திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

அமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்!

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்!

அமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்!

விஞ்ஞானம், மருத்துவம், வர்த்தகம், இணைய தொழில்நுட்பம் முதலான துறைகளில் மட்டுமல்ல... அமெரிக்காவில், ஆன்மிகத்திலும் கொடிநாட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள். விரதங்கள், வழிபாடுகள், விழா வைபவங்கள் என எதையும் அவர்கள் இழக்கவில்லை. அமெரிக்க மண்ணில் பல மாகாணங்களில் வானுயர்ந்து நிற்கும் ஆலயங்களே அதற்கு சாட்சி! நம் ஆன்மிகத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் அந்த ஆலயங்களில் சிலவற்றை நாமும் தரிசிப்போமா?!

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

பாலாஜி மந்திர்

நியூஜெர்சி மாகாணத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீவேங்க டேஸ்வரா திருக்கோயிலின் கோபுரங்கள், புராணங்களை விவரிக்கும் அழகிய சுதைச் சிற்பங்களுடன் மிளிர்கின்றன. இக்கோயிலின் மூலவர் திருப்பதி ஏழுமலையானைப் போன்றே திருக்கோலம் காட்டுகிறார். இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், சீமந்தம் ஆகிய வைபவங்கள் சிறப்புடன் நடைபெறுகின்றன.

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

ஆலய முகவரி: ஸ்ரீவேங்க டேஸ்வரா திருக்கோயில் (பாலாஜி மந்திர்) மற்றும் சமூக மையம், 1 - Balaji Temple Drive, Bridgewater,  New Jersey - 08807.

சிவா விஷ்ணு திருக்கோயில்

ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் இந்துக்களின் இறை வழிபாட்டுக்காகவும், சனாதன தர்மத்தின் பயிற்சிக் களமாகவும் அமைவதற்கு ஏதுவாகவும் கோயில் ஒன்றை நிர்மாணிக்க அங்குள்ள பக்தர்கள் முடிவு செய்தனர். முதற்கட்டமாக 1989-ல் பாலாலயம் அமைக்கப்பட்டு, திருப்பணி துவங்கியது.

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!
அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

1996-ல் இந்தத் திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான இந்துக் கோயில்களில் அனைத்து தெய்வங்களும் இடம்பெற்றிருப்பார்கள். அந்த வகையில் இந்தக் கோயிலிலும், லட்சுமி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு, சீதா சமேத ஸ்ரீராமர், லட்சுமணர், ராதா சமேத ஸ்ரீகிருஷ்ணர், உமையவள் சமேத ஸ்ரீசிவபெருமான், விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீகருடர், ஸ்ரீவராஹர், ஸ்ரீஹயக்ரீவர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள். நுழைவாயிலுக்கு எதிர்புறத்தில் ஸ்ரீசாயிபாபா மற்றும் பஞ்சமுக அனுமன் ஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

ஆலய முகவரி: ஸ்ரீசிவா-விஷ்ணு திருக்கோயில், 5509, Lynn Road, Tampa, Florida - 33624.

மியாமி ஸ்ரீசிவா விஷ்ணு திருக்கோயில்

ஃப்ளோரிடா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள மியாமி நகரில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அருகருகில் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. சிவாலயம் சோழர்கள் மற்றும் பல்லவர்கள் கால பாணியிலும், விஷ்ணு ஆலயம் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலைப் பாணியிலும் கட்டப்பட்டுள்ளது சிறப்பம்சம். கோயிலுக்குள் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் சந்நிதி, கேரள பாணியில் அமைந்துள்ளது.

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

முகவரி: ஸ்ரீசிவா விஷ்ணு திருக்கோயில், 5661, Dykes Road, Southwest Ranches, Florida - 33331.

அட்லாண்டா இந்து திருக்கோயில்

ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா அருகில், ரிவர்டேல் எனும் நகரத்தில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். பார்ப்பதற்கு நந்தவனம் போன்று திகழும் சூழலில், இரண்டு ஆலயங்கள் திகழ்கின்றன. ஒன்று ஸ்ரீவேங்கடேஸ்வரருக்கு; மற்றொன்று ஸ்ரீராமலிங்கேஸ்வரருக்கு. பத்மாவதி தாயார், ஆண்டாள் தாயாருடன், ஸ்ரீவேங்கடேஸ்வரர் அருளும் ஆலயத்தில், கருடன், அனுமன், துர்கை, நவகிரகங்கள் ஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.  ஸ்ரீராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீபர்வதவர்த்தினி, ஸ்ரீகணேசர், தேவியருடன் ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஜனன சரஸ்வதி, ஸ்ரீகன்யாபரமேஸ்வரி, ஸ்ரீநாகேந்திரா, ஸ்ரீகாலபைரவர் ஆகிய தெய்வங்களைத் தரிசிக்கலாம்.

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

ஆலய முகவரி: அட்லாண்டா இந்து திருக்கோயில், 5898 - State Highway 85, Riverdale, Georgia - 30274.

நாஷ்வில் ஸ்ரீகணேசா திருக்கோயில்

டென்னிஸி மாகாணத்தில், நாஷ்வில் நகரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்தப் பகுதியில் வசிக்கும் பக்தர்களால், 1982-ம் ஆண்டு விநாயக சதுர்த்தி திருநாளில் திருப்பணி துவங்கப்பட்டு, 1984-ல் கட்டிமுடிக்கப்பட்ட ஆலயம் இது. தரையில் இருந்து சுமார் 48 அடி உயரத்துடன், 5 நிலைகளுடன் திகழும் இந்தக் கோயிலின் கோபுரம் சோழர் கால கட்டடக் கலையுடன் திகழ்கிறது. மூலவரான விநாயகரே இங்குள்ள இந்துக்களுக்கு எல்லாமுமாகத் திகழ்கிறார்.

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

முகவரி: ஸ்ரீகணேசா திருக்கோயில், 527 - Old Hickory Blvd, Nashville, Tennessee - 37209.

அரோரா ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்

இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள அரோரா நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில். இக்கோயில், இந்துமத ஆர்வலர்களால் 1986-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்திய பாணியிலான புராதனமான கட்டடக் கலையும் அமெரிக்காவின் நவீனத்துவமும் இணைந்து திகழும் இந்த ஆலயம், அமெரிக்காவில் உள்ள இந்துக் கோயில்கள் பலவற்றுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!
அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

ஸ்ரீதேவி-பூதேவி சமேத வேங்கடேஸ்வர ஸ்வாமி மட்டுமின்றி, ஸ்ரீகன்யாபரமேஸ்வரி, ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஸித்தி விநாயகர், ஸ்ரீலட்சுமி வராஹர், ஸ்ரீஐயப்பன், தேவியருடன் முருகப்பெருமான், சிவ-பார்வதிதேவி மற்றும் நவகிரகங்களையும் இங்கே தரிசிக்க முடிகிறது.

அமெரிக்க மண்ணில்  அற்புத ஆலயங்கள்!

ஆலய முகவரி: ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில், 1145, W.Sullivan Road, Aurora, Illinois - 60506.

தொகுப்பு: ம.மாரிமுத்து, படங்கள்: தி.வேல்முருகன்