Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

கால்நடைகளின் நோய் போக்கும் ஆல்கொண்டமால்!

டல்நலம், திருமண வரம், குழந்தை பாக்கியம் என மனிதர்களின் ஒவ்வொரு வேண்டுதலுக்குமான பிரத்யேக அருள் தலங்களை நாம் அறிவோம். ஆனால், கால்நடைகள் நோயிலிருந்து விடுபடுவதற்கான பிரார்த் தனைகளுக்கான தனித்துவக் கோயிலாக விளங்குவதுதான், ஆல்கொண்டமால் ஆலயத்தின் சிறப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருக்கும் பெதப்பம்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் திருக் கோயிலில், கால்நடைகளின் உருவபொம்மைகள் பக்தர்களால் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன... வேண்டுதல்களின் நேர்த்திக் கடன்களாக! விநாயகர், ஆஞ்சநேயர், ரேணுகா தேவி, தன்னாசியப்பர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ள இந்தக் கோயிலில் உற்சவராக அருள்பாலிக்கிறார் திருமால். ஹரி பெயரையும், சிவன் பெயரையும் சொல்லி மக்கள் மோதிக்கொண்ட காலகட்டத்தில் ஹரியும், சிவனும் ஒன்றாக அமைந்த திருத்தலம் இது. கால்நடைகளின் பிணியைப் போக்கும் தலம் என்பது, ஆல்கொண்டமால் திருத்தலத்தின் சிறப்பு அடையாளமாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

கால்நடைகளுக்கான காவல் தெய்வம் குடிகொண்டிருக்கும் ஆலயமாக விளங்கிவரும் இந்தக் கோயிலின் தலைமைப் பூசாரி அதன் சிறப்பைச் சொல்லக் கேட்டோம்...

“முந்தைய காலத்தில் ஆலா மரத்தூர் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, அடர்ந்த வனப் பகுதியாக இருந்தது. இங்குள்ள ஆலமரம் ஒன்றின் கீழ் சிவலிங்க வடிவில் புற்று ஒன்று இருந்தது. விஷப் பாம்புகள் வாழும் இந்தப் புற்றுக்கு, இந்தப் பகுதியில் மேய்ந்த பசுமாடுகள் தானாக வந்து பாலை சொரிந்தன. அந்தப் புற்றின் நடுவே லிங்க வடிவில் சுயம்புவாக பெருமாள் எழுந்தருளினார். இதைக் கண்ட மூதாதையர்கள், ஆலம் உண்ட சிவனின் வடிவில் உள்ளதாலும், ஆலமரங்கள் நிறைந்த வனத்தில் இருப்பதாலும் பெருமாளை ஆல்கொண்டமால் என அழைத்து, ஆலமரத்தின் கீழ் உள்ள திருமாலையும், ஆலம் உண்ட சிவனையும் ஒரே கடவுளாக நினைத்து வழிபடத் தொடங்கினர். இன்றளவும் அது தொடர்ந்து வருகிறது.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

கால்நடைகளை வளர்ப்பவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் அவை பிணியின்றி வளரும் என்பதும், அதிக அளவில் பசுச் செல்வம் பெருகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு ஏதேனும் நோய் தாக்கி துவண்டுபோனால் உடனே இங்கு வந்து ஆல்கொண்டமாலிடம் வேண்டிக்கொள்வார்கள். நோய் குணமானதும் நேர்த்திக்கடனாக மண்ணால் செய்யப்பட்ட கால்நடைகளின் திருவுருவங்களை காணிக்கையாகச் செலுத்துவார்கள். இதுதான் இந்தக் கோயிலின் சிறப்பு” என்றார் கோயிலின் தலைமைப் பூசாரி வேணுகோபால்.

இந்தக் கோயிலில் வழிபட்டால் நினைத்தது நடக்கும் எனச்சொல்லும் புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிவராஜ், வேண்டுதல் நிறைவேறியதற்காக ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பெரிய மண் சிலையை கோயிலில் செய்து வைத்திருக்கிறார்.

“நான் சின்ன வயசுல இருந்தே இந்தக் கோயில்ல கும்பிட்டு வந்தாலும், எனக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு அப்புறம் தான் தீவிரமா சாமி கும்பிட ஆரம்பிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க... அதுகப்புறம்தான் நான் பண்ணின விவசாயமும், பிஸினஸும் செழிக்க ஆரம்பிச்சது. 3 மாடு வெச்சிருந்த நான், இப்போ 10 மாடு வெச்சிருக்கேன்” என்கிறார் சிவராஜ் நெகிழ்ச்சியுடன்.

ஆண்டுதோறும் இங்கு கொண்டாடப்படும் பொங்கல் விழா, மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்போது ஆல்கொண்டமால் ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் மாட்டுப் பொங்கல் அன்று கோயிலில் கூடி, தங்கள் வீட்டில் இருந்து கறவைப்பாலைக் கொண்டுவந்து, மூலவருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தத் திருவிழா நாளில்தான், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக மண்ணால் செய்யப்பட்ட கால்நடைகளின் உருவங்களையும் செலுத்துகிறார்கள்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

“ஆடு, மாடு, கோழினு நாங்க வளர்க்கிற பிராணிகளையும், எங்க பிழைப்பையும் காக்கிற கடவுள் இந்த ஆல்கொண்டமால்தான். இந்தக் கோயில்ல பூஜைசெஞ்சு தர்ற தீர்த்தத்தை வீட்ல வளர்க்கும் கால்நடைங்க மேல தெளிச்சா, அதுங்களுக்கு எந்த நோய், நொடியும் வராது. அதுகளுக்கு என்ன பிரச்னைன்னு வேண்டிக் கிட்டாலும், ஆல் கொண்ட மால் காப்பாத்தித் தந்திடு வார்’’ என்கிறார்கள் இப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன்.

தொழுவம் பெருக, ஆல் கொண்டமால் அருள் பெறுக!

ச.ஜெ.ரவி படங்கள்:க.சத்தியமூர்த்தி 

எப்படிச் செல்வது?

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

உடுமலை பேருந்து நிலையத் தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத் தில் உள்ள பெதப்பம்பட்டி அருகே உள்ள சோமவாரப்பட்டி கிராமத்தில் உள்ளது ஆல்கொண்டமால் ஆலயம். உடுமலையில் இருந்து செஞ்சேரி மலை சாலை வழியாக சென்றால், 13-வது கிலோ மீட்டரில் கோயில் வரும். உடுமலையில் இருந்து கோவை செல்லும் பேருந்துகள் எல்லாம் கோயிலின் முன்பு நின்றுசெல்லும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி

தொடர்பு எண்: பூசாரி வேணுகோபால் - 9095895119