தொடர்கள்
Published:Updated:

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

அள்ளித் தரும் அட்சய திரிதியை!
News
அள்ளித் தரும் அட்சய திரிதியை!

சுபா கண்ணன்

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

க்ஷயம் (அட்சயம்) என்றால் அ + க்ஷயம். க்ஷயம் என்றால் தேய்தல் அல்லது குறைதல் என்று பொருள். குறைவற்ற வாழ்வை அட்சயம் என்கிறார்கள். குறையில்லா மனது ஏது? இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்வதே அட்சயம். இந்த எண்ணம் பெருக அருள் செய்யும் நாள் அட்சயதிரிதியை. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியையில் வரும் புண்ணியத் திருநாள் இது.

பிரளயம் முடிந்ததும் வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை சிவப் பரம்பொருள் உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க அருள்செய்த திருநாள் இது. சூரியனிடமிருந்து பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது இந்நாளில்தான்.

பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், உச்சைஸ்ரவஸ், ஐராவதம், கல்பதரு, காம தேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை. அவள் ஐஸ்வரிய லட்சுமியாகவும், தானிய லட்சுமியாகவும் தோன்றியதும், அவள் மாலவனின் மார்பில் இடம்பெற்றதும் அட்சய திரிதியை நன்னாளில்தான்.

பாற்கடலைக் கடையும்போது மேலே வந்தவள் திருமகள்; திருமாலுக்குச் சொந்தமானாள்.  அதேபோல், தயிரைக் கடையும்போது மேலே எழும் வெண்ணெயும்  கண்ணனுக்கு உரியதாகிவிட்டது!
வெண்ணெயும், கல் உப்பும் மகா லட்சுமி உறையும் பொருட்கள். அட்சய திரிதியையில் இந்த இரண்டையும் வாங்குவது விசேஷம்.

குபேரன் லட்சுமியை பூஜித்து செல்வங் களைப் பெற்றார் என்கிறது லட்சுமி தந்திரம். எனவே, அட்சயதிரிதியையில் குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்பு. அதேபோல் குபேரன் தவமிருந்து சிவனாரிடம் சங்க நிதி குபேர நிதி பெற்றதும் இந்த நாளில்தான்.

பரசுராமன் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

வேதவியாசர் விஷ்ணுவின் அம்சம் (வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே! நமோவை ப்ரம்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நமஹ எனப் பிரார்த்திக் கிறது விஷ்ணு சகஸ்ரநாமம்). வருங் காலத்தில் வேதத்தை அனைவராலும் படிக்கவோ, அதன் வழி நடக்கவோ இயலாது என்பதால், வேதத்தின் சாரத்தை மகாபாரத வடிவில் கிரந்தமாக்க நினைத்தார் வியாசர்.

அதனாலேயே பாரதம் பஞ்சமோ வேதஹ - பாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. வேதவியாசர் பாரதம் எழுத விநாயகனைத் தொழுதார். அவரும் ஒப்புக்கொண்டார். நிறுத்தாமல் எழுதும்படி சொல்லவேண்டும் என்பது கணபதியின் நிபந்தனை. அதேபோல் பொருள் புரியாமல் எழுதக்கூடாது என்பதும் வியாசரின் நிபந் தனை. இருவரும் ஒப்புக்கொள்ள, பாரதம் உருவானது. அப்படி ஒற்றை தந்தத்தையே எழுதுகோலாகக் கொண்டு, வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் பாரதம் எழுதியது, அட்சயதிரிதியையில்தான்.

கர்நாடக மாநிலத்தில், இந்நாளில் ஸ்வர்ண கௌரி விரதம் கடைப்பிடிக்கிறார் கள். அன்று, பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், அவளுக்கு பாதுகாப்பாக விநாயகரும் உடன்
வருவதாக ஐதீகம். அன்று சுமங்கலி பூஜை செய்து ஆடை வழங்குவது வழக்கம்.

பிரம்மனின் சிரசைக் கொய்த சிவனாரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. பிரம்ம கபாலமும் அவர் கையிலேயே ஒட்டிக்கொண்டது. தீராத பசிப்பிணிக்கும் அவர் ஆளானார். கபாலம் நிறைந்தால்தான் விமோசனம் கிடைக்கும். எனினும் அது பிரம்ம கபாலம் இல்லையா? எவ்வளவு பிக்ஷை இட்டாலும் நிறைய வில்லை. நிறைவில் அன்னபூரணி ஆண்ட வனுக்குப் பிக்ஷையிட்டாள். கபாலமும் நிறைந்தது; வயிறும் நிறைந்தது. கபாலமும் கையைவிட்டு அகன்றது. இப்படி, அன்னபூரணி பிக்ஷையிட்ட திருநாள் அட்சயதிரிதியை. எனவே, இந்த நாளில் அன்னதானம் செய்பவர்கள், வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவார்கள்.

கங்கை பூலோகத்தில் முதலில் தொட்ட இடம் கங்கோத்ரி. இங்கே நதியின் வலது கரையில், கங்கைக்காக வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன அழகிய கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை அட்சய திரிதியை திருநாளில் திறந்து பூஜை செய்வார்கள். தீபாவளியன்று கோயிலை மூடிவிடுவார்கள். இந்நாளில் புண்ணிய நீர் நிலைகளில் நீராடுவதால் புண்ணியம் பெருகும் என புராணங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

கும்பகோணத்தில் கோயில் கொண் டிருக்கும் 16 பெருமாள்களும் அன்று  கருட வாகனத்தில் புறப்பட்டு  பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள்.

கடவுளின் அனுக்கிரஹத்தைப் பெறு வதற்கு, அவனுடைய நாமத்தைச் சொல்லி    பிரார்த்திப்பதே வழி. இதற்கு உதாரணம், திரெளபதியை கண்ணன் காத்தருளிய சம்பவம். “சங்க சக்ர கதாபாணோ த்வாரகா நிலயாச்யுத! கோவிந்த புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதம்’’ (சங்கும் சக்ரமும் ஏந்தியவனே, த்வாரகாவில் நிலையாக வசிப்பவனே, கோவிந்தா, தாமரைக் கண்களை உடைய வனே காப்பாற்று, சரணடைந்தேன் உன்னையே) இந்த ஸ்லோகத்தைக் கூறியதும் குறையில்லாமல் பெருகியது துகில். இந்த நிகழ்வு நிகழ்ந்த தினம் அட்சய திரிதியை. எனவே, இந்தப் புண்ணிய நாளில் கண்ணனின் நாமத்தை ஸ்மரணம் செய்தால் நமது இல்லத்திலும் கண்ணனின் திருவருள் பெருகும்.

புராணங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வதையே பிரதானப்படுத்தியுள்ளன. மேலும், இந்நாளில் செய்யும் புண்ணிய காரியங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் மடங்கு பலனைத் தரும். அன்றைய தினத்தில் செய்ய வேண்டியவை - கோயிலுக்குச் செல்லுதல், புனித நீராடல், பித்ரு காரியம், இறை தியானம், நாம ஸ்மரணம், எளியவர் களுக்கு இயன்றளவு தானம் - அவ்வளவே. எனினும், லட்சுமி வாசம் செய்யும் பொருட் களை வாங்கினால், நம் இல்லத்தில் அவள் நிரந்தரமாகத் தங்குவாள், வீட்டில் செல்வம் பெருகும் என்ற எண்ணத்தில், தங்கம் முதலான ஆபரணங்கள் வாங்குவது பிரதானமாகிவிட்டது.

ஆபரணங்கள் வாங்க இயலாது எனினும், புண்ணியத் திருநாளான அட்சய திரிதியையில் லட்சுமிகரமாக ஏதேனும் வாங்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? எனில், லட்சுமி குடியிருக்கும் பொருளான மஞ்சள், கைக் குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி, கல் உப்பு, வெண்ணெய், வெல்லம் ஆகியவற்றை வாங்கலாம்.

அதுவும்போக, உங்களின் ராசிப்படி என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எவற்றையெல்லாம் தானமாகத் தரலாம், எந்த தெய்வத்தை என்னென்ன துதிப் பாடல்கள் பாடி வழிபடலாம் என்பதுபோன்ற விளக்கங்கள்  அடுத்தடுத்த பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. படித்துப் பலன் பெறுங்கள்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

ட்சய திரிதியை நன்னாளில் உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் இருக்கிறார். 2-ம் வீட்டோன் சுக்கிரன் ஜன்ம ராசியில் சூரியன், புதன் ஆகியோருடன் கூடி இருக்கிறார்.

என்னென்ன வாங்கலாம்?: நிலம், மனை, வீடு, வாகனம் வாங்கலாம். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் வாங்குவதும் சிறப்பாகும். தாயாருக்கு அவர் மனம் விரும்பும் பொருளை வாங்கித் தருவது நல்லது. சுக்கிரன் மனைவியைக் குறிப்பவர் என்பதால் மனைவியின் விருப்பம் என்னவோ அதையும் நிறைவேற்றுவது சிறப்பாகும்.

குடும்பத்தாருடன் ஒன்று கூடி விருந்து உட்கொள்ளவும், கேளிக்கைகளில் ஈடுபடவும் இந்நாள் சிறப்பானதாகும். புதிய பதவிகள், பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளலாம்.

என்னென்ன வழங்கலாம்?: இன்று உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாயும் சனியும் இருப்பது குறை ஆகும். ஆகவே, திருமுருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது. 

அதேபோல், சனி பகவானுக்கு நீல நிற சங்கு புஷ்பத்தைச் சமர்ப்பித்து வழிபடுவதும் சிறப்பு. காக்கைக்கு அன்னமிடுவது, ஏழை - எளியவர்களுக்கு கறுப்பு நிற வஸ்திரத்தை தானமாகத் தருவது, விசேஷ பலன்களை பெற்றுத் தரும். உடன்பிறந்தவர்களிடம் அன்புடன் பழகுவது நல்லது.

உடல் ஊனமுள்ளவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும். துவரம் பருப்பையும், எள்ளையும் தானம் செய்யலாம். மேலும், குரு வக்கிரமாக ராகுவுடன் கூடியிருப்பதால் கர்ப்பிணிகளுக்கு உதவி செய்யவும். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது சிறப்பாகும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

முருகா சரணம்!

அஞ்சுமுகம் தோன்றில்
  ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேலென
 வேல் தோன்றும்!
நெஞ்சில் ஒரு கால் நினைக்கில்
  இருகாலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டோன் புதன் 12-ல் இருக்கிறார். புதிய பொருட்களை வாங்குவதற்கு தடைகளும் குறுக்கீடுகளும் பணப் பற்றாக்குறையும் ஏற்படும். ஆகவே தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கு தடைகள் உண்டாகலாம்.

என்னென்ன வாங்கலாம்?: ராசி அதிபதி சுக்கிரனும் அதிக அளவு சாதகமாக இல்லை. அதற்காக ‘தங்கம் வாங்க முடியவில்லையே’ எனக் கவலைப்படத் தேவையில்லை. அட்சய திரிதியையில் நீங்கள் பால், உப்பு, வெண்ணெய் போன்ற வெண்மையான பொருட்களை வாங்குவதன் மூலம், வீட்டில் சுபிட்சத்தைப் பெறலாம். அதேபோன்று உங்கள் மனதுக்குப் பிடித்தமான அழகு சாதனங்கள், வாசனைப் பொருட்கள், ஆடை- அணிமணிகளும் வாங்கலாம்.  எனினும், சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது. அதிக ஆடம்பரம் கூடாது. வாங்கும் பொருளை பத்திரப்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.

என்னென்ன வழங்கலாம்?:  குரு 4-ல் வக்கிரமாகவும், புதன் 12-லும் இருப்பதால் தட்சிணாமூர்த்தி பகவானையும் திருமாலையும் வழிபடுவது அவசியமாகும். குருவுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முல்லை மாலை சார்த்தி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவது விசேஷம். அதேபோல், திருமாலுக்கு உகந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடலாம். லட்சுமி நரசிம்மருக்குத் துளசி மாலை அணிவித்து,  பானகம் நைவேத்தியம் செய்து வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும். பச்சைப் பயறையும், கொத்துக்கடலையையும் தானமாகத் தரலாம். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவுவது, விசேஷ பலன்களைத் தரும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

குருவருள்...

தெளிவு குருவின்   
  திருமேனி காண்டல்
தெளிவு குருவின்
   திருநாமம் செப்பல்
தெளிவு குருவின்
   திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு              சிந்தித்தல் தானே!

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோர் சாதகமாக இருக்கிறார்கள். குரு வக்கிர நிலையில் உலவுவதும் சிறப்பாகும். 

என்னென்ன வாங்கலாம்?: இந்த அட்சய திரிதியையில் நீங்கள், உங்கள் வீட்டுக்குத் தேவையான தட்டுமுட்டு சாமான்களை வாங்கலாம். வண்டி, வாகனங்கள், எரிபொருட்கள், நிலபுலன்கள், ஆடை, அணிமணிகள் வாங்கலாம். அழகான பொருட்களை வாங்குவதற்கும் வாய்ப்பு உண்டாகும். கணினி, மின்பொருட்கள், ஸ்டேஷனரி ஆகியவற்றையும் வாங்கலாம். மூலிகைப் பொருட்கள் வாங்கவும் வாய்ப்பு உண்டு.

2-ம் வீட்டோன் 12-ல் இருப்பதால் அதிகம் பொருளைச் செலவு செய்ய மனம் வராது. எந்தப் பொருளை வாங்குவதற்குச் சென்றாலும் பேரம் பேசுவீர்கள். அதனால் ஆதாயம்தானே!
என்னென்ன வழங்கலாம்?:

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பது குறை ஆகும். கேதுவுக்குப் பிரீதியாக விநாயக  பெருமானை வழிபடுங்கள். சிவப்பு அல்லி மலர் அல்லது அருகம்புல்லை விநாயகருக்குச் சமர்ப்பித்து, புளியஞ்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து ஆனைமுகனை வழிபட்டால், அல்லல்கள் நீங்கும். அவருக்குப் படைத்த பிரசாதத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சாப்பிடுவதுடன், பிறருக்கும் தானமாகத் தருவது நல்லது. மேலும் சித்ரகுப்தனை வழிபடுவதும் சிறப்பாகும். நவ கிரகங்களில் கேது பகவானுக்கு, பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரத்தை அணிவிப்பது சிறப்பாகும். கொள்ளு தானியத்தைத் தானம் செய்வதும், கல்விக்கு உதவுவதும் நலம் சேர்க்கும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

ஆனைமுகனே...

திருவாக்கும் செய்கருமம் 
 கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் 
  பெருக்கும் உருவாக்கும்
ஆதலாற் வானோரும் 
  ஆனைமுகத்தோனை
காதலாற் கூப்புவார்   
             தம்கை .

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

இந்த அட்சய திரிதியை நன்னாளில், ராசிநாதன் 11-லும், குரு 2-லும், சூரியன் 10-லும் இருப்பது விசேஷமாகும். உங்கள் மனத்துக்குப் பிடித்த பொருட்களைத் தாராளமாக வாங்கி மகிழ்வீர்கள்.

என்னென்ன வாங்கலாம்?: பொன்னும் பொருளும் சேரும் நாளிது. பல வழிகளில் அதற்கான பணமும் கிடைக்கும். தந்தைக்கும் வாழ்க்கைத் துணைவருக்கும் தேவையான பொருட்களையும் வாங்கித் தரும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்களுக்கான செலவு களை அட்சயதிரிதியையில் துவங்கலாம். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மூலிகை, காட்டிலிருந்து கிடைக்கும் பொருட்கள், மரப்பொருட்கள், வாகனங்கள் ஆகியவை வாங்க வாய்ப்பு உண்டு. இயன்ற வரையிலும் வெண்மை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்கள்.

என்னென்ன வழங்கலாம்?: 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் 5-ல் சனியும் இருப்பதால், அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படும். ராகுவுக்காக துர்கையையும், கேதுவுக்காக விநாயகரையும், சனிக்காக ஆஞ்ச நேயரையும் வழிபடுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை புதியவர்களிடமும், முகவரி இல்லாதவர்களிடமும் வாங்கவேண்டாம்; நம்பிக்கைக்கு உகந்த- நீங்கள் கொடுத்த பணத்துக்கு ரசீது கொடுக்கும் இடத்தில் வாங்குவது நல்லது. அதேபோல் நீங்கள் சர்ப்ப சாந்தி செய்து வருவது அவசியமாகும். நாக தேவதையை வழிபட்ட பின்பு பொருள் வாங்குவது நல்லது.

ஏழைக் குழந்தைகளுக்கு ஆடைகளும், பரிசுப்பொருட்களும் இனிப்புப் பதார்த்தங்களும் வாங்கிக் கொடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

பிணிக்கு மருந்தே!

மணியே மணியின்           ஒளியே
ஒளிரும் மணி புனைந்த
  அணியே
அணியும் அணிக்கழகே   அணுகாதவர்க்குப்
  பிணியே
பிணிக்கு மருந்தே அமரர்   
  பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்
  பத்ம பாதம் பணிந்த பின்னே

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

உங்கள் ராசிநாதன் சூரியன் வலுத்திருக்கிறார். செவ்வாய் தன் சொந்த ராசியில் உலவுவதும் சிறப்பாகும். சுக்கிரனும் சாதகமாக இருக்கிறார். எரிபொருட்கள், மின்சாதனங்கள், மருந்துகள், மூலிகைகள், மரங்கள், நிலபுலன்கள் ஆகியவற்றை வாங்க வாய்ப்பு உண்டாகும்.

என்னென்ன வாங்கலாம்?: 4-ல் சனி வக்கிரமாக இருப்பதால், சொத்துக்கள் வாங்கும்போது விழிப்பு தேவை. தந்தைக்கும் வாழ்க்கைத் துணைக்கும் தேவையான பொருட்களை வாங்கித் தருவதாக இருந்தால், அட்சயதிரிதியை நாளில் அவற்றை வாங்கித் தாருங்கள்.  வாகன பாக்கியம் உண்டாகும். தான, தர்மப் பணிகள், தொழில் முன்னேற்றத்துக்கான செலவுகளைத் துவங்கலாம். ஆடை- அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களும் வாங்கலாம்.

என்னென்ன வழங்கலாம்?: ஜன்ம ராசியில் ராகுவும், வக்கிர குருவும் உலவுவதாலும், 7-ல் கேது இருப்பதாலும் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. பயணங்களைத் தவிர்க்கவும். ராகு கால துர்கா பூஜையும் விநாயகர் வழிபாடும் நலம் சேர்க்கும். கணபதி ஜபம், ஹோமம் செய்வது சிறப்பாகும். முடியாதவர்கள் ஹோமம் நடக்கும் இடத்துக்குச் சென்று ஹோமத் திரவியங்களை அளித்து, ஹோமத்தில் கலந்துகொள்வது நல்லது. அதேபோல் குருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனை களைச் செய்வது நல்லது. அந்நியர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது அவசியமாகும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அதிக நலம் பெறலாம். உளுந்து, கொள்ளு தானியங்களைத் தானமாகக் கொடுப்பது சிறப்பாகும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

குரு காயத்ரீ

ஓம் வ்ருஷப த்வஜாய 
    வித்மஹே
க்ருணி ஹஸ்தாய
     தீமஹி
தந்நோ குரு:
    ப்ரசோதயாத்

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

இரண்டாம் வீட்டோன் சுக்கிரன், 8-ல் சூரியன், புதன் ஆகியோருடன் இருக்கிறார். குரு வக்கிரமாக இருப்பது நல்லது. செவ்வாய் 3-லும் கேது 6-லும் இருப்பதும் சிறப்பாகும்.

என்னென்ன வாங்கலாம்?: பழைய பொருட்களைப் புதுப்பிக்க வாய்ப்பு உண்டாகும். நிலபுலன்கள், விளையாட்டுப் பொருட்களை வாங்கவும், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு ஆகியவற்றில்
பாலிஸி எடுக்கவும் இந்நாள் சிறப்பானதாகும். மனைவிக்கு விருப்பமானவற்றையும், கலைப் பொருட்களையும், ஆடை, ஆபரணங் களையும் வாங்கலாம். மலை, வனாந்திரம் சம்பந்தமான பொருட்களும் சேரும். சிலருக்கு அட்சயதிரிதியை நன்னாளில் எதிர்பாராத பணமும் வந்து சேரும். இன்னும் சிலருக்கு, காணாமல் போன பொருள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

என்னென்ன வழங்கலாம்?: 8-ல் சூரியனும், 12-ல் ராகுவும் இருப்பது குறை ஆகும். அரசாங்கத்தாரால் பிரச்னைகள் ஏற்படும். அரசாங்கத் துக்குக் கட்ட வேண்டிய பாக்கித் தொகை இருந்தால் அதைக் கட்டிவிடவும். வீண் செலவுகளும் இழப்புகளும் குறைய ஆதித்ய ஹ்ருதயமும் துர்கா கவசமும் படிப்பதும் கேட்பதும் நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவுவது நல்லது. பயணத்தில் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். குறித்த நேரத்தில் குறித்த இடத்துக்குச் செல்ல முடியாமல் தாமதம் உண்டாகும். எனவே, வீட்டில் இருந்து வெளியே புறப்படும்போது, குல தெய்வத்தையும் முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது. கோதுமையையும், கறுப்பு முழு உளுந்தையும் தானம் செய்யுங்கள். எல்லாம் நலமாகும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

சூரிய போற்றி!

ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம: ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்காய நம: ஓம் பாஸ்கராய நம

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 7-ல் சூரியன், புதன் ஆகியோருடன் கூடி இருக்கிறார். 2-ல் செவ்வாயும் வக்கிர சனியும் இருக்கிறார்கள். குரு 11-ல் வக்கிரமாக ராகுவுடன் கூடியிருக்கிறார். வாழ்க்கைத் துணைவருக்குத் தேவையானதை வாங்கித் தர வாய்ப்பு உண்டாகும்.

என்னென்ன வாங்கலாம்?: இரும்பு, எஃகு, எண்ணெய், விளைபொருட்கள், இயந்திரங்கள், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சம்பந்தமான பொருட்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். அட்சய திரிதியை நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால், எதை வாங்கு வது என்ற மனக் குழப்பமும் ஏற்படும். செவ்வாய் சொந்த வீட்டில் இருப்பதால் நிலபுலன்கள் வாங்க முதல் முயற்சி செய்யலாம். வீட்டுக்குத் தேவையானவை, சிவப்பு நிறப்பொருட்களை வாங்கலாம்.

என்னென்ன வாங்கலாம்?: ராசிக்கு 5-ல் கேதுவும், 8-ல் சந்திரனும் இருப்பதால் கேதுவுக்காக விநாயகரையும், சந்திரனுக்காக பராசக்தியையும் வழிபடுவது நல்லது. நெய் கலந்த பால் பாயசம் செய்து அம்பாளுக்கு நைவேத்தியம் செய்த பிறகு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அருந்துவது நல்லது. சந்திரன் நீர்க் கிரகம் என்பதாலும், பெண் கிரகம் என்பதாலும் தாகத்தால் வாடும் பெண்களுக்கு நீரையோ, மோரையோ தானமாக வழங்குவது சிறப்பாகும். மேலும் சந்திரன் மாதுர்காரகன் ஆவார். எனவே, தாயாருக்கும், தாய் வழி உறவினர் களுக்கும் உதவுவதும் சிறப்பாகும். அட்சயதிரிதியை அன்று வெண்மை நிறப் பொருட்கள், கொள்ளு, நெல் ஆகிய தானியங்களை தானம் தருவது நல்லது.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

அபிராமி சரணம்!

உதிக்கின்ற செங்கதிர்       உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

சூரியன், செவ்வாய், புதன், ராகு ஆகியோரது நிலை சிறப்பாக உள்ளது. குரு 10-ல் இருந்தாலும் வக்கிரம் பெற்றிருப்பதால் நலம் புரிவார்.

என்னென்ன வாங்கலாம்?: மின் சாதனங்கள், எரிபொருட்கள், நிலபுலன்கள், ஸ்டேஷனரி, எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை வாங்கினால், அவற்றின் உபயோகம் நீண்டநாள் நீடிக்கும். சந்திரன் 7-ல் தன் உச்ச ராசியில் செவ்வாயின் நட்சத்திரத் தில் இருப்பதாலும், சந்திரமங்கள யோகம் மற்றும் குரு மங்கள யோகம் இருப்ப தாலும் புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு கூடிவரும். சிவப்பு நிறப் பொருட்களும், கட்டடப் பொருட்களும் வாங்கலாம். சந்திரன் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் வாசனைத் திரவியங்கள் மற்றும் இல்லத்தில் உள்ள பெண்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.

என்னென்ன வழங்கலாம்?: உங்கள் ராசிக்கு 4-ல் கேதுவும், 6-ல் சுக்கிரனும், ஜன்ம ராசியில் வக்கிர சனியும் உலவுவது சிறப்பாகாது. நண்பர்களாலும், வேலையாட்களாலும் உபத்திரவங்கள் ஏற்படும்.

