சக்தி விகடன் மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை, புதுச்சேரி ஸ்ரீவலம்புரி ஞான விநாயகர் திருக்கோயிலில், கடந்த 14.6.16 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விளக்கு பூஜையில் கலந்துகொண்ட வாசகியர்களில் சிலர் தங்களுடைய எண்ணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

“சக்தி விகடன் நடத்துற விளக்கு பூஜையில் பல சிறப்புகளையும், சம்பிரதாயம் மீறாத புதுமைகளையும் நான் தொடர்ந்து பார்த்து வியந்துட்டுதான் வரேன். அதேபோல், இன்னிக்கு இங்கே வருகை தந்திருக்கும் வாசகியர்களில் திருமதி சுபா கண்ணன் சிறப்புரையாற்றிய விதம் புதுமையாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சக்தி விகடனின் இதுபோன்ற புதுமையான முயற்சிகளும் ஆன்மிகச் சேவையும் என்றென்றும் தொடர, சக்தி விகடனின் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்” என மனம் நிறையச் சொன்னார் வாசகி தேவி.

“என் குடும்பத்துல சமீப காலமாகவே தீர்க்க முடியாத பெரும் பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கு. அதற்கொரு விடிவு தேடித்தான் இந்த விளக்கு பூஜையில வந்து கலந்துக்கிட்டேன். இப்போ என் மனசுல ஒரு நிம்மதி. என் பிரச்னை முடிவுக்கு வந்துடும்னு ஓர் உறுதியான நம்பிக்கை வந்திருக்கு. சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜைக்கு இருக்கிற சக்தியை என்னால முழுமையா உணர முடியுது’’ என்று நெகிழ்ச்சியும் பூரிப்புமாகச் சொன்னார் வாசகி ருக்மிணி.

ருக்மிணியின் வாழ்க்கையில் மட்டுமல்ல; விளக்கு பூஜையில் கலந்துகொண்ட அனைத்து வாசகிகளின் வாழ்க்கையிலும் சுபிட்சமும் அமைதியும் நிலவ, தீபத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமி நிச்சயம் அருள்பாலிப்பாள்.

- ரா.வளன்

படங்கள்: எஸ்.தேவராஜன்