Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பேச்சுத் திறன், கல்விச் செல்வம்... வாரிவழங்கும் தருமபுரீஸ்வரர்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பேச்சுத் திறன், கல்விச் செல்வம்... வாரிவழங்கும் தருமபுரீஸ்வரர்!

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

மிழகத்தில் சைவமும் தமிழும் விளக்கமுற அரும்பணியாற்றிய எண்ணற்ற ஆதீனங்களும் மடங்களும் உள்ளன. அத்தகைய ஆதீனங்களுள் ஒன்று... மயிலாடுதுறைக்கு அருகில் தருமபுரம் என்னும் தலத்தில் அமைந்திருக்கும் தருமபுர ஆதீனம். இங்கே மிகவும் புராதனமான அபயாம்பிகை சமேத தருமபுரீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில்தான் குருஞானசம்பந்தர் ஆதீனம் கண்டார்.

தருமபுர ஆதீன வளாகத்துக்குள் அமைந்திருக்கும் தருமபுரீஸ்வரர் ஆலயம் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்டு, அவருடைய வழிவந்த முனிவர்களால் வழிபடப் பெற்ற கோயிலாகும். ஆதியில் வில்வ விருட்சங்கள் நிறைந்திருந்ததால், வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கிய இந்தத் தலத்தில் உள்ள இறைவனை யமதர்மன் வழிபட்டதால், அவன் பெயரிலேயே தருமபுரம் என்று அழைக்கப்படுகிறது. யமன் வழிபட்டதாகச் சொல்லப்படும் திருத்தலங்களில் தருமபுரமும் ஒன்று.

ஆலயத்தில் இறைவன் தருமபுரீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு அற்புத தரிசனம் தருகிறார். அம்பிகை, யமனுக்கு அபயம் அருளியதால் அபயாம்பிகை என்னும் திருப்பெயர் கொண்டு பக்தர்களுக்கு அருள்பொழிகிறாள். இங்குள்ள இறைவனை வழிபட்டால், யமபயம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, சனிதசை நடப்பவர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட... சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும், பேசும் திறனும், கல்வியில் மேன்மையும் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

திருக்கடவூரில் தான் செய்த தவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்காக ஈசனை யமதர்மன் பூஜித்த தலம், தருமபுரம்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருக்கடவூரில் சிவபக்தனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர பாசத்தை வீசிய நேரத்தில் அவன் தன் தர்மத்தில் இருந்து தவறிவிட்டான். `உரிய காலத்தில் மனித உயிர்களைக் கவர்வதுதான் அவனுடைய தர்மம். அப்படியிருக்க, மார்க்கண்டேயனின் உயிரை உரிய காலத்தில் யமதர்மன் கவர்ந்தது எப்படி தவறாகும்?' என்ற கேள்வி நமக்குத் தோன்றலாம். அதில் தவறு இல்லைதான். ஆனால், தான் சொல்லிய வார்த்தைகளில் இருந்து அவன் தவறிவிட்டான். அதுதான் யமதர்மன் செய்த தவறு.

அப்படி என்ன சொன்னான் யமதர்மன்?

நக்கீரரின் ‘கயிலை பாதி காளத்தி பாதி’ அந்தாதியில்,

‘தொழுது, நமனும்தன் தூதுவர்க்குச் சொல்லும்,
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால், பணிந்தகலப் போமின்கள்
எத்துணையும் சேய்த்தாக என்று.’


எனக் கூறுகிறார்.

யமன், உயிர்களைக் கவர் வதற்காகத் தன்னுடைய தூதர்களை அனுப்பும்போது, ‘காளத்திநாதனாம் சிவபெருமானின் குற்றமற்ற பக்தர்களைக் கண்டால், அவர்களிடம் இருந்து வெகுதூரத்துக்கு விலகிப் போய்விடுங்கள்’ என்று சொல்வானாம். சிவனடியார் களைக் கண்டால் அவர் களைப் பணிந்து போற்றி விலகிச் செல்லுமாறு கேட்டுக்கொண்ட யமதர்மன் தான், திருக்கடவூரில் சிறந்த சிவபக்தனான மார்க்கண் டேயனின் உயிரைக் கவர் வதற்காக பாசக் கயிற்றை வீசினான். தான் சொன்ன சொல்லில் இருந்து தவறி விட்டான்.

