Published:Updated:

அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

ம.சுமன்

அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்- முனுகப்பட்டு கிராமத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறாள் பச்சையம்மன்.  ஆரணியிலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்திலும், ஆற்காட்டிலிருந்து சுமார் 33 கி.மீ தூரத்திலும், செய்யாறில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்தத் தலம்.

பரந்துவிரிந்து பிரமாண்டமாகத் திகழும் ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது, பிரமிடு அமைப்பிலான அதன் விமானங்கள். அதுமட்டுமா? சுமார் 600 வருட பழைமை வாய்ந்ததாக ஊரார் போற்றும் இந்தத் திருக்கோயிலில் அம்மன் குடிகொண்ட கதையும் இந்தத் தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது!

தீவிர சிவபக்தரான பிருங்கி முனிவர், மறந்தும் பிற தெய்வங்களை வழிபடாதவர். ஒருமுறை, கயிலையில் அம்மையும் அப்பனும் கொலுவீற்றிருந்த தருணத்தில், வண்டு ரூபத்தில் வந்த முனிவர் சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுவிட்டுச் சென்றார். இதைக் கண்ட பார்வதிதேவி துணுக்குற்றாள். பிருங்கிக்கு மட்டு மல்ல உலகத்தவர் எவருக்கும் தன்னையும் சிவனாரையும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் எழக்கூடாது என்று தீர்மானித்தாள். அதற்கு ஒரே வழி சிவனாரின் திருமேனியில் தானும் இடம்பெற வேண்டும் என்று முடிவுசெய்தாள். பூலோகம் சென்று பெரும் தவம் இயற்றி சிவனாரின் திருமேனியில் சரிபாதி இடம்பெற விரும்பி பூமிக்கு வந்து சேர்ந்தாள்.

அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பூமிக்கு வந்தவள் ஞானியரின் தவ பூமியாம் திருவண்ணாமலை நோக்கிப் பயணப் பட்டாள். வழியில் வாழை மரங்கள் நிறைந்த ஒரு இடத்தைக் கண்டாள். அத்துடன் பொழுதும் சாய்ந்து விட்டதால், அங்கேயே மண்ணால் சிவலிங்கம் எழுப்பி, தவத்தைத் துவங்க எண்ணினாள். ஆனால், சிவனாரின் திருவிளையாடல் வேறுவித மாக இருந்தது. அவர் அந்த வாழைத் தோட்டத்தில் இருந்த நீரூற்றுகளை எல்லாம் மறைந்துபோகச் செய்தார். அதையறியாத பார்வதிதேவி, தன் மகன்களான கணபதியையும் முருகனையும் அழைத்து, பூஜைக்கு நீர் கொண்டு வரும்படி உத்தரவிட்டாள். அதையேற்று புறப்பட்டவர்கள் வெகுநேரம் ஆகியும் திரும்பியபாடில்லை. எனவே, தன் கையில் இருந்த பிரம்பினால் பூமியைத் தோண்ட, அந்த இடத்தில் கங்கை பொங்கியது. அதேநேரம் மகன்கள் இருவரும் இரண்டு நதிகளுடன் அங்கு வந்து சேர்ந்தனர். மூன்று தீர்த்தங்களும் சங்கமித்ததால் அந்த இடம் முனுகூட்டு என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்தில் ‘முனுகப்பட்டு’ என்றானதாகச் சொல்கிறார்கள்.

இவ்வாறு நீர் கிடைத்ததும் பார்வதியம்மையும் தான் விரும்பியபடி லிங்கத் திருமேனி செய்து ஸ்தாபித்து, வாழைப் பந்தல் அமைத்து அதன்கீழ் அமர்ந்து பூஜையைத் தொடங்கினாள். இந்திரன் முதலான வானவர்கள் எல்லோரும் விண்ணில் கூடி நின்று இந்த அற்புதத்தைத் தரிசித்து வணங்கினர். பூஜை மற்றும் தவத்தின் பலனாக வெகுவிரைவில் அம்மைக்கு சிவதரிசனம் கிடைத்தது; அவள் எண்ணமும் ஈடேறியது. அத்துடன் பச்சை வண்ண மேனியராக நாராயணரும் காட்சி தந்து, அம்பாள் வேண்டிக் கொண்டபடி உலகம் பசுமை மிகுந்து செழித்திருக்க திருவருள் புரிந்தாராம். அடியவர்களும் முனிவர்களும் பிரார்த்தித்துக்கொள்ள அம்பாளும் இங்கே பச்சையம்மனாக கோயில் கொண்டாளாம். சிவபெருமான் இங்கே மன்னாதீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

தனிப்பெரும் சக்தியாக போற்றி வணங்கப் படுகிறாள் பச்சையம்மன். குழந்தை வரம் வேண் டியும், சொந்த வீடு அமையவும், தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறவும் பக்தர்கள் இங்கு வந்து அம்மனை வழிபட்டு பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.

பிள்ளை வரம் வேண்டும் அன்பர்கள் கோயிலுக்கு வந்து பச்சையம்மனிடம் வேண்டிக் கொள்வதுடன், கோயிலுக்குப் பின்னால் உள்ள வேப்பமரத்தில் பிரார்த்தனைத் தொட்டிலைக் கட்டிவிட்டுச் செல்கின்றனர். அம்மனின் அருளால் வேண்டுதல் பலித்ததும், அம்மனுக்கு பச்சைப்புடவை சமர்ப்பித்து வழிபட்டுச் செல் கிறார்கள். சிலர், பச்சைப் பொங்கல் படைக்கி றார்கள். அதேபோல், பிரசாதமாக (மூலிகைகளால் செய்யப்படும்) பச்சை திருநீறு வழங்கப்படுவது, இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

திருமணம் தடைப்பட்டு நிற்கும் ஆண்-பெண் இருபாலாரும் இங்கு வந்து, கோயிலில் இணைந்து வளர்ந்து நிற்கும் அரசு-வேம்பு மரங்களின் கிளைகளில் தாலிக் கயிற்றைக் கட்டி, அம்மனைப் பிரார்த்திக்க, வெகுவிரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

மேலும், கோயிலுக்குள் செங்கற்களை சிறு வீடுபோன்று அடுக்கிவைத்துவிட்டுச் செல்கிறார் கள், பக்தர்கள். இதனால் விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்பது ஐதீகம்.
கோயிலின் அருகிலேயே வாமுனி-செம்முனி ஆகிய தெய்வங்கள் காட்சி தருகிறார்கள். இவர்களின் அருகிலுள்ள பாறையில் சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். தேங்காய் எந்த அளவுக்குச் சிதறுகிறதோ, அந்த அளவுக்கு நம்மைப் பீடித்திருக்கும் பில்லி-சூன்யம் போன்ற தீவினைகளும் கஷ்டங்களும் நம்மைவிட்டு சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.

அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு, பிரார்த்தனைப் பலித்த பக்தர்கள், முடிக்காணிக்கை அளித்தும் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கிறார்கள். இங்கே ஆடி மாதம் வெகு விசேஷம். ஆடி மாத திங்கட் கிழமைகள் மற்றும் ஆவணி மாதம் முதல் இரண்டு திங்கட்கிழமை களில் (மொத்தம் 7 திங்கட்கிழமைகள்) அம்மனுக்கு  சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடை பெறும்.
இந்த வைபவங்களில் கலந்துகொண்டு, பச்சையம்மனைக் கண்ணாரத் தரிசித்து மனதார வழிபட்டுச் சென்றால், நீங்கள் வேண்டியது பலிக்கும்; மனதில் நினைத்தது நடக்கும்!