Election bannerElection banner
Published:Updated:

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யார் யார்? - அறநிலையத்துறையின் அதிர்ச்சித் தகவல்!

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை 200 பேர் ஆக்கிரமித்திருப்பது, மண்டல வாரியாக கோயில் சொத்து விவரம் கணக்கெடுக்கும்போது தெரியவந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழகக் கோயில்களின் சொத்து விவரங்களை விரைவில் சமர்ப்பிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு  உத்தரவிட்டது.  மதுரை மீனாட்சியம்மன் கோயில்  தீ விபத்தைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்து விவர அறிக்கையை சமர்ப்பிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு உட்பட்ட 11 மண்டலங்களைச் சேர்ந்த இணை ஆணையர்கள், சொத்துப் பட்டியல் விவரங்களைத் தயாரிக்க, கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, முதற்கட்டமாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சேலம் மண்டலத்தில் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 5000 கோயில்கள் உள்ளன. அவற்றுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள்குறித்த விவரம் சேகரிக்கப்பட்டது. 

''மண்டல கோயில்களின் சொத்து விவரம் கண்டறிய, 1,318 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, சேலம் மண்டலத்தில் உள்ள 550 கோயில்களின் சொத்து விவரம் சேகரிக்கப்பட்டு, இந்து சமய ஆணையர் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 200 பேர், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களைக் காலிசெய்ய வலியுறுத்தி, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது'' என்று  சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராசன் கூறினார்.

ஒரு மண்டலத்தில் மட்டும் 200 பேர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மீதமுள்ள பத்து மண்டலங்களில், விரைவில் சொத்து மதிப்பிடும் பணி நடந்து முடிந்தால்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள்குறித்து முழுமையாகத் தெரியவரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு