Published:Updated:

`அமலுக்கு வந்தது செல்போன் தடை’ - மீனாட்சியம்மன் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்!

மலையரசு
`அமலுக்கு வந்தது செல்போன் தடை’ - மீனாட்சியம்மன் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்!
`அமலுக்கு வந்தது செல்போன் தடை’ - மீனாட்சியம்மன் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள்!

இதில் 50 கடைகள் எரிந்து நாசமானதுடன் கோயிலில் இருந்த பெருமளவு புறாக்களும் தீயில் கருகின. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் ஆட்சியாளர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கோயிலிலை ஒழுங்குபடுத்த ஆட்சியாளர்கள் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனடிப்படையில், கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

முக்கியமாகப் பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகமும் அறநிலையத்துறையும் தடை விதித்தது. இத்தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் தடை அமலாகியுள்ள நிலையில் அதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், செல்போன் பாதுகாப்புக்காக அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் செல்போனை வைப்பவர்களுக்கு 4 மணி நேரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இரவு 10 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் மறுநாள் பகலில் அலுவலக நேரத்தில் உரிய சான்றிதழுடன்தான் செல்போனைப் பெற முடியும் உள்ளிட்ட 16 விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

இதுதொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை: