பிரீமியம் ஸ்டோரி
குருவருள் கைகூட...

ந்த ஒரு ராசியைச் சேர்ந்தவ ராக இருந்தாலும், ஒருவருக்கு குருவருள் என்பது மிகவும் அவசியம். குருவருள் இருந்தால்தான் திருவருள் சித்திக்கும். ஒவ்வொரு ராசி அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய குரு ஸ்தலங்கள்...

குரு பலம் வேண்டும் மேஷ ராசிக்காரர்கள், ஆலங்குடிக்குச் சென்று தரிசிக்கலாம். ரிஷபராசிக்காரர்கள் தரிசிக்க வேண்டிய தலம், தென்குடித் திட்டை; மிதுனம் - தக்கோலம்; கடகம் - இலம்பயங்கோட்டூர்; சிம்மம் - திருப்புலிவனம்; கன்னி - பாடி (சென்னை); துலாம் - சுருட்டப்பள்ளி; விருச்சிகம் - புளியரை (தென்காசிக்கு அருகில்); தனுசு - உத்தமர்கோவில்; மகரம் - கோவிந்தவாடி அகரம்; கும்பம் - திருவொற்றியூர்; மீனம்  மயிலை ஸ்ரீதட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்).

ஒவ்வொரு ராசிக்காரரும் வியாழக் கிழமைகளில், தங்களுக்கு உரிய இந்தத் தலங்களுக்குச் சென்று, 5 நெய் தீபங்கள் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக் கடலை மாலை அல்லது சுண்டல் சமர்ப்பித்து, முல்லை அல்லது மஞ்சள் நிற சாமந்தி மலர்களால் அர்ச்சித்து வழிபட, சகல நலன்களும் உண்டாகும். குறிப்பிட்ட தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவகிரக குருவையும்  தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு