Election bannerElection banner
Published:Updated:

திருவள்ளூர் காரணீஸ்வரர் கோயிலில் சந்தன காப்பு!

திருவள்ளூர் காரணீஸ்வரர் கோயிலில் சந்தன காப்பு!
திருவள்ளூர் காரணீஸ்வரர் கோயிலில் சந்தன காப்பு!

திருவள்ளூர் காரணீஸ்வரர் கோயிலில் சந்தன காப்பு!

மாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் காரணீஸ்வரர் கோயிலில் சந்தன காப்பு நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் என்ற கிராமத்தில் காரணீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசி பௌர்ணமியை முன்னிட்டு 3 அடி உயரமுள்ள சிவலிங்கத்தைச் சந்தனத்தால் சிவன் உருவம் வரைந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்வேறு பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர். முன்னதாக அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது நந்தி சிலை இருந்த இடத்திலிருந்து சிவலிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி நல்ல பாம்பு குட்டி கோயிலுக்குள் வந்தது. 

இதனால் பக்தர்களிடையே பரபரப்பு உண்டானது. சிவன் உருவத்தை வரைய 4 கிலோ சந்தனம் தேவைப்பட்டது என்றும் அதைச் செய்ய 4 மணி நேரம் ஆனது என்கிறார் சிவாச்சாரியார் ஆதிகேசவன். அதேபோல செண்பகவள்ளி அம்மனையும் 3 கிலோ சந்தனத்தாலும் பட்டு ஜிகினாவினாலும் அலங்கரித்திருந்தனர். இதனால் அந்தப் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு