Published:Updated:

தினம் தினம் வழிபடுவோம்!

தினம் தினம் வழிபடுவோம்!

தினம் தினம் வழிபடுவோம்!

தினம் தினம் வழிபடுவோம்!

தினம் தினம் வழிபடுவோம்!

Published:Updated:
தினம் தினம் வழிபடுவோம்!
தினம் தினம் வழிபடுவோம்!

யுக தர்மம் என ஒன்று உள்ளது. மற்ற மூன்று யுகங்களில் யாக, யக்ஞங்கள், தபஸ் முதலானவற்றை செய்து பெரும் நற்பேற்றினை அடைந்தார்கள். இந்த கலியுகத்தில் இறை நாம உச்சாடனமும், இறை சிந்தனையுடன் கூடிய எளிய வழிபாடுகளும் பெரும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

காலையில் கோலமிடுவது முதல் இரவு சமையல் மேடையை சுத்தம் செய்துவிட்டுத் தூங்கச் செல்வது வரையிலும் அனைத்து செயல்பாடு களையும் கடவுளுடன் இணைந்த வாழ்க்கைமுறையாக ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்.

தினம் தினம் வழிபடுவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்கள் சொல்லிவைத்த நியதிகள், சிறு சிறு வழிபாடுகளாகவே திகழும். அவை ஒவ்வொன்றிலும் ஏகாக்ரதையும், ஐக்கியபாவமும் பிரதானமாக இருக்கும். ஏகாக்ரதை என்றால், மனதை இறை சிந்தையில் ஒருமுகப்படுத்துவது, ஐக்கியபாவம் என்பது அர்ப்பணிப்பு உணர்வு. இந்த இரண்டின் துணை கொண்டும் நம் ஆழ்மனதின் சக்தியை தூண்டி, சிறு சிறு பிரச்னைகளை நாமே தீர்க்க முடியும்.

நமது பண்டிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்... சிறுவர் முதல் கிழவர் வரை அனைவருக்கும் பங்கு இருக்கும். பூ கொய்தல், வீட்டை அலங்கரித்தல் சந்தனம் (முன்பெல்லாம் சந்தன கட்டையைத் தேய்த்து சந்தனம் திரட்டுவார்கள் சிறுவர்கள்) குங்குமம் வைத்தல், மாவிலைத் தோரணம் கட்டுதல் ஆகியவற்றை சிறார்கள் கவனிப் பார்கள். பெண்கள் சமையல் வேலை களையும், ஆண்கள் கடைக்குச் செல்லுதல், பூஜைப் பொருட்களை சேகரித்து வருதல் முதலானவற்றை கவனிக்க, ஒட்டுமொத்த குடும்பமும் தெய்வ காரியங்களில் ஐக்கியப்படும்; தெய்வ அனுக்கிரகம் அவர்களை ஆட்கொள்ளும்.

தினம் தினம் வழிபடுவோம்!

பண்டிகைகள், விரத தினங்களில் மட்டுமல்ல, அனுதினமும் இறையருள் நம் இல்லங்களில் நிலைத்திருக்க தினப்படி வழிபாடுகளும், நியதிகளும், சில எளிய ஸ்லோகங்களும் நமக்கு உதவி செய்யும். அவ்வகையில் மகரிஷிகளும், மகான்களும், ஞான நூல்களும் அறிவுறுத்தும் வழிபாட்டு நியதிகளும், மகத்தான பலன்களை அள்ளித்தரும் தெய்வ ஸ்லோகங்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.அவற்றின் துணையோடு தினம் தினம் தெய்வ வழிபாட்டைத் தொடருங்கள்; இறையருளால் உங்கள் இல்லம் செழிக்கட்டும்!

உள்ளங்கை தரிசனம்!

நம் உள்ளங்கையின் துவக்கம், மத்திய பாகம், முடியும் இடம் ஆகியவற்றில் முறையே லட்சுமி, பார்வதி, சரஸ்வதி ஆகியோர் வசிக்கிறார்கள். காலை யில் விழித்ததும் உள்ளங்கையை தரிசிப்பதன் மூலம், இவர்களின் அருட்கடாட்சத்தைப் பெறலாம்; அந்த நாள் மிக இனிய நாளாக அமையும். அப்படி, உள்ளங் கையை தரிசிக்கும்போது கீழ்க்காணும் ஸ்லோகத் தைச் சொல்லவேண்டும்.

தினம் தினம் வழிபடுவோம்!

