தொடர்கள்
Published:Updated:

“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”

“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”

ரா.வளன்

“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”

வாசகிகள் எல்லா நன்மைகளையும் பெறவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துக்காகக் கடந்த ஆறு வருடங்களில் 175 திருவிளக்கு பூஜைகளை நடத்தியிருக்கிறது சக்தி விகடன். தற்போது, திருவிளக்கு பூஜையின் இரண்டாவது சுற்றைத் தொடங்கியுள்ள சக்தி விகடன், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் பூஜையை தருமமிகு சென்னையில் உள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில் கடந்த 17.5.16 அன்று நடத்தியது.

“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”

அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகாளிகாம்பாள் உற்ஸவ விக்கிரகத்தின் முன் வாசகிகளே திருவிளக்கை ஏற்றி, பூஜையை மங்களகரமாகத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ‘சொல்லின் செல்வர்’ பி.என்.பரசுராமன், “விளக்கேற்றும் போதேல்லாம் நம் பாவங்கள் விலகி, புண்ணியங்கள் சேர்ந்துகொண்டே வருகின்றன. இல்லங்கள்தோறும் மட்டுமின்றி, உள்ளங்கள்தோறும்  ஞான விளக்கேற்றி, ஒளி வீசச் செய்யுங்கள். அப்போதுதான் நம் வாழ்க்கை அர்த்தப்படும்; வேண்டுதல்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும்” என விளக்கு பூஜையின் மகிமைகளை விவரிக்க, வாசகியர் அனைவரும் நெஞ்சம் நெகிழ்ந்து, கை தட்டி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை மங்களகரமாக நடந்தேறியது.

“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”

“ரொம்பவே சுமாரா படிக்கிற என் பையன், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுல ஆயிரம் மதிப்பெண்ணுக்கும் மேல எடுத்திருக்கான். காரணம், தொடர்ந்து விளக்கு பூஜையில கலந்துகிட்டு என் பிரார்த்தனையை முன் வெச்சதுதான்னு நம்பறேன்” என மகிழ்ச்சியுடன் சொன்னார் சென்னை அம்பத்தூர் வாசகி லலிதா.

“விளக்கு பூஜைக்கு என தனிச் சக்தி உண்டு. அதுவும் சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜை என்றால், அதுக்குச் சக்தி இன்னும் அதிகம். அதான், மணப்பாறையில் இருந்து இங்கு வந்திருக்கேன். என் குடும்பத்துக்காக வேண்டிக்கிட்டேன். முக்கியமா, என் பொண்ணுக்குச் சீக்கிரம் தாலி பாக்கியம் கிடைக்கணும்கற பிரார்த்தனையை முன் வச்சிருக்கேன். நிச்சயம் அது பலிக்கும்னு நம்புறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வாசகி பாக்கியலஷ்மி.

“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”

இதுபோல் எண்ணற்ற பிரார்த்தனைகளுடன் கலந்துகொண்ட இன்னும் பல வாசகிகள் தங்களின் மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களில் சிலர், விளக்கு பூஜை நிகழ்வுகளை நாங்களும் தொகுத்து எழுதி அனுப்பலாமா என ஆர்வத்துடன் கேட்டனர். கரும்பு தின்னக் கசக்குமா என்ன? அடுத்த திருவிளக்கு பூஜையிலிருந்து, அந்த நிகழ்வுகளை, விளக்கு பூஜை அனுபவங்களை நமது வாசகிகளே சுருக்கமாக எழுதி அனுப்பப்போகிறார்கள்.

“புண்ணியம் சேர்க்கும் விளக்கு பூஜை!”

தங்களின் ஏகோபித்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றிருக்கும் சக்தி விகடன், எப்போதும் உங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கத் துணை நிற்கும்.

படங்கள்: ப.சரவணகுமார்