Published:Updated:

வேண்டுதல் பலிக்கட்டும்!

வேண்டுதல் பலிக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேண்டுதல் பலிக்கட்டும்!

வேண்டுதல் பலிக்கட்டும்!

வேண்டுதல் பலிக்கட்டும்!

க்தி விகடன் மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்திய இரண்டாவது சுற்றின் இரண்டாவது திருவிளக்கு பூஜை, திண்டிவனம் ஸ்ரீதிரௌபதி அம்மன் திருக்கோயிலில், கடந்த 31.5.16 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. திண்டிவனம் மட்டுமின்றி விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் என வெளியூர் வாசகியர்களும் திரளாக வந்து கலந்துகொண்டனர். விளக்கு பூஜையில் கலந்துகொண்ட வாசகியர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது. அப்படி சில வாசகியரின் கருத்துகள்...

வேண்டுதல் பலிக்கட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘சக்தி விகடன் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து இங்கே நடத்திய திருவிளக்கு பூஜை ஆத்மார்த்தமாக மிக அற்புதமாக நடந்தேறியது. சக்தி விகடனின் விளக்கு பூஜையில் சிறப்பு விருந்தினர் வரவழைக்கப்பட்டு சிறப்புரை ஆற்றுவது வழக்கம், ஆனால், இந்த முறை புதிய முயற்சியாக பூஜைக்கு வருகை தந்திருக்கும் வாசகியரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரையே சிறப்புரை ஆற்றச் செய்த விதம் புதுமையாக இருந்தது. சிறப்புரையாற்றிய வாசகி ரஞ்சிதம் அவர்களின் சிறப்புரை நன்றாக இருந்தது. சக்தி விகடனின் இந்தப் புதுமையான முயற்சி வெற்றி பெற வாசகியராகிய நாங்களும் என்றென்றைக்கும் உறுதுணையாக இருப்போம்” என்றார் திண்டிவனம் வாசகி ஆர்.சரஸ்வதி.

வேண்டுதல் பலிக்கட்டும்!

அதே ஊரைச் சேர்ந்த வாசகி ரஞ்சிதம் “ஆன்மிகத்தில் கூட புதுமையைப் புகுத்துவதில் சக்தி விகடனுக்கு நிகர் சக்தி விகடன்தான். அதனால்தான், இந்த முறை விளக்கு பூஜை நிகழ்வுகளை, சக்தி விகடன் ஆசிரியர் குழுவினர் எழுதாமல், வாசகர்களையே எழுத வைத்து அழகு பார்க்கிறார்கள். வாசகர்களாகிய எங்களையும், எழுத்தாளர்களாக்கிய புதுமை மகிழ்ச்சியளிக்கிறது. சக்தி விகடனின் இந்தப் புதுமையான முயற்சி எங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றார்.

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வலி, ஒவ்வொரு கஷ்டம். அதே நேரத்துல, எதையும் ஆத்மார்த்தமா செஞ்சா பலன் முழுவதுமாகவே கிடைக்கும்னு சொல்வாங்க. அப்படி சக்தி விகடன் ஆத்மார்த்தமா நடத்துற இந்த திருவிளக்கு பூஜைல கலந்துக்கிட்டதால, என்னோட வேண்டுதலும் நிச்சயம் பலிக்கும் என்றே நான் நம்புகிறேன்” என்றார் ராணி.

வேண்டுதல் பலிக்கட்டும்!

வாசகி ராணியின் நம்பிக்கை, திருவிளக்கு பூஜை முடிந்து சென்ற அனைத்து வாசகியர்களின் முகத்திலும் பிரதிபலித்ததைக் காணமுடிந்தது.

- ரா.வளன்

படங்கள்: தே.சிலம்பரசன்