சொத்து வாங்கும்போது சட்ட சிக்கல் ஏதும் வராமல் பார்த்து வாங்கவும். சிலருக்கு சோர்வு அதிகரிக்கலாம். கேதுவுக்காக விநாயகரை வழிபடவும். சுக்கிரனுக்காக மகாலட்சுமியை வழிபடுவது நல்லது. சனிக்காக ஆஞ்சநேயரை  வழிபடவும். விநாயகர் அகவல், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம், ஹனுமன் சாலீஸா ஆகியவற்றை படிப்பதும் கேட்பதும் நன்று. தாமரை மலர்களால் லட்சுமிக்கு அர்ச்சனை செய்யவும். கருட தரிசனம் செய்வது நல்லது.

வெண் மொச்சையையும், எள்ளையும் தானமாகத் தரவும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

திருமகளே!

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ
வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாள் வையே!

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

கேதுவும், சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார்கள். சந்திரன் ராசிக்கு 6-ல் இருப்பதும் சிறப்பாகும். சனி 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் ஓரளவு நலம் புரிவார்.

என்னென்ன வாங்கலாம்?: ஆன்மிகம் சம்பந்தமான பொருட்களை வாங்கலாம். வெள்ளி, அழகுப் பொருட்கள், மகன் அல்லது மகளுக்குத் தேவையானவை, தியானம் மற்றும் யோகாவுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. விபரீத ராஜயோகமும் தர்ம கர்மாதிபதி யோகமும் இருப்பதால் எதிர்பாராத பொருட்களின் சேர்க்கையும் நிகழும். வாய்ப்பு உள்ள பொருட்களை வாங்கி மகிழுங்கள். கேளிக்கைகளில் கலந்துகொள்ளவும், தொழில் வளர்ச்சிக்குத் தேவையானதைச் செய்யவும் உங்களுக்கு உகந்தது அட்சயதிரிதியை திருநாள்.

என்னென்ன வழங்கலாம்?: 12-ல் செவ்வாய் வக்கிர சனியுடன் கூடியிருப்பதால் வீண் விரயம், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். சுப்ரமணியரையும் அனுமனையும் வழிபடுவது நல்லது. முடிந்தால் திருச்செந்தூர் சென்று செந்திலாண்ட வரைத் தரிசிக்கலாம். வீட்டில் முருகப் பெருமானின் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி வழிபடவும். அதேபோல் அனுமனின் அருள்பெற, அனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது. கால், கண் ஊனமுற்றவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதால், நன்மைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுக்கும் உதவி செய்யுங்கள். துவரை, எள் ஆகிய தானியங்களையும், பாய், படுக்கை, பெட்ஷீட் போன்ற சயனப் பொருட்களையும் தானமாகத் தருவது நல்லது.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

ராமதூதாய...

ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் ஹனுமதே நம: ஓம் ஓம் மாருதாத் மஜாய நம: ஓம் சர்வமாயா         
       விபஞ்சனாய நம:
ஓம் சர்வ துக்கஹராய நம:
ஓம் சர்வலோகச்சாரிணே 
                 நம:
ஓம் ராமதூதாய நம:
ஓம் கபீச்வராய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் ப்ரபவே நம:

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

புதன், சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கான முயற்சிகளைத் துவங்கலாம்.

என்னென்ன வாங்கலாம்?: கலைப் பொருட்கள், ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், இயந்திரங்கள், எரிபொருட்கள், விளைபொருட்கள், பூமியிலிருந்து வெளிவரும் பொருட்கள் ஆகியவற்றை வாங்க வாய்ப்பு உண்டு. வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற உலோகப் பொருட்களையும், கனரக பொருட்களையும் வாங்குவதும்  நல்லது. வியாபார முன்னேற்றத்துக்காக பொருளை முதலீடு செய்யவும் வாய்ப்பு உண்டாகும்.  வரும் அட்சயதிரிதியை, உங்களின் சொந்த பந்தங்களுக்கு உதவி செய்ய உகந்த நாளாகத் திகழ்கிறது.

என்னென்ன வழங்கலாம்?: 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்தப் பொருளையும் வாங்க வேண்டாம். நம்பிக்கையான இடத்தில் பொருளை வாங்குவது நல்லது. வேற்று மொழி, இனக்காரர்களை நம்ப வேண்டாம். கேது கிரகத்தால் நன்மை பெற விநாயகரையும், ராகுவால் நன்மைகள் பெற துர்கையையும் வழிபடுவது நல்லது. காளஹஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழ்பெரும்பள்ளம் ஆகிய திருத் தலங்களுக்குச் சென்று வழிபடுவதால், விசேஷ பலன்கள் உண்டாகும். விஷ ஜந்துக்களாலும் விஷத்தாலும் பயம் ஏற்படும். ராகு, கேது பிரீதி செய்து கொள்வது அவசியமாகும். உளுந்து, கொள்ளு ஆகிய தானியங்களைத் தானமாகத் தருவது நல்லது. ஆட்டுக்கு பசும் தழைகளைத் தருவது சிறப்பாகும்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

கேதுவே போற்றி!

பலாச புஷ்ப சம்காசம்
தாரகாகிரஹ மஸ்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத்மகம்
கோரம் தம் கேதும்        
    ப்ரணமாம்யஹம்

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். 2-ம் வீட்டோன் குரு 7-ல் ராகுவுடன் இருக்கிறார். புதன் பலமாக இல்லை. இயந்திரங்கள், நிலபுலன்கள், கட்டடப் பொருட்கள் ஆகியவை வாங்க வாய்ப்பு உண்டாகும்.

என்னென்ன வாங்கலாம்?: மருத்துவம் சார்ந்த பொருட்களை வாங்குவீர்கள். காதுகளில் அணியும் ஆபரணங்கள் வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் சேரும். தந்தை சம்பாதித்த பொருட்களைப் பெற வாய்ப்பு உண்டாகும். செந்நிறப்பொருட்கள் சேரும்.  சகோதர நலனுக்காகவும் உதவுவீர்கள். சந்திர மங்கள யோகமும், குரு மங்கள யோகமும் இருப்பதால் சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டு. அதற்கான முயற்சியில் இறங்கலாம்.

என்னென்ன வழங்கலாம்?: ராகு, கேது, புதன் ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் மனக்குழப்பம் உண்டாகும். கோபம் அதிகமாகும். நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். சர்ப்ப தோஷத்தை விலக்கிக் கொள்வது நல்லது. அதன் பொருட்டு பிள்ளையாரையும் துர்காதேவியையும் வழிபடலாம். விநாயகர் அகவல் படிக்கவும். துர்கா சூக்தம், துர்கா அஷ்டகம், துர்கா கவசம் படிப்பதும் கேட்பதும் நல்லது. ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுவதாலும் விசேஷ பலன்களைப் பெறலாம். விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்வது நல்லது. மலைக்கு மேல் கோயில் கொண்டிருக்கும் திருமாலைத் தரிசித்து வழிபடுவது சிறப்பாகும். பச்சைப் பயிறு, பச்சை நிற வஸ்திரங் களை தானமாகத் தரலாம்.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

பல்லாண்டு...

எந்தை தந்தை தந்தைதம்
மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்துவழிவழி யாட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி
அரியையழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

2-ல் புதனும் சுக்கிரனும், 3-ல் சந்திரனும் 6-ல் ராகுவும் 9-ல் செவ்வாயும் இருப்பது சிறப்பாகும். குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும்.

என்னென்ன வாங்கலாம்?: புதிய முதலீடு செய்வதற்கான முன்முயற்சிகளை துவங்கலாம். கலை சம்பந்தமான பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் ஆகியவற்றை வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அட்சய திரிதியை நாளைத் தொடர்ந்து வரும் நாட்களில் தந்தையின் சொத்துக்களும் பொருட்களும் கிடைக்கும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் கூட பொருட்சேர்க்கை நிகழும். அட்சயதிரிதியை அன்று ஆபரணங்கள் வாங்கலாம்.

என்னென்ன வழங்கலாம்?: சனி, கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும். வாழைப் பழம், தேங்காய், மோதகம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை படைத்து, அர்ச்சனை செய்துகொள்வது நல்லது. அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று, நவகிரகங்களில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது சிறப்பு. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும். இரும்பு, நல்லெண்ணெய், எள், கொள்ளு ஆகிய தானியங்கள், கறுப்பு மற்றும் பல வண்ணங்களால் ஆன வஸ்திரத்தை தானமாகத் தருவது சிறப்பாகும். ஆதரவற்றவர்களுக்கு உதவுவது சிறப்பு.

அள்ளித் தரும் அட்சய திரிதியை!

சனீஸ்வர காயத்ரி

காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: பிரசோதயாத்