Published:Updated:

கலகல கடைசி பக்கம்

கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்

நேயாவின் தோழன்!யுவா, ஓவியம்: மகேஸ்

கலகல கடைசி பக்கம்

நேயாவின் தோழன்!யுவா, ஓவியம்: மகேஸ்

Published:Updated:
கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்
கலகல கடைசி பக்கம்

குடும்ப அரசியல் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று ஜெ. பதவி ஏற்பில் முதல் வரிசையில் உட்கார்ந்த சசிகலா குடும்பத்தை பார்க்காமல் புளியங்கொட்டையை உலுக்கி கொண்டு இருந்தார்கள் போலும்...நேயாவுக்குத் தூக்கமே வரவில்லை. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள். ‘பாவம் ட்விட், நான் செஞ்ச தப்புக்குத் திட்டு வாங்கிட்டான்!’

எட்டாம் வகுப்பு படிக்கும் நேயாவின் செல்ல நாய்க்குட்டிதான் ட்விட். பொமரேனியன். ஸ்கூல் நேரம், படிக்கும் நேரம் போக, மீதி நேரமெல்லாம் அவளுக்கு அதனோடுதான் பொழுது கழியும். அவளுக்குச் சரியாக அதுவும், அதற்குச் சரியாக அவளும் ஓடியாடி, துள்ளிக் குதித்து விளையாடுவார்கள். வீட்டில் யாராவது நேயாவைக் கோபித்துக்கொண்டால், ட்விட்டும் அவர்களிடம் ‘டூ’ விட்டு, முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும். அந்த அளவுக்கு இரண்டு பேரும் நெருக்கம்.

இன்று காலையில், அழகான ஒரு ஃப்ளவர் வாஷ் வாங்கி வந்தார் அப்பா. வேலைப்பாடுமிக்க கண்ணாடி ஜாடி அது. “எங்க மேனேஜருக்கு பர்த்டே! அவருக்கு கிஃப்டா கொடுக்கணும். இங்கேயே இருக்கட்டும். குளிச்சுட்டு வந்து பேக் பண்றேன்” என ஹாலில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டுப் போனார்.

ட்விட்டோடு விளையாடிக்கொண்டிருந்த நேயா, மேஜை மீது இருந்த ஒரு துணியை வேகமாக இழுக்க, துணியின் நுனியில் பதிந்திருந்த ஃப்ளவர் வாஷ் சட்டென்று நழுவி, உருண்டு, கீழே விழுந்து உடைந்தது. ‘ஐயோ! அப்பா வந்தால் திட்டுவாரே!’ என்று பதறிப்போனாள் நேயா.

சில நொடிகள் திகைத்தவள், துணியைக் கீழே போட்டுவிட்டு, கிச்சன் அருகில் ஓடி, “அம்மா..! ட்விட் துணியைப் பிடிச்சு இழுத்தானா... ஃப்ளவர் வாஷ் கீழே விழுந்து உடைஞ்சுடுச்சு!” என்று கத்தினாள்.
அம்மா அவசரமாக கைத்துணியில் கைகளைத் துடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஈர டவலோடு அப்பாவும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார். உடைந்த கண்ணாடி ஜாடி அருகே நின்றவாறு மூன்று பேரையும் பரிதாபமாக மாறி மாறிப் பார்த்தது ட்விட்.

அப்பா கோபத்துடன் ட்விட்டைப் பிடித்துத் தரதரவென இழுத்துப் போனார். ஹாலைத் தாண்டி வெளியே நடையில், மாடிப்படி வளைவின் கீழே நிறுத்தினார். “இனிமே இதுதான் உன் இடம். புரியுதா? இந்த இடத்தைவிட்டு உள்ளே வந்தே... தொலைச்சுப்புடுவேன்!” என்று சீறினார். “இனிமே இதுக்குச் சோறு, தண்ணி எது வைக்கிறதானாலும் அங்கேயே வைங்க!” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் போனார்.

ட்விட் அங்கேயே சுருண்டு படுத்துவிட்டது. நேயா ஸ்கூலுக்குப் போய்விட்டுச் சாயந்திரம் வந்தபோதும் அது அங்கேயேதான் படுத்திருந்தது. அம்மா மதியம் வைத்த சாப்பாட்டைக்கூடச் சாப்பிடவில்லை அது.

நேயாவுக்கு ட்விட்டைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அப்பா அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பார் என்று அவள் நினைக்கவில்லை. ராத்திரி அவளுக்குத் தூக்கமே வரவில்லை.
“என்ன நேயா, தூங்கலையா?’’ எனக் கேட்டவாறு எழுந்துகொண்டார்கள் அப்பாவும் அம்மாவும்.

“ஸாரிப்பா, அந்த ஃப்ளவர் வாஷை கைதவறி உடைச்சது நான்தான். நீ திட்டுவேங்கிற பயத்தில் ட்விட் மேலே பழி போட்டுட்டேன். அது பாவம்ப்பா!’’ என்றாள் நேயா.

“தெரியும், நேயா! நீதான் உடைச்சேன்னு அம்மா பார்த்து என்கிட்டே சொல்லிட்டா. தான் தப்பிக்கிறதுக்காக அடுத்தவங்க மேல பழி போடறது தப்பு - அது வாயில்லா ஜீவனா இருந்தாலும்! பயத்துல நீ அப்படிப் பண்ணியிருந்தாலும், செய்த தப்பை ஒப்புக்கிற இந்த தைரியமான மனசுதான் மகிழ்ச்சியைக் கொடுக்கும். போய் ட்விட் கிட்டே மன்னிப்புக் கேள்’’ என்றார் அப்பா.

உறுத்தல் நீங்கிய மகிழ்ச்சியில் ஓடிச் சென்று, ட்விட்டை அள்ளிக்கொண்டு கொஞ்சத் தொடங்கினாள் நேயா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!