கராக்ரே வஸதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே பார்வதீச ப்ரபாதே கர தர்ஸனம்
வைணவ அன்பர்கள் கைகளின் முடிவில் கோவிந் தனைத் தரிசிப்பார்கள்.
கராக்ரே வஸதேலக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே கோவிந்தஸ்ச ப்ரபாதே கர தர்ஸனம்
என்று கூறி, உள்ளங்கையைத் தரிசித்து வணங்கி வழிபடுவார்கள்.


பூமித்தாய்க்கு வணக்கம்!

பத்து மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமப்பவள் நம் அன்னை. வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுமந்து காப்பவள் பூமித்தாய். அவளுக்கு நன்றி செலுத்தவும் நம் கால்கள் பூமியை ஸ்பரிசிக்க அனுமதி வேண்டியும் தூங்கி எழுந்ததும் நம் கால்கள் தரையைத் தொடுமுன், கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வணங்குவது அவசியம்.

சமுத்ரவஸனே தேவி
பர்வத ஸ்தன மண்டலே!
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே!!


‘சமுத்திரத்தில் வசிப்பவளே, மலைகள் சூழ்ந்தவளே, விஷ்ணு பத்தினியே, உனக்கு நமஸ்காரம்! என் கால்கள் உன்னை ஸ்பரிசிக்கப் போகின்றன; அதைப் பொறுத்தருள வேண்டும், என்பதே இந்த ஸ்லோகத்தின் கருத்து. காலையில் துயிலெழுந்ததும், குளிக்கும்போதும், தூங்கச் செல்லும்போதும் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

ஆண்கள் சொல்லவேண்டியது:

அச்வத்தாமா பலிர் வ்யாஸோ
ஹனுமந்தம் விபீஷண:! க்ருப: பரசுராமஸ்ச  சப்தைதே சிரஞ்சீவின:!!


பெண்கள் இதைச் சொல்வதால் பொறுமை, தன்னம்பிக்கை, தைரியம், போராடும் துணிவு இவையனைத்தும் கிடைக்கும்

அஹல்யா, த்ரௌபதி சீதா தாரா மன்டோதரீ ததா!
பஞ்சகன்யா ஸ்மரேன்னித்யம் மஹாபாதக நாஸனம்!!


கருட தரிசனம்!

குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து         
தவளாய ச!
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் க்ஷேமம்         
குரு ஸதா மம!!

தினம் தினம் வழிபடுவோம்!

விஷ்ணுவை வஹிக்கும் ஹே கருடனே! குங்குமம்போல் சிவந்த நிறமுள்ளவரும், தும்பைப் புஷ்பம் போலும், சந்திரன் போலும் வெண் நிறமான உமக்கு நமஸ்காரம்! எப்பொழுதும் எனக்கு க்ஷேமத்தைச் செய்வீர்.

கருட தரிசனம் நம் கவலைகளையெல்லாம் நீக்கும். வானில் கருடபகவானைத் தரிசிக்கும் போது, மேற்கண்ட ஸ்லோகத்தை ஜபிக்கவேண்டும். அதனால் சகல செளபாக்கியங்களும் கைகூடும்.

திருமண வரம் பெற...

காத்யாயனி மஹாமாயே
                மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி பதிம் மே         
குரு தே நம:

கருத்து: கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான அம்பிகையே, எனக்கு நந்தகோபருடைய மகனான கிருஷ்ணனைக் கணவனாக வாய்க்கும்படி அருள்புரிவாயாக.

தினமும் வீட்டில் விளக்கேற்றும் போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தால், மனதுக்கு இனிய வாழ்க்கைத் துணை அமையும்.

பசு வணக்கம்!

பசுவுக்குக் கைப்பிடி புல்லாவது உண்ணக் கொடுப்பதால், பஞ்ச மஹா பாபங்களும் விலகுமென்று மஹான்கள் கூறியிருக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள பாவங்கள் விலக, பசுவுக்குப் பச்சைப் புல், அகத்திக்கீரை முதலியவற்றை கொடுக்கவேண்டும். அப்போது, கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிக் வணங்குவது சிறப்பு.

கவாமங்கேஷு திஷ்டந்தி புவனானி         
சதுர்தஸ
யஸ்மாத்தஸ்மாச்சிவம் மே ஸ்யாத்         
இஹலோகே பரத்ர ச


கருத்து: பசுவின் அங்கங்களில் பதினான்கு உலகங்களும் இருப்பதால் இவ்வுலகிலும், மேலுலகிலும் எனக்கு மங்கலங்களை அளிக்கட்டும்.

சாப்பிடும்போது...

சாதாரண உணவு இறைவனின் பார்வைக்குப் போனதும் பிரசாதமாகி விடும்; தண்ணீர் தீர்த்தமாகிவிடும். அப்படி இறைவனுக்கு நைவேத்திய மான உணவை உட்கொள்ள, அது நம் உடலுக்குப் பெரும் சக்தியைத் தரும்.

தினம் தினம் வழிபடுவோம்!

ஆகவேதான், நமக்கு அனுதினமும் படியளக்கும் பரமனுக்கு நம் உணவை அர்ப்பணித்துவிட்டுச் சாப்பிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள் முன்னோர்.

ப்ரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவிர்
ப்ரம்மாக்னௌ ப்ரம்மனாஹூதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்ம கர்ம சமாதினா
சாந்தி  சாந்தி சாந்தி:


கருத்து: எனக்குள் இருக்கும் பிரம்மத்துக்கு இந்த பிரம்ம ஹவிசை, ஆஹூதி செய்கிறேன். இந்த ஹவிசானது பிரம்மத்தை அடைந்து சாந்தி பெறச் செய்யட்டும்.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, நம் அந்தராத்மாவை பிரம்மமாகக் கருதி, நமது உணவை ஹவிஸாக சமர்ப்பித்து விட்டு உண்பதால், உணவின் சக்தி பெருகும். உணவில் ஏதாவது குற்றமிருந்தாலும் நீங்கிவிடும். அந்த உணவால் உடம்புக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் நல்லதே விளையும்.

படித்தது மறவாமல் இருக்க...

யா தேவி ஸ்துதயே நித்யம் 
    விபுதைர்வேதபாரகை:
சா மே வசது ஜிஹ்வாக்ரே
    ப்ரம்மரூபா சரஸ்வதீ


பிரம்ம ரூபமானவள் சரஸ்வதி. அவளைப் போற்றும் இந்த ஸ்துதியை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து, தினமும் இதைச் சொல்லி கலைமகளை வழிபடச் செய்தால், படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் படிப்பது மனதில் அழுத்தமாகப் பதியும். அதன் பலனாய், தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.

பயணங்கள் சிறக்க...

பயணம் புறப்படும்போதும், பயணத்தின்போதும் கேசவனை வழிபட வேண்டும். அதற்கு இந்த ஸ்லோகம் உதவும்.

தினம் தினம் வழிபடுவோம்!

வனமாலி கதீ சார்ங்கி
 சங்கீ சக்ரி சனந்தகீ
ஸ்ரீமன் நாராயணோ விஷ்ணு
வாசுதேவோபி ரக்ஷது


இதைச் சொல்வதால், சங்குசக்ரதாரி நம் துணைக்கு வருவார். விபத்து பயம் அகலும்; பயணம் வெற்றி பெறும். கோளறு பதிகமும் படிக்கலாம்.

நாடு நலம் பெற...

காலே வர்ஷது பர்ஜன்ய:
ப்ருத்வீ ஸஸ்யஷாலினீ
தேஸோஹம் க்ஷோபரஹித:
ப்ராமணஸ்ஸந்து நிர்பயா:

தினம் தினம் வழிபடுவோம்!

கருத்து:  உரிய காலத்தில் மழை பொழியட்டும். பூமி பயிர் பச்சைகளுடன் பசுமையாக இருக்கட்டும். தேசம் வளர்ச்சி அடையட்டும். பிராமணர்கள் (பிரம்மத்தை நோக்கிய பயணத்தில் உள்ளவர்கள்) பயமில்லாமல் இருக்கட்டும்.

சர்வே பவந்து சுகின:
சர்வே சந்து நிராமயா:!
சர்வே பத்ராணி பச்யந்து மா கஸ்சித் துக்கபாக் பவேத்!!


கருத்து:  அனைவரும் இன்புற்றிருக்கட்டும், அனைவரும் கவலையற்று இருக்கட்டும், அனைவரும் சுபிட்சமாக இருக்கட்டும், அனைவரும் துக்கத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கட்டும்.
கோயில்களிலும், யாகங்களிலும் பூஜையின் முடிவில் இந்த ஸ்லோகங்களைச் சொல்லி நிறைவு செய்வார்கள்.

நாடும், நாட்டு மக்களும் செழிப்பான வாழ்வைப் பெறுவதற்கு, மிக அற்புதமான இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபட்டு, பலனடையலாம்.

தூங்கப் போகுமுன்...

காயேனவாசா மனசேந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ரக்ருதேஸ்ஸ்வபாவாத் !
கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்ப்பயாமி !!

தினம் தினம் வழிபடுவோம்!

கருத்து: உடலாலோ, மனதாலோ, இந்த்ரியங்களாலோ, புத்தியினாலோ, இயல் பான சுபாவத்தாலோ எத்தனை பாவங்கள் செய்தேனோ, அனைத்தையும் நாராயணா என்று அவன் நாமத்திலே சமர்ப்பிக்கிறேன் என்று மானசீகமாக இறைவனிடம் வேண்டும் ஆத்ம மன்னிப்பு இது.

சின்ன விஷயங்கள்... பெரிய பலன்கள்!

1) வீட்டில் கோலமிடுவது சிறப்பு. அபார்ட்மென்ட் எனில் சமையல் மேடை, பூஜை அறையிலாவது கோலமிடவேண்டும். அரிசி மாவினால் கோலம் போடுவதே உத்தமம். 

2) வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம், பூக்கள், பழங்கள், தாம்பூலம் கொடுப்பது விசேஷம். இதனால், வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும். தாம்பூலம் கொடுக்கும்போது தட்சணையாக ஒரு ரூபாயாவது வைத்துக் கொடுக்கவேண்டும்.  தாம்பூலம் பெறும் சுமங்கலிகளை லட்சுமியாகவே பாவிக்கவேண்டும்.

3) சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பசுக்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, ஒரு சில நிமிடங்களாவது அவற்றின் மகிமை குறித்து தியானித்து வணங்க வேண்டும்.

தினம் தினம் வழிபடுவோம்!

4 )வீட்டை சுற்றிலும் விருட்சங்கள் இருப்பது சர்வ மங்கலங்களையும் அளிக்கும். நோய்களும் அணுகாது. மரம் வளர்க்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டு வாயிலில் துளசிச் செடி வளர்த்து வணங்கலாம். சிறு தொட்டிகளில் வளரும் சிறு தாவரங்களை வளர்க்கலாம். இதனால், பிராண சக்தி அதிகரிக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

5) வீட்டு வாசலில் கருட கிழங்கு (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) கட்டித் தொங்கவிட்டால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. அதேபோல், மாவிலைத் தோரணங்கள், துளசிச் செடி ஆகியனவும் தீய சக்திகள் நம் வீட்டுக்குள் வருவதைத் தடுக்கும் வல்லமை பெற்றவை.

6) அன்னபூரணியை அரிசியில் வைப்போம் இல்லையா, அந்த அரிசியை மாற்றும்போது, மொத்தமாக அரிசி வைக்கும் பாத்திரத்தில் மாற்றிவிடுவது நல்லது. பெரும்பாலும் வளர்பிறை, குளிகை காலங்களில் செய்வது நல்லது.

7) திருமாங்கல்யத்தை மிகவும் நைந்து பழசாகும் வரை வைத்திருக்காமல், ஓரளவு நன்றாக இருக்கும்போதே மாற்றிவிடுவது நல்லது. அசந்தர்ப்பமாக மாற்ற வேண்டிய நெருக்கடியைத் தவிர்க்கவே இந்த யோசனை. பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி விளக்கேற்றி வைத்து, திருமாங்கல்யம் மாற்றலாம். காலையில் செய்வதே சிறப்பு!

கணபதியைக் கைதொழுவோம்!

திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கரம் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம்
               போற்றுவோம்.


வேழ முகமும், பேழை வயிறும், அங்குச பாசமும் கொண்டு திகழும் பிள்ளையார், பிரணவ சொரூபம். இவரை தினந்தோறும் வழிபட்டால் சகல சம்பத்துகளும் தடையின்றி வந்து சேரும்.  கடன் தொல்லை, மனக் கவலை, சனி தோஷம் முதலான கிரக பீடைகள் ஆகிய அனைத்தையும் போக்க வல்லவர் பிள்ளையார். கல்வி வளமும், வியாபார அபிவிருத்தியும் அடைய ஆனை முகனை கைதொழ வேண்டும்.

தினம் தினம் வழிபடுவோம்!

இவருக்கான பூஜை முறைகள் அதி சுலபமாக இருப்பது, மிகவும் விசேஷம். சிறிது மஞ்சளைப் பிடித்துவைத்தால் போதும்; கனஜோராக அதில் எழுந்தருளிவிடுவார் கணபதி. அர்ச்சனைக்கு அருகு, பிரசாதத்துக்கு வெல்லமும் பொரிகடலையும்கூட போதும். தும்பை சாற்றி வழிபட்டாலே மகிழ்ந்து வரம் தரும் வள்ளல் இவர்! விநாயகருக்கு அருகு சாற்றி வழிபட்டால், பூர்வ ஜன்ம பாவங்கள் மொத்தமும் விலகியோடுமாம்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில பகுதிகளில், பிரசித்தமான பிள்ளையார் வழிபாடு ஒன்று உண்டு. ஒரு சதுர்த்தி தினத்தில், சிறு பிள்ளையார் விக்கிரகத்துக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சந்தன- குங்கும திலகம் இட்டு அலங்கரித்து, அவல், பொரிகடலையோ அல்லது மோதகமோ சக்திக்கேற்ப நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள். பிறகு எது குறித்துப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அந்த வேண்டுதலை நினைத்து சங்கல்பித்துக் கொண்டு, பிள்ளையாரை ஒரு சர்க்கரை டப்பாவில் போட்டு மூடி வைத்து விடுவார்கள். அடுத்த சதுர்த்தியன்று மீண்டும் அவரை வெளியே எடுத்து பூஜிப்பார்கள். இதே விதமாக பூஜை தொடரும். பெரும்பாலும், மூன்று சதுர்த்திகளுக்குள் வேண்டிய வரம் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேலுண்டு வினையில்லை!

முருகனை வழிபட்டால், முகுந்தன், ருத்ரன், கமலன் ஆகிய மும்மூர்த்தியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

நம்முடைய வினைப்பயனே நமக்குக் கிடைக்க வேண்டிய நல்லனவற்றைத் தடுக்கும். வினையை வேர் அறுப்பதில் நம்முடைய வேலனுக்கு நிகர் வேறு தெய்வமில்லை. சரி! வேலவனை எந்த நாளில் வழிபடுவது, எப்படி வழிபடுவது?

தினம் தினம் வழிபடுவோம்!

தண்ணருள் தரும் தன்னிகரில்லா தெய்வமாம் வேலவனை எந்நாளும் வழிபட வேண்டும். குறிப்பாக சஷ்டி தினங்களிலும், மாதாந்திர கார்த்திகை மற்றும் விசாக நன்னாட்களிலும், வாரத்தில் செவ்வாய் அன்றும் வழிபடுவது விசேஷம்.

குறிப்பிட்ட தினங்களில், முருகப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலும்,  பஞ்சாமிர்தமும் நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றிவைத்து பூஜிக்க வேண்டும். வழக்கமாக கந்தசஷ்டி சொல்லி வழிபடுவோம். அத்துடன் சுப்ரமண்ய புஜங்கம் பாடலையும் பாடி வழிபடலாம். தவிர, சுப்ரமண்ய மூலமந்திர ஸ்தவம் என்றொரு திவ்விய ஸ்தோத்திரம் உண்டு. இதைப் படித்து முருகனை வழிபடுவதால் தரித்திரம் விலகும், அஷ்ட ஐஸ்வரியங்களும் ஸித்திக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும், சத்ரு பயமும் பிணிகளும் விலகியோடும் என்பார்கள். அந்த ஸ்தோத்திரத்தில் ஒரு பாடல்...

சராரண்யோத்பவம் ஸ்கந்தம்
    சரணாகத பாலகம்
சரணம் த்வாம் ப்ரபன்னஸ்ய
    தேஹி மே விபுலாம் ச்ரியம்


கருத்து: சரவணப்பொய்கையில் உருவானவரும், ஸ்கந்தனும், தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பவருமான தங்களைச் சரணடைந்தோம். எனக்கு குறைவற்ற ஐஸ்வரியத்தை அளிப்பீராக.
இயன்றபோதெல்லாம் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி முருகனை வழிபடுங்கள்; அவரருளால் வாழ்க்கை வளமாகும்.

எட்டு வகை மலர்கள்!

சிவன் - அபிஷேகப் பிரியர், விஷ்ணு - அலங்காரப் பிரியர், நவகிரகங்கள் ஸ்துதி பிரியர்கள். 

எனவே, சிவாலய அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வழங்குவதும், அபிஷேக வைபவத்தைக்  கண்குளிரத் தரிசிப்பதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

தினம் தினம் வழிபடுவோம்!

அதேபோன்று பெருமாள் கோயில்களில் பெருமாளின் அலங்காரத்துக்கு சிறந்த மலர்கள், குறிப்பாக துளசி அளிப்பது விசேஷம்.

அதேபோன்று ஆலயங்களில் நவகிரகங்களை வலம் வந்து வணங்கும்போது வெறுமனே வலம் வராமல், நவகிரக காயத்ரி மற்றும் அவர்களுக்கு உகந்த துதிப்பாடல்களை பாடி வலம் வருவதால், பலன்கள் பன்மடங்கு பெருகும்.

இறைவனுக்கு நைவேத்தியமாக நாம் படைக்கும் அனைத்துமே அவர் படைத்தவைதான். ஆகவே, அளிக்கும் பொருட்களால் அல்ல, நமது அன்பும் அர்ப்பணிப்பும் கலந்த பக்தியால்தான் கடவுளின் கருணையைப் பெற முடியும். `ஆத்ம சமர்ப்பணம் விஷேஷத:' என்பார்கள். நமது ஆத்மா அவனுக்கானதாக மாறும்போது, நமது பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறும் என்பது கண்கூடு. அப்படி ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க எட்டு வகையான மலர்களைச் சுட்டிக் காட்டுகின்றன ஞானநூல்கள். அவை என்னென்ன தெரியுமா?

அஹிம்ஸா பிரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:
சர்வபூத தயா புஷ்பம் க்ஷமா
        புஷ்பம் விசேஷத: 
சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம் ஞானம் புஷ்பம் ததைவ ச
சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்


அஹிம்சை, இந்திரியங்கள் அடக்கம், பொறுமை, தயை, சாந்தி, தபம், ஞானம், சத்தியம் ஆகியவையே நாம் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எட்டு மலர்களாகும்.

ஏற்றமிகு ஏகாதசி விரதம்!

பாகவதர்களுடனோ,  அல்லது அவர்களுக்கு வழங்கிய பின்போ உண்ணும் உணவு சுத்தமானது ஆகும்.

கங்கை நதி சுத்தமானது.

தினம் தினம் வழிபடுவோம்!

விஷ்ணுவின் பாதக் கமலங்களை த்யானிப்பது சுத்தம்.

ஏகாதசி விரதம் சுத்தமானது. இந்த விரதத்தின் பின்னணியில் நமது உணவுப் பழக்கத்தின் தொடர்பை கவனித்தால் ஓர் உண்மை புலனாகும். பொதுவாக பௌர்ணமி, அமாவாசைகளில் கடல் அலைகள் பெரியதாகவும், வேகமாக ஆர்ப்பரிக்கவும் செய்யும். இந்த நீரின் எழுச்சிக்கும் பூமியின் ஆகர்ஷணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நமது உடலிலும் பெரும் பகுதி நீரால் அமையப் பெற்றது. ஜீரண உறுப்பில் தோன்றும் அமிலமும் ஒருவகையில் நீர்த்தன்மை உடையதுதானே!

இந்த 11-வது நாள் (ஏகாதசி) உபவாசத்தால் நமது நீர் சக்தியை கட்டுப்படுத்துவதன் மூலம், அடுத்து வரும் நாட்களில், உடலில் அதிக ஆர்ப்பரிப்பு இருக்காது. முக்கியமாக உணவு முழுமையாகச் செரிக்கப்படும். இதன் காரணமாகத்தான் ஏகாதசியன்று சுத்த (முழு) உபவாசம், மறுநாள் சூரியோதயத்துக்கு முன் சுண்டைக்காய், அகத்திக் கீரையுடன் சமையல் என ஏற்படுத்திவைத்தனர்.

அதேபோல், அகத்திக் கீரையை 15 நாட்களுக்கு ஒருமுறைதான் உணவில் சேர்க்க வேண்டும் என்பார்கள். இந்த நியதியும் ஏகாதசி விரதம் மூலம் நிறைவேறிவிடுகிறது.

இப்படி, சரிவிகித உணவில் மாதம் இரு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் ஏகாதசி விரதம், வயிற்றை, நாடியை சுத்தம் செய்யும்.

சுத்தம் பாகவதஸ்யான்னம்
சுத்தம் பாகீரதி ஜலம் 
சுத்தம் விஷ்ணுபத த்யானம்
சுத்தம் ஏகாதஸீ வ்ரதம்!


நாமும் ஏகாதசி புண்ணிய தினங்களில் விரதம் இருந்து வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.

மூன்று கடன்கள்!

 மனிதனாகப் பிறந்தவர்களுக்கு மூன்று கடன்கள் (கடமைகள்) உண்டு. அவை தேவ கடன், பித்ரு கடன், ரிஷி கடன் ஆகியனவாகும். இவற்றில் பண்டிகைகள், விழா வைபவங்கள் மற்றும் அனுதினமும் கடைப்பிடிக்கும் வழிபாடுகளால் தேவ கடன் நிறைவேறும்.

சாதுக்களுக்கும் அதிதிகளுக்கும் உணவு வழங்குவதன் மூலம் (அதிதிக் கடன் எனச் சொல்வதும் உண்டு)  ரிஷி கடனை நிவர்த்திக்கமுடியும். வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, குளிர்ந்த நீர் அளித்து பசியாற்றி, தாம்பூலம் கொடுத்து, உபசரிப்பதால் ரிஷிகள் மகிழ்கின்றனர்.

அடுத்து பித்ரு கடன். நைவேத்தியமான அன்னத்தை தினந்தோறும் காகத்துக்கு இடுவது சிறப்பு. காகங்களுக்கு இடும் அன்னத்தால் பித்ருக்கள் மகிழ்கிறார்கள். பித்ருக்கள் மகிழ்ந்தால் சந்ததி அபிவிருத்தி உண்டாகும். குழந்தைகள் கல்வி மற்றும் உத்தியோகத்தில் மேன்மை அடைவார்கள். அகால மரணம், விபத்துகள் நேராது.

தினம் தினம் வழிபடுவோம்!

அமாவாசையன்று காக்கைக்கு உணவிடல், பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுப்பதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும்.

இவை தவிர, இயன்ற வரையிலும் பசுவுக்குக் கைப்பிடி புல்லும், பழங்களும், பசித்தவர்களுக்கு உணவும், தாகமானவர்களுக்குக் குடிக்க நீரும், மனம் நொந்து திகழும் அன்பர்களுக்கு ஆறுதலும் அளிப்பது மிகுந்த புண்ணியச் செயல்களாகும். இதனால், நம் சந்ததியினர் வாழ்வும் சிறக்கும்.

பெண்களுக்கு மரியாதை!

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா: க்ரியா:


எங்கு பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தெய்வங்கள் மகிழ்கின்றன. அவ்வாறு இல்லாத இடங்களில் செய்யப்படும்  காரியங்கள் பலனில்லாமல் போகும். மனைவியை கிரஹலட்சுமியாகவும், தாயை பராசக்தியாகவும், சகோதரிகளை, பார்வதிதேவியாகவும், 13 வயதிற்கு மேல் கன்யா லட்சுமியாகவும், 12 வயதுக்குள் சுவாசினியாகவும் பாவித்து போஷித்தால், அந்த வீட்டில் லட்சுமி நித்யவாசம் செய்வாள்.

தினம் தினம் வழிபடுவோம்!

ஆக, இருக்கும் இடத்திலேயே லட்சுமி வசிப்பதை உணராமல் வெளியே தேடுவதாலென்ன பலன்? தாய், சகோதரிகள், இல்லாள் ஆகியோரை வார்த்தைகளால் துன்பப் படுத்தாமல் இருந்தாலே போதும்; தெய்வ அனுக்கிரஹம் பரிபூரணமாகக் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களைவிடவும் அன்பான வார்த்தைகளுக்கு மனம் கனிவது, பெண்களுக்கே உண்டான சிறப்பு குணமாகும்.

சுவாசினி பெண்கள், சட்டென கோபம் கொள்ளும் பருவத்தில் இருப்பவர்கள். சந்தோஷமும் அவர்களை சடுதியில் தொற்றிக் கொள்ளும். ஆகவே, அந்த பருவத்தில் இருக்கும் பெண்களை பெண்களை சின்னச் சின்ன விஷயங்களால் சந்தோஷப் படுத்துவது, திருமகளையே சந்தோஷப்படுத்துவதற்குச் சமம்.நவராத்திரியிலும் சுவாசினி பூஜை முக்கிய ஸ்தானம் வகிக்கிறது. அந்த வயது பெண் குழந்தைகள் நம் வீட்டுக்கு வர நேர்ந்தால் பழங்கள், வளையல், தாம்பூலம், மருதாணி, கண் மை... என அவர்களுக்கு விருப்பமான பொருட்களைக் கொடுத்து மகிழ்விப்போம். அவர்களின் ஆனந்தம், நமக்கு நித்திய ஆனந்தத்தை அளிக்கும்.

அபிஷேகப் பொருட்களும் பலன்களும்!

உங்கள் இல்லங்களில் சிவலிங்கம் வைத்து வழிபடுகிறீர்களா? எனில், அனுதினமும் முறைப்படி அபிஷேக ஆராதனைகள் செய்து அவரை வழிபட வேண்டும்.

தினம் தினம் வழிபடுவோம்!

சிவபெருமானை எந்தெந்தப் பொருளால் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை அனுபவசாலிகளான நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அவை:

** வலம்புரிச் சங்கு அபிஷேகம்: தீவினை நீங்கி நல்வினை சேரும். நினைத்தது நடக்கும்.

** சொர்ணா(தங்க)பிஷேகம்: வியாபாரம் வளரும்; எதிர்பார்த்தபடி லாபம் பெருகும்.

**  பன்னீர் கலந்த சந்தனக் குழம்பு: இல்லத்தில் லட்சுமிதேவியின் கடாட்சம் உண்டாகும்.

**  விபூதி: போகத்தையும் மோட்சத்தையும் தரும்.

**  சந்தனத் தைலம்: சுகத்தைத் தரும்.

**  திருமஞ்சனப் பொடி: கடன் மற்றும் நோய் தீரும்.

**  கரும்புச் சாறு: நோய் தீர்க்கும்.

**  எலுமிச்சம் பழம் (சாறு): பகையை அழிக்கும்.

**  இளநீர்: இன்பமான வாழ்வு தரும்.

**  பஞ்சாமிர்தம்: உடல்-உள்ளம் இரண்டும் வலிமை பெறும்.

**  தேன்: குரல் இனிமையைக் கொடுக்கும்.

**  நெய்: முக்தியைத் தரும்.

**  தயிர்: நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

**  பால்: பிணிகள் நீக்கும்; நீண்ட ஆயுள் கொடுக்கும்.

அவரவர் விரும்பும் ,பலனுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். முடியாதபோது நம்மால் எது முடியுமோ, அதை வைத்து அபிஷேகம் செய்யலாம். (கோயிலாக இருந்தால் அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம்.)

ஆலயம் தொழுவோம்!

ஆலயங்களுக்குச் சென்று வழிபடும்போது அங்கு நாம் கடைப்பிடிக்கவேண்டிய நியதிகளும் உண்டு.

கோயிலுக்குள் கொடிமரத்தின் அருகில்தான் விழுந்து வணங்க வேண்டும். கோயிலுக்குள் வேறு எந்த சந்நிதியிலும் அப்படி நமஸ்காரம் செய்யக் கூடாது.

தினம் தினம் வழிபடுவோம்!

முதலில் விநாயகரை வணங்கி அதன் பிறகு மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், அதாவது தென்திசையில் நின்று வடதிசையை நோக்கி தரிசிக்க வேண்டும். மேற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப்பக்கத்தில், தென் திசையில் நின்று வட திசையை நோக்கி தரிசனம் செய்ய வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் வலப்பக்கத்தில், மேற்கில் நின்று கிழக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும். வடக்கு நோக்கிய சந்நிதியில் - ஸ்வாமியின் இடப் பக்கத்தில் இருந்தபடி, மேற்குத் திசையில் நின்று, கிழக்கு நோக்கி தரிசிக்க வேண்டும்.

பிராகாரங்களில் வலம் வரும்போது - கோபுரத்தின் நிழலோ அல்லது கொடிமரத்து நிழலோ குறுக்கிட்டால், அதை மிதிக்காமல் வலம் வர வேண்டும். முடியவில்லை என்றால், அடுத்த பிராகாரத்தை வலம் வரலாம்.

எந்தக் கோயில் ஆனாலும் சரி... ஸ்வாமிக்கும் அவருக்கு எதிரில் உள்ள வாகனத்துக்கும் நடுவில் போகக் கூடாது.

கோயிலில் தரப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்களை இடக் கைக்கு மாற்றக் கூடாது. ஒரு காகிதத்தில் போட்டு மடித்து வைத்துக் கொள்ளலாம்.

வலம் வரும்போது 3, 5, 7, 9 சுற்றுகள் என அவரவர் சௌகரியப்படி வலம் வரலாம். ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் வலம் வரக் கூடாது.

ஸ்வாமிக்காகக் கொண்டு போகும் பூக்கள் அல்லது மாலையை, நம் இடுப்புக்குக் கீழே இருக்கும்படி கொண்டு போகக் கூடாது.

தொகுப்பு: சுபா கண்ணன்