“டேய் தினேஷ், தாத்தாவை நீதான்டா பார்த்துக்கணும். நீபாட்டுல தாத்தாவைத் தனியா விட்டுட்டு கிரிக்கெட் ஆடப் போயிடாதே. வீட்டிலேயே இரு, என்ன?” என்றார் அப்பா.

“அதுக்காக சத்தமா டி.வி-யை வெச்சு தாத்தாவுக்குத் தொந்தரவும் கொடுக்கக்கூடாது. புரியுதா?’’ என்றாள் அம்மா.

“மறக்காம மாத்திரையைக் கொடு. பாத்ரூமுக்கு தாத்தாவைக் கைத்தாங்கலா பிடிச்சுட்டுப் போ!’’

இப்படி, நேற்று இரவில் இருந்தே ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுவிட்டு, இன்று முக்கியமான ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டார்கள் பெற்றோர். அவன் தாத்தா சில நாட்களாகவே உடம்பு முடியாமல் படுத்திருக் கிறார். இன்று நண்பர்களோடு ஒரு மேட்ச் விளையாடத் திட்டம் போட்டிருந்தான் தினேஷ். அது இப்படிப் பணால் ஆகும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

காலையில் எழுந்ததும் தாத்தாவுக்கு டிபன் கொடுத்தான். சாப்பிட்டு முடித்ததும், மாத்திரையைக் கொடுத்துவிட்டு, தொலைக்காட்சி முன்பு அமர்ந்துவிட்டான். ஒலியைக் குறைவாக வைத்துக்கொண்டு கிரிக்கெட் பார்த்தான். ‘இந்நேரம் நண்பர்கள் ஜாலியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருப்பார்கள். லீவு நாளிலும் என்ஜாய் பண்ண முடியாமல் போச்சே!’ என மனதுக்குள் குமைந்தான்.

“தினேஷ்” என தாத்தா அழைக்கும் குரல் கேட்டது. அறைக்குள் சென்று, ‘‘என்ன தாத்தா?” எனக் கேட்டான்.

“நான்தான் டிபன், மாத்திரை எல்லாம் சாப்பிட்டுட்டேனே! கொஞ்சம் தூங்கலாம்னு பார்க்கறேன். நீ போய் உன் ஃப்ரெண்ட்ஸுங்களோட விளையாடிட்டு வர்றதுனா வா!’’ என்றார்.

தினேஷ் முகத்தில் பரவசம். “நிஜம்மாவா தாத்தா? ஆனால், அப்பா...” என இழுத்தான்.

“அவன் என்ன கேமரா வெச்சுப் பார்த்துட்டா இருக்கான்? நீ இங்கேயேதான் இருந்தேன்னு சொல்லிடறேன். நீ போய் விளையாடிட்டு சீக்கிரம் வந்துடு” என்றார் தாத்தா.

“தேங்க்ஸ் தாத்தா!” என உற்சாகமாகக் கிளம்பினான் தினேஷ்.

ஆனால், அடுத்த பத்தாவது நிமிடமே திரும்பி வந்து விட்டான். “என்னடா ஆச்சு?” என்று கேட்டார் தாத்தா.

“இல்லே தாத்தா, என் சந்தோஷத்துக்காக நீங்க பொய் சொல்ல நினைக்கிறீங்க. ஆனா, என்னை நம்பி அப்பா கொடுத்த பொறுப்பை நான் சரியா செய்யணும், இல்லியா!” என்றான் தினேஷ். தாத்தாவுக்குப் பேரனை நினைத்துப் பெருமிதம். “ஆனால், என்னால உன் சந்தோஷம் பறிபோயிடுச்சே, தினேஷ்!” என்றார்.

“கவலையே படாதீங்க தாத்தா. என் ஃப்ரெண்ட்ஸுங்களை இங்கேயே கூட்டிட்டு வந்துட்டேன். இங்கே நடக்கிற இண்டோர் கிரிக்கெட்டின் ஒரே ஆடியன்ஸ் நீங்கதான்!’’ என தினேஷ் சொல்லி முடிக்கவும், அவன் நண்பர்கள் குஷியும் கும்மாளமுமாக உள்ளே நுழைந்தார்கள்.

அட்டகாசமாக ஆரம்பித்தது இண்டோர் கிரிக்கெட் விளையாட்டு. தாத்தாவும் தன் உடல்நிலையை மறந்து உற்சாகமாக ரசிக்கத் தொடங்கினார்.