பூஜை, அம்மன் ஊஞ்சல் தர்பார் போன்ற வைபவங்களும் நடைபெற உள்ளன.