நவதாண்டவ மூர்த்திகள் !

நாகை மாவட்டம், நாகை வட்டத்தில் அமைந்துள்ளது திருச்செங்காட்டங்குடி. இங்குள்ள சிவாலயத்தில் காணும் பல அற்புதங்களில் குறிப்பிடத்தக்கவை நவதாண்டவ மூர்த்திகளின் தரிசனம். இங்கே வடசுற்று மண்டபத்தில் புஜங்கவளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவ மூர்த்தி, காலசம்ஹாரர், கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹாரர், பைரவ மூர்த்தி, உத்திராபதியார் ஆகிய நவதாண்டவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.

அம்பிகையின் பாதுகைகள்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில், புதுவயல் - பெரியபாளையம் வழித்தடத்தில் அமைந்துள்ள ஊர் ஆரணி. சென்னையிலிருந்து வடக்கே சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் உள்ள அருள்மிகு சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் ஆலயத்தில், தெற்கு நோக்கிய வாசல் வழியே நுழைந்தால், அம்பிகை சிவகாமவல்லியின் சந்நிதியை அடையலாம். தண்ணருள் பொங்கும் கண்களில் கருணை பொழிய காட்சி தரும் இந்த அன்னையின் நேர் எதிரே இரு பாதுகைகள் கல்லில் அமைக்கப் பட்டுள்ளன. இவை அன்னை சிவகாமவல்லியின் பாதுகைகள் எனக் கூறப்படுகிறது.

- சி.டி.கே.மூர்த்தி, சென்னை

கோயில்களில் ரதி - மன்மதன்!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்கு கோயில் உள்ளது.

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

சேலம் மாவட்டம் ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன் ஈசனைப் பூஜித்ததால் இறைவன் அருள்மிகு
காம நாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

குமார சம்பவம் அதாவது முருகனின் திருஅவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின் மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட தர்மபுரியாகும்.

மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர் மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகாள நாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான்.

- எஸ்.ராஜம், சேலம்