Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

செய்வினைகளை செயலிழக்கச் செய்யும் நாச்சியம்மன்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

செய்வினைகளை செயலிழக்கச் செய்யும் நாச்சியம்மன்!

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பிரச்னைகளோடு வரும் பக்தர்களை அரவணைத்து, அவர்களின் கஷ்டங்களைத் தீர்ப்பதோடு, வாழ்க்கையை வளமாக்கி, வசந்தமாக்குகிறாள்... வாத்தலை நாச்சியம்மன்!

தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டமங்கலம்.

முன்னொரு காலத்தில் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட, அதில் அடித்துவரப்பட்டு குடமுருட்டி ஆற்றில் கரை ஒதுங்கியிருக்கிறாள் அம்மன். அதைப் பார்த்த கண்டமங்கலம் கிராம மக்கள் அங்கேயே  கோயில் எழுப்பி அவளை அமர்த்தியிருக் கிறார்கள். நான்கு கைகளைக்கொண்ட இந்த அம்மன் கிளி, உடுக்கை, பாசக்கயிறு, அன்ன கிண்ணம் என கைகளுக்கு ஒன்றை பிடித்தவாறு அம்சமாய் வீற்றிருப்பது தனி அழகு!
 
கோயிலின் கணக்கர் மெய்யழகன், அம்மனின் சிறப்புகளை மெய்சிலிர்க்கச் சொன்னார்...

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

‘‘ஒரு காலத்தில் பூவாளூர் செட்டியார்கள் மாட்டுவண்டி கட்டிக்கிட்டு மஞ்சள் எடுத்துக்கிட்டு தஞ்சாவூர் சந்தையில வியாபாரம் செய்ய இந்த வழியாதான் போவாங்க. அப்படிப் போகும்போது கோயில் முன்னாடி மரத்தடியில வண்டிய நிறுத்தி, சாப்பிட்டு ஓய்வெடுத்திருக்காங்க. அப்போ அம்மன் சின்னக் கொழந்தையா தோன்றி ஒரு மஞ்சள் வியாபாரிகிட்ட, ‘நான் குளிக்கப்போறேன், எனக்கு நீங்க வெச்சிருக்கிற மஞ்சளைக் கொடுங்க’னு கேட்டிருக்கா. அதுக்கு அவர், ‘இது மஞ்சள் மூட்டை இல்லை, கரி மூட்டை’னு பொய் சொல்லிட்டு, வண்டியக் கிளப்பியிருக்காரு. சந்தைக்குப் போய் வியாபாரத்துக்காக மூட்டையைப் பிரிச்சப்போ, மஞ்சள் எல்லாம் கரியா மாறியிருந்தது. ஓடிவந்து வாத்தலை நாச்சியம்மன்கிட்ட மன்னிப்புக் கேட்க, அம்மனும் கரியை மறுபடியும் மஞ்சளா மாத்திக்கொடுத்ததோட, அந்த வியாபாரியை கோயில் பணி செய்பவர்  ஆக்கிக்கிட்டா.

வடக்கு நோக்கி அம்மன் வீற்றிருப்பதால் அதிக சக்திகொண்டு ஆங்காரத்தோடவும், ஒங்காரத்தோடவும்தான் எப்பவும் இருப்பா. இதனால பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த கெட்ட சக்தியையும் செயலிழக்கச் செய்வா. அதுபோன்ற செயல்களால பாதிக்கப் பட்டவங்க, கோயிலின் தலவிருட்சமான வேப்பமரத் தோட அடி மண்ணை எடுத்து அதோட மஞ்சள், வெள்ளை எருக்கு, எலுமிச்சைப் பழத்தை எல்லாம் ஒரு துணியில கட்டி, அம்மனோட காலடியில வெச்சு பூஜை செஞ்சு, அவங்க வீட்டு வாசலில் கட்டினா... பில்லி சூனியமும், கெட்ட சக்திகளும் அந்த வீட்டை நெருங்க முடியாது. இந்த வேண்டுதலுக்கு தமிழகம் முழுக்க இருந்தும் பக்தர்கள் இங்க  வர்றாங்க’’ என்று விளக்கமாகச் சொன்னார், மெய்யழகன்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கண்டமங்கலத்தைச் சேர்ந்த மகாலெக்ஷ்மி, ‘‘எனக்கு ரெண்டு பசங்க. இளைய மகனுக்கு பிறந்ததில் இருந்து சரியா பேச்சு வரலை. நாலு வருஷமா நாங்க பார்க்காத டாக்டர் இல்லை. அப்போதான், ‘ஏதாச்சும் செய்வினைக் கோளாறா இருக்கலாம். வாத்தலை ஆத்தாகிட்ட உன் பாரத்தை இறக்கிவை’னு சொந்தக்காரங்க சொன்னாங்க. நானும் வேண்டிக்கிட்டேன். எப்படி சொல்வேன் அந்த அற்புதத்தை... கொஞ்சநாள்லயே அவனுக்குப் பேச்சு வந்துடுச்சு!’’ என்றவர் கண்கள்மூடி பரவசம் கொள்கிறார்.

‘‘திருமணம் தடைபடுறவங்க மூன்று செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு விளக்கேத்தி வேண்டிக்கிட்டா, அடுத்த மூணு மாசத்துல கெட்டிமேளம் கேட்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவங்க, குழந்தை பொம்மை அல்லது ஒரு கல்லை துணியில கட்டி அம்மன்கிட்ட வேண்டிக்கிட்டு தலவிருட்சமான வேப்பமரத்துல கட்டினா `குவா குவா' சத்தம் கேட்கும். கர்ப்பிணிங்க வளைகாப்புக்கு முதல் நாள் அம்மன்கிட்ட வளையல் வெச்சு, தாயையும் சேயையும் பத்திரமா பிரிச்சுக்கொடுக்க வேண்டிக்கிட்டு, அதை மரத்துல கட்டிட்டுப் போவாங்க...''

- பக்தர்கள் பலரும் அன்னையின் அருளை ஆனந்தத்துடன் அடுக்கினார்கள்.

வாத்தலை அம்மன் சரணம்!

கே.குணசீலன்

எப்படிச் செல்வது?

தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் நடுக்காவேரி வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் பேருந்துகள் கண்டமங்கலத்தில் கோயில் வாசலிலேயே நின்று செல்லும். திருச்சி மார்க்கமாக வருபவர்கள் கல்லணை வந்து திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, கண்டியூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் மூலமாக கோயில் வாசலிலேயே இறங்கிக்கொள்ளலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 - 12.30, மாலை 4 - 8.00

தொடர்புக்கு: கோயில் கணக்கர் மெய்யழகன் அலைபேசி எண்: 94421 80230

அருள் துளிகள்!

கோயிலின் தலவிருட்சமான வேப்பமரத்தை பேச்சியாயி மரம் என்றும் மணி விழுங்கும் மரம் என்றும் அழைக்கிறார்கள். நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் இந்த மரத்தில் கட்டும் மணிகளை, காலப்போக்கில் இந்த மரம் விழுங்கிவிடுமாம். அதனால்தான் இப்படியொரு பெயராம்.

மாதம்தோறும் பௌர்ணமியில் இங்கு அம்மன் முன் வளர்க்கப்படும் யாகத்தின் முன்பாக அமர்ந்து வேண்டினால், அது உடனே நிறைவேறும் என்பதால், ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் அனைத்து மதத்தினரும் வழிபடும் இந்த ஆலயம், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.