Published:Updated:

கடக ராசிக்காரர்களே... வருமானம் பெருகும், புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! #Astrology

கடக ராசிக்காரர்களே... வருமானம் பெருகும், புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்...  விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! #Astrology
கடக ராசிக்காரர்களே... வருமானம் பெருகும், புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! #Astrology

கடக ராசிக்காரர்களே... வருமானம் பெருகும், புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! #Astrology

டகம் விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள். கடக ராசிக்காரர்களின் ராசி நாதனான சந்திரன், ராசிக்கு 9-ல் இருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறக்கிறது. இந்த வருடம் முழுவதும் சனிபகவான் 6-ல் நீடிப்பதால், குடும்ப வருமானம் அமோகமாக இருக்கும். வழக்கமாக வருகிற வருமானத்துடன் துணை வருமானத்துக்கு ஏதாவது ஒரு வழி பிறக்காதா என நீண்ட நாள்களாக யோசித்தீர்கள் அல்லவா? இப்போது அதற்கான நல்ல நேரம் ஏற்பட்டிருக்கிறது. மேல் வருமானத்துக்கு வழிவகை செய்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். 

வருகிற மே மாதத்திலிருந்து செவ்வாய் உங்கள் ராசிக்கு 7-ல் இடம்பெயர்ந்து மகரத்தில் உச்சமாகிறார். இதனால் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் கூடும். 

3.10.18 வரை குரு பகவான் 4-ல் தொடர்வதால் அலைச்சல், வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் உணர்வுபூர்வமாக அணுகாமல் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 4.10.18 முதல் 12.3.19 வரை குரு பகவான் 5-ல் அமர்வதால்,  இனிமையான காலகட்டமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தாய்மாமன் வழி உறவுகள் பலப்படும்.  

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், அடிக்கடி மனஇறுக்கம் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும், கேது 6-லும் அமர்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். உணவில் கட்டுப்பாடு அவசியம்.

மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். மகனுடைய உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்படும். சேமிப்புகள் கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும். 

மாணவ மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் மாநில அளவில் சாதனை புரிவதற்கு உரிய வாய்ப்புகள் இந்த ஆண்டு அமையும். சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். 

வியாபாரம், இந்த வருடம் அமோகமாக இருக்கும். வருமானம் பெருகும். புதிதாக கிளைகள் ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தவர்களுக்கு இந்த ஆண்டு யோகமான ஆண்டாக அமையும்.  புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு தொழில் தொடங்க எண்ணியவர்களுக்கு நல்ல வாய்ப்புக்ள அமையும்.

உத்தியோகத்தில், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் பணியில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். கடுமையாக உழைத்தும், உரிய அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு நல்ல மரியாதையும் கௌரவமும் ஏற்படும்.  அக்டோபர் 4-ம் தேதிக்கு

மேல் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

கலைத்துறையினரைப் பொறுத்தவரை சுக்கிரனும் சந்திரனும் சிறப்பான இடத்தில் இருப்பதால், கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். சின்னத்திரைக் கலைஞர்களுக்கும் நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். 

விவாசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நல்லவிதமான விளைச்சல் இல்லாமல் அவதிப்பட்டனர். அவர்களுக்கு இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருப்பத்துடன் நல்ல லாபமும் கிடைக்கும். 

மொத்தத்தில் இந்தத்  தமிழ்ப் புத்தாண்டு பெரிய யோகத்தையும்  மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம் 

ஈரோடு மாவட்டம், பவளமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துக்குமார சுவாமியை, பூசம் நட்சத்திர நாளன்று வழிபட்டு வாருங்கள்; மகிழ்ச்சி பெருகும்.

தொகுப்பு: எஸ்.கதிரேசன்
 

அடுத்த கட்டுரைக்கு