அந்தத் தவற்றுக்கு தண்டனையாக ஈசனின் திருவடியால் சம்ஹாரம் செய்யப்பட்டான். யமசம்ஹாரம் நிகழ்ந்த தும், பூமிபாரம் அதி கரித்துவிட்டது. பாரம் தாங்கமாட்டாத பூமிதேவி, ஈசனைப் பிரார்த்திக்க, யமன் உயிர்த்தெழ அனுக்கிரஹம் செய்தார். தனக்கு அனுக்கிரஹம் செய்த ஈசனிடம், ‘‘ஐயனே, தங்கள் அடியவர்களிடம் நெருங்கக்கூடாது என்று சொல்லிய நானே சொன்ன சொல் தவறி பாவம் இழைத்துவிட்டேன். என்னுடைய பாவம் தீர உரிய பிராயச்சித்தத்தை தாங்கள்தான் அருளவேண்டும்’ என்று பிரார்த்தித்தான். ஈசன், வில்வாரண்யத்துக்குச் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு யமனிடம் கூறினார். அதன்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தான் செய்த தவற்றுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொண்டான் யமன். சிவலிங்க பூஜை செய்யும் யமன் திருவுருவத்தை கோயிலில் தரிசிக்கலாம்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கோயிலில் நாம் சந்தித்த முனைவர் சிவ.ஆதிரை தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘என்னுடைய மாமனாருக்கு 20 வருஷத்துக்கு முன் விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு, ரொம்பவும் ஆபத்தான நிலையில இருந்தார். என் கணவர் இந்தக் கோயிலுக்கு வந்து தருமபுரீஸ்வரரை வேண்டிக்கிட்டார். கடவுள் அருளால மாமனார் படிப்ப டியாக குணமடைஞ் சுட்டார். அதேபோல் என்னோட தம்பி பிறந்து மூன்று வயசு வரைக்கும் பேசவே இல்லை. சந்நிதா னத்தை தரிசிச்சு எங்க குறையை சொன்னோம். அவர்தான் தருமபுரீஸ் வரரை வேண்டிக்க சொன்னார். அதேபோல் வேண்டிக் கிட்டதும் கொஞ்சம் கொஞ்சமா என்னோட தம்பி பேச ஆரம்பிச் சுட்டான்’’ என்றார், இன்றும் பிரமிப்புடன்.

பேராசிரியை முத்துலட்சுமி தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘நான் எம்.ஃபில் பண்றதுக்காக சித்தாந்தம் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டேன். அதில் சாஸ்திரங்கள் கூறும் வாழ்வியல் கூறுகள் என்ற தலைப்பில் நான் ஆய்வு செய்யவேண்டும். அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டபோதுதான் ரொம்ப கஷ்டமான தலைப்புனு புரிஞ்சுது. என்னோட நெறியாளரிடம் போய் அழுது, தலைப்பை மாற்றித் தரச்சொன்னேன். அதெல்லாம் முடியாதுன்னு மறுத்துட்டவர், தன்னிடம் வந்து அழுவதைவிட தருமபுரீஸ்வரரிடம் போய் அழும்படி சொல்லிட்டார். நானும் தருமபுரீஸ்வரர் சந்நிதிக்குப் போய் அழுது முறையிட்டு, தினமும் கோயிலுக்குப் போய் உட்கார்ந்து எழுதி முடிச்சேன். சிறப்பா இருந்ததா எல்லோரும் பாராட்டினாங்க. இப்ப முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கேன்’’ என்றார் மகிழ்ச்சி பொங்க.

அபயாம்பிகை சமேத தருமபுரீஸ் வரரை வழிபட்டு, வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறலாமே!

- எஸ்.கண்ணன்கோபாலன் 
 படங்கள்: க.சதீஷ்குமார், ம.அரவிந்த்


எப்படிச் செல்வது..?

மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது... தருமபுரம். மயிலாடுதுறையில் இருந்து இங்கு செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.