Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பித்ரு தோஷம் நீங்க வைக்கும் நென்மேலி பெருமாள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பித்ரு தோஷம் நீங்க வைக்கும் நென்மேலி பெருமாள்!

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

`முன்னோர்களுக்கு இதுவரை திதி கொடுக்க முடியவில்லையே' என்ற சங்கடத்தில் இருப்பவர்களின் மனக்குறையைத் தீர்த்து வைக்கிறார், லக்ஷ்மி நாராயணப் பெருமாள். காஞ்சிபுரம் மாவட்டம், நென்மேலியில் உள்ள அவரது ஆலயம் காசிக்கு ஈடாகக் கருதப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நென்மேலி கிராமம். முன்பு ‘புண்டரீக நல்லூர்’ என்று அழைக்கப்பட்ட இந்தக் கிராமம், மிகவும் பழமை வாய்ந்தது. கோயிலின் அர்ச்சகர் சம்பத் பட்டாச்சாரியார் நமக்கு தலவரலாற்றை விவரித்தார்.

``ஆற்காடு நவாப் காலத்தில் நாராயண சர்மா - சரஸவாணி என்ற தம்பதி வாழ்ந்துவந்தனர். திவானாக இருந்த நாராயண சர்மா, விஷ்ணுவின்மீது தீவிர பக்தி கொண்டவர். நவாப்புக்கு கொடுக்க வேண்டிய வரிப் பணத்தைக்கொண்டு, லக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்குத் திருப்பணி செய்தார் நாராயண சர்மா. இதனால் கோபமடைந்த நவாப், அந்த தம்பதியின் தலையைக் கொய்ய உத்தரவிட்டார்.

தம்பதி அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளாமல், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவிடந்தை (மாமல்லபுரம் அருகே உள்ளது) நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இறக்கும் தறுவாயில், தங்களுக்கு ஈமச்சடங்கு செய்ய வாரிசு இல்லையே என்று மனம் வருந்தினர். ‘கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு நானே பிள்ளையாக இருந்து ஈமச்சடங்கினை செய்கிறேன்’ என்று பெருமாள் உறுதியளித்தார். சொன்னதுபோல அவரே ஈமச்சடங்கினையும் செய்துவைத்தார்.

நாராயண சர்மாவின் மனைவி சரஸவாணியின் பெற்றோர், செய்யாறு அருகில் உள்ள வாழைப்பந்தல் என்னும் கிராமத்தில் திவானாக இருந்தார்கள். நவாப்பின் உத்தரவைக் கேள்விப்பட்ட அவர்கள், ‘எங்கள் மருமகன் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை நாங்கள் செலுத்திவிடுகிறோம். இருவரையும் விடுவிக்க வேண்டும்’ என்று நவாப்பிடம் முறையிட்டனர். ‘நான் செய்யவேண்டிய திருப்பணிகளைத்தான் உங்கள் மருமகன் செய்தார். என்னுடைய வேலையைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். அவரை மன்னித்துவிடுகிறேன்’ என்றார் நவாப்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து, சரஸவாணியின் பெற்றோர் மகளையும், மருமகனையும் ஊர் ஊராகத் தேடினார்கள். அப்போது அவர்களுக்குக் காட்சியளித்த பெருமாள், ‘திவானை தேடவேண்டாம். நான் அவர்களுக்கு மோட்சம் கொடுத்துவிட்டேன். அவர் வேண்டுதலுக்கு இணங்க நென்மேலி ஆலயத்தில் பிள்ளை இல்லாதவர்களுக்கும், பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கும் நானே ஈமச்சடங்கினை நடத்திவைத்து, திதி கொடுக்கிறேன்’ என்றார். அந்த சிறப்பினைப் பெற்றுள்ளதால்தான், இந்த ஆலயத்துக்கு மக்கள் பித்ரு தோஷ நிவர்த்தி செய்யவேண்டி பக்தியுடன் வருகிறார்கள்" என்றபடியே கோயிலின் உச்சிகால பூஜைக்கு தயாரானார் சம்பத் பட்டாச்சாரியார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

நென்மேலியின் பேருந்து நிறுத்தம் அருகிலேயே லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயம் உள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயம். மூலவர் லஷ்மி நாராயணப் பெருமாள். ஏழைக்கு இரங்கும் பெருமாள், அழகிய நாராயணப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அபூர்வமான மகாலட்சுமி சாளக் கிராமம் (கல்வடிவில்) உள்ளது. வியாபார அபிவிருத்தி, தொழில் மேன்மை போன்றவற்றுக்கு இந்த லட்சுமியை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தலவிருட்சம், பாரிஜாதம். ஆலயத்துக்கு பின்பக்கம் சடங்குகள் செய்வதற்காக விஷ்ணுவின் பாதம் அடங்கிய சிறிய மண்டபம் ஒன்று உள்ளது.

காசியின் பலன் இங்கே..!

ஒரு மகன் தன் பெற்றோரை கடைசி காலத்தில் சரியாகப் பராமரிக்கவில்லை எனில், அந்த மகன் இறந்த பிறகு, அவரின் பிள்ளைக்கு (பேரன்) பித்ரு தோஷம் ஏற்படும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் உடையவர்கள், திருமணம், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் நென்மேலி லக்ஷ்மி நாராயணப் பெருமாளை தரிசித்து தங்களது தோஷத்தை நிவர்த்திசெய்து கொள்ளலாம். காசியில் திதி கொடுத்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதற்கு ஈடான பலன் இங்கே திதி கொடுப்பவருக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பூஜை நேரம்

இங்கு தினமும் உச்சிகாலத்தில் பூஜை நடக்கிறது. ஹோமம் வளர்க்கப்படுவதில்லை. விஷ்ணு பாதம் அருகே, திதி கொடுப்பவரை அமரவைத்து தர்ப்பை, எள்ளு நீர் போன்றவற்றைக் கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள். அதன்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பிறகு சங்கல்பம் வாங்கி, பூஜை நடத்துகிறார் கள். வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டை துவையல் நெய்வேத்தியமாக படைக்கப்படுகி றது. பிறகு திதி கொடுத்தவருக்கு உணவு கொடுத்த பின் மற்றவர்களுக்கு பரிமாறப்படுகிறது.

விசேஷ தினங்கள்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

அமாவாசை, ஏகாதசி, பஞ்சமி, அஷ்டமி ஆகிய நாட்கள் பெருமாளை தரிக்க உகந்தவை. வளர்பிறை, தேய்பிறை என மாதத்துக்கு இவை இரண்டு முறை வரும். தேய்பிறையில் வரும் அமாவாசை, ஏகாதசி, பஞ்சமி, அஷ்டமி ஆகிய நான்கு நாட்களும் மிகவும் விசேஷமானவை. வளர்பிறையில் சுபமுகூர்த்த காரியங்களும், தேய்பிறையில் இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளையும் செய்ய வேண்டும்.

காசிக்குச் செல்ல இயலாதவர்களை, நென்மேலிக்கு அழைக்கிறார் பெருமாள்!

பா.ஜெயவேல், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

எப்படிச் செல்வது?

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் 5-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது நென்மேலி கிராமம். செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் நகரப்பேருந்திலோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 - 12.30 மணி. மாலை 4 - இரவு 7.00 மணி.

கோயில் தொடர்பு எண்: திதி கொடுப்பவர்கள் 044- 27420053 (சம்பத் பட்டாச்சாரியார்) என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். பூஜைக்கு தேவையானவற்றை கோயில் நிர்வாகமே செய்கிறது.