திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

பாரதப் போர் வியூகங்கள்!

பாரதப் போர் வியூகங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாரதப் போர் வியூகங்கள்!

பாரதப் போர் வியூகங்கள்!

உஷத் காலம்

அதிகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறான். அதனால் அதிகாலையை உஷத் காலம் என்கிறார்கள். இந்த நேரத்தில் உஷஸின் செழிப்பான கிரணங்கள் பூமியை நோக்கிப் பாய்வதால் நீர்நிலைகளில் உள்ள நீர் வெது வெதுப்பாக இருக்கும். எனவே, உஷத் காலத்தில் நீராடினால் உடல்நலம் சீராகும், பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

நாகலிங்கப்பூ

இயற்கையிலேயே நாகலிங்கத்தைப் போல மலரும் பூக்களைக் கொண்ட மரம் உள்ளது. இந்த அற்புத மரத்தை நாகலிங்க மரம் என அழைக்கின்றனர். நெடிதுயர்ந்து வளரும் மரங்களில் நாகலிங்க மரமும் ஒன்றாகும். இப்பூவில் ஐந்து பெரிய இதழ்கள் அகன்ற கிண்ணம்போல் இருக்க, நடுவில் பெரிய வட்டமான தட்டு போன்ற அமைப்பு உள்ளது.

பாரதப் போர் வியூகங்கள்!

அதன் நடுவிலுள்ள விதை கிரீடம் தரித்த சுயம்புலிங்கம் போல் காட்சியளிக்கிறது. தட்டு போன்ற அமைப்பின் ஒருபுறமாக உள்ள மகரந்த இதழ்கள் திரண்டு கேள்விக் குறிபோல் வளைந்து நாக படம்போல வளைத்து லிங்கத்துக்குக் குடையாக அமைந்துள்ளது. இது பலநூறு தலைகளுடன் கூடிய பாம்பு குடைபிடிப்பது போல் உள்ளது. இந்தப்பூ இளம்சிவப்பு, பொன்மஞ்சள், வெண்மை, பசுமை கலந்த சிவப்பு எனப் பல வண்ணங்களின் கலவையாக, மென்மையாக கண்ணைக் கவரும் வடிவில் உள்ளது. சிலர் இப்பூக்களை ஆசனத்தில் வைத்து சிவலிங்கமாகவே பூசிக்கின்றனர். இதனைப் புஷ்பலிங்கம் என்றும் அழைக்கின்றனர்.

பாரதப் போர் வியூகங்கள்!

மகாபாரதப் போரில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. அவை: கிரவுஞ்ச வியூகம், கருட வியூகம், மகர வியூகம், சியேன வியூகம், மண்டல வியூகம், வஜ்ர வியூகம், அர்த்தசாஸ்திர வியூகம், பத்ம வியூகம், சக்ர வியூகம், சகட வியூகம், அர்த்தசந்திர வியூகம்.

பாரதப் போர் வியூகங்கள்!

கீதையின் வகைகள்...

குருக்ஷேத்திரப் போர்க் களத்தில் அர்ஜுனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் போதித்தது பகவத் கீதை. இதுபோல் இன்னும் பல கீதைகள் உண்டு. அவற்றுள் சில:

பிக்ஷு கீதை: முதலில் தோன்றிய கீதை இது. பிறவிப் பெருங்கடலை நீந்த, வழிகாட்டும் விளக்கம் பிக்ஷு கீதை.

ராம கீதை: சித்திரகூடத்தில் தம்பி பரதனுக்கு ராமன் அருளிய தத்துவ உபதேசம் ராம கீதை.

சிவ கீதை: சிவபெருமானின் பெருமைகள் மற்றும் பாசுபத விரதம் குறித்து ராமனுக்கு அகஸ்தியர் அளித்த போதனைகளே சிவ கீதை.

குரு கீதை: ஸ்காந்த புராணத்தில், குரு தத்துவ இலக்கணமாக அமைந்து விளக்குவது குரு கீதை.

கணபதி கீதை: முத்கல புராணத்தில் விநாயகர் உபதேசித்த சத்திய தத்துவமே கணபதி கீதை.

தேவி கீதை: தன்னை மகளாக அடைய விரும்பிய பர்வத ராஜனுக்கு பராசக்தி அருளிய உபதேசமே தேவி கீதை.

ஹம்ஸ கீதை:  ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோராவது ஸ்காந்தத்தில் பார்த்தசாரதியான கண்ணன், உத்தவருக்கு உபதேசித்த தத்துவங்களே ஹம்ஸ கீதை.

 - கே.கிரிஷ், நெல்லை