தொடர்கள்
Published:Updated:

12 ராசி அன்பர்களும் வழிபட உகந்த கோயில்...

12 ராசி  அன்பர்களும் வழிபட  உகந்த கோயில்...
பிரீமியம் ஸ்டோரி
News
12 ராசி அன்பர்களும் வழிபட உகந்த கோயில்...

12 ராசி அன்பர்களும் வழிபட உகந்த கோயில்...

12 ராசி  அன்பர்களும் வழிபட  உகந்த கோயில்...

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. நோயற்ற வாழ்வு மட்டுமல்ல, அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்றுச் சிறப்புற வாழ அனைத்து ராசி அன்பர்களும் வழிபட உகந்த திருக்கோயில்தான் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

இந்தப் பிரபஞ்சமும் சரி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சரி... பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் ஆனவை. பஞ்சபூதங்களின் மாறுதல்களுக்கு ஏற்ப உலக உயிர்களின் வாழ்க்கையிலும் மாறுபாடுகள்் ஏற்பட்டு, அவர்களை அலைக்கழிக் கின்றன. உலகத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகள் பஞ்சபூத மாறுபாடுகளால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அம்பிகை இந்த உலகத்தில் அவதரித்து, சைவபுரம் என்று அழைக்கப்பெற்ற இன்றைய காவேரிப்பாக்கம் தலத்தில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து கடும் தவம் இயற்றி வழிபட்டாள்.

அம்பிகையின் தவத்துக்கு இரங்கிய ஈசன் அம்பிகைக்கு தரிசனம் கொடுத்தார். இறைவனிடம் அம்பிகை, ‘‘ஐயனே, இந்தத் தலத்துக்கு வந்து ஐந்து லிங்கங்களின் வடிவில் எழுந்தருளி இருக்கும் தங்களைப் போற்றி வழிபடும் பக்தர்கள் நோயற்ற வாழ்க்கையுடன், அனைத்து விதமான நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’’ என்று வரம் கேட்டாள்.

அம்பிகை கேட்டபடியே ஐயனும் வரம் தந்து அருள்புரிந்தார்.

12 ராசி  அன்பர்களும் வழிபட  உகந்த கோயில்...

ஐந்து லிங்கங்களின் வடிவில் ஈசனை பிரதிஷ்டை செய்து அம்பிகை வழிபட்ட இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஒவ்வொரு லிங்கமும் ஒரு பெயருடன் அழைக்கப் பெறுகிறது.

அகோரம்: அகோரம் என்னும் திருப்பெயரில் அமைந்துள்ள இந்த மூர்த்தம் அக்னி தத்துவத்தைக் குறிப்பதாகும். அக்னி தத்துவ ராசியான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசியைச் சேர்ந்த அன்பர்கள், தங்களுடைய ஜன்ம நட்சத்திர நாளில் தேன் அபிஷேகம் செய்து வழிபடவேண்டும்.

சத்யோஜாதம்: மண் தத்துவத்தைக் குறிப்பிடும் இந்த மூர்த்தியை ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மண் தத்துவ ராசி அன்பர்கள் தங்களுடைய ஜன்ம நட்சத்திர நாளில் பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகிய பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

தத்புருஷம்: வாயு தத்துவத்தைக் குறிக்கும் இந்த மூர்த்தியை, வாயு தத்துவ ராசி அன்பர்களான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசி அன்பர்கள் தங்கள் ஜன்ம நட்சத்திர நாளில் இளநீரும் தேனும் கலந்து அபிஷேகம் செய்து, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

12 ராசி  அன்பர்களும் வழிபட  உகந்த கோயில்...

வாமதேவம்: ஜல தத்துவத்தைக் குறிக்கும் இந்த மூர்த்தியை, நீர்த் தத்துவ ராசி அன்பர்களான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசி அன்பர்கள் தங்களுடைய ஜன்ம நட்சத்திர நாளில் பன்னீரும் சந்தனமும் கலந்து அபிஷேகம் செய்து, செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

ராசி, நட்சத்திரம் தெரியாத அன்பர்கள், பிரதான மூலவராக அருள்புரியும் ஈசான மூர்த்தியை ஐந்து பிரதோஷங்கள் தொடர்ந்து சென்று அபிஷேகம், வில்வ தளங்களால் அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்த கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் நோயற்ற வாழ்வுடன் குறைவற்ற செல்வமும் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.