திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

மாலை மாற்றுப் பதிகம்!

மாலை மாற்றுப் பதிகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாலை மாற்றுப் பதிகம்!

மாலை மாற்றுப் பதிகம்!

மாலை மாற்றுப் பதிகம்!

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா


சீ
ர்காழி சிவக்கொழுந்தாம் திருஞானசம்பந்தரின் பதிகங் களில் குறிப்பிட்டத்தக்க இந்தப் பாடல், சீர்காழி தலத்துக்கானது.

மாலை மாற்றுப் பதிகம்!

‘‘பிரிந்து செல்லும் உயிரைக் கொண்ட நாங்கள் என்றென்றும் நிலைத்திருப்போம் என்று சொல்வது ஏற்புடையதாகுமா? எப்போதும் நிலைத்திருப்பவன் இறைவன் என்பதே பொருத்தமானது. பெரிய யாழ் எனும் இசைக்கருவியை ஏந்தியிருப்பவனே, மன்மதனைப் போன்ற அழகுடையவனே, நாகாபரணம் அணிந்தவனே, எவரும் பார்க்க முடியாதபடி மன்மதனை அருவமாகச் செய்தவனே, சீர்காழியின் தலைவனே, மாயைகள் புரிவதில் வல்லவனே, மும்மலங்களும் எங்களை மயக்காதவாறு, எங்களைக் காத்தருள்வாயாக’’ என்று சீர்காழி இறைவனைப் பிரார்த்திக்கும் இந்தப் பதிகத்தைப் பாடி வழிபட்டால், உள்ளத்தில் அறியாமை நீங்கும்; இல்லத்தில் இல்லாமை நீங்கும்.

இது, மாலை மாற்றுப் பதிகம். ‘மாலை மாற்றுப் பதிகம்’ என்றால்... ஒரு பாடலின் இறுதியை முதலாகக் கொண்டு வாசித்தாலும் அதே பாடல் வரிகள் அப்படியே இடம்பெறும். அதாவது, விகடகவி என்பதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் எப்படி வாசித்தாலும் ஒரே வார்த்தை வருகிறதல்லவா, அதுபோல! இந்தப் பாடலையும் அப்படியே வாசித்துப் பாருங்கள், அதன் சிறப்பு புரியும். மற்றுமொரு விசேஷம், இது தமிழில் அருளப்பெற்ற மாலைமாற்றுப் பதிகப் பாடல்களில் முதலாவது!

- திருப்புகழ் எஸ்.ஏ.நாராயணன்