Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கேட்டதைக் கொடுக்கும் கலியுக வரதர்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கேட்டதைக் கொடுக்கும் கலியுக வரதர்!

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

க்தர்களின் கஷ்டநஷ்டங்களைத் தீர்த்துவைப்பதோடு, சிறப்பாக வாழவும் அருள்புரிகிறார், கலியுக வரதராஜ பெருமாள். தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்யப்படும் பிரசித்தமான இந்தத் திருத்தலம், அரியலூருக்கு கிழக்கே 7 கிலோமீட்டர் தொலைவில் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது.

பெருமாளின் வரலாற்றுச் சிறப்புகளை மெய்சிலிர்க்கப் பேசத்தொடங்கினார் கலிவரதன் பட்டாச்சாரியார்...

‘‘சுமார் 250 ஆண்டுக்கு முன்பு மங்கான் என்பவரிடம் மாடுகள் நிறைந்த மந்தை இருந்தது. அதில் நிறைவுற்ற கருவுடன் இருந்த பசு ஒன்று, மேயச்சென்ற இடத்தில் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்தார் மங்கான்.

மூன்றாம் நாள் இரவு அவர் கனவில் அருள் வடிவுகொண்ட பெரியவர் ஒருவர் தோன்றி, ‘கவலைப்படாதே மகனே... இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஆலமரத்துக்கும் மாவிலங்கை மரத்துக்கும் இடையில், சங்கு இலைப் புதரில் கன்றுடன் பசுவைக் காண்பாய்’ என்று கூறி மறைந்தார். அடுத்த நாள் காலையில் அவரும் அவருடைய பணியாளர்களும் பெரியவர் சொன்ன இடத்தை அடைந்தார்கள். அவரைக் கண்டதும் பசு ‘ம்மா...’ எனக் கத்திக்கொண்டே அவரை நோக்கி வந்தது.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பசுவைக் கண்டவர்களுக்கு மற்றுமோர் ஆச்சர்யமும் காத்திருந்தது. கன்றுடன் பசு நின்றிருந்த அந்த இடத்தில், சாய்ந்துகிடந்த கம்பத்தில் பசு தானாகவே பாலைச் சொரிந்தது. அந்தக் கம்பத்தை கண்டு வியந்து தொட்டு வணங்கினர் அனைவரும். பின்பு பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு மீண்டும் மங்கான் கனவில் தோன்றினார் அந்தப் பெரியவர்.

‘யாருக்கும் காணக்கிடைக்காத காட்சியை நீ கண்டுள்ளாய். உன் முன்னோர்களுக்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியாய். சிதலவாடியில் வாழ்ந்த உன் முன்னோர்கள் திருமாலை வணங்கினார்கள். பெருமாள் கோயில்கட்ட கற்கம்பம் கொண்டுவரும்போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பத்தை அங்கேயே விட்டுட்டு வந்தார்கள். அந்தக் கம்பம்தான், நீ காண்பது. அந்தக் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன்னுடைய பசுவை மறைத்துவைத்தேன். உன்னையும் வழித்தோன்றல்களையும் ஊர் மக்களையும் காக்கவந்தவன் நான். கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் கலியுகப் பெருமாள்’ என கூறி மறைந்தார் அந்தப் பெரியவர். 

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

12 அடி உயரம் உள்ள கம்பத்தில் நாமத்தோடு பெருமாள் காட்சியளிக்கிறார். எல்லா கோயில்களிலும் உருவத்தோடு இருப்பார் பெருமாள். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். மகா சிவராத்திரி அன்று இங்கு திருமாலுக்கு அபிஷேகம் செய்யப்படும். விவசாயம் செழிக்கவும், நோய் தீரவும், பிள்ளைவரம் கேட்டு வருபவர்களின் வேண்டுதல்களையும் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த பெருமாள். இவர் அருள்பாலிக்கும் கம்பத்தின் கீழ் ஆஞ்சநேயர் இருக்கிறார். எந்த வைணவக் கோயில்களிலும் இல்லாத சிறப்பு இது. இங்குள்ள ஆஞ்சநேயர் ருத்ர அம்சம். கெதை இல்லாத, வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயர்.

இன்றுவரையிலும் இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தது கிடையாது. பொதுவாக, சக்தி குறைந்தால்

தான் கும்பாபிஷேகம் செய்வார்கள். ஆனால், இந்தக் கோயிலுக்கு நாளுக்கு நாள் சக்தி அதிகரித்துகொண்டுதான் வருகிறது’’ என்றார் கலிவரதன்.

பெருமாள் திருவருள்!

கோயிலின் நாகராஜன் பூசாரி பேசும்போது, ‘‘300 வருடப் பழமையான தலவிருட்சம் மாவிலங்கை மரம், கோயில் உட்புறத்தில் உள்ளது. விவசாயம், உடல்பிணி, திருமணம், குழந்தை பாக்கியம் என்று எந்த வேண்டுதல்களையும் உடனடியாக நிறைவேற்றி வைப்பார் கலியுக வரதராஜ பெருமாள். அவரைப் பிரார்த்தனை செய்துவிட்டு மாடு, ஆடு, நெல், தானியங்களை பக்தர்கள் கோயிலுக்குக் கொடுப்பது வழக்கம்’’ என்றார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பக்தர்களிடம் பேசினோம். ஜெயங் கொண்டத்திலிருந்து வந்திருந்த ஜெம்பு லிங்கம், ‘‘எங்கப்பா காலத்திலிருந்து இந்தக் கோயிலுக்கு வந்துட்டு இருக்கோம். விவசாயத்தில் மூணு வருஷமா தொடர்ந்து நஷ்டம். பெருமாள்கிட்ட முறையிட்டு, என் கஷ்டத்தை நீக்கினா காணிக்கையா மாடு செலுத்துறதா வேண்டிக்கிட்டேன். அடுத்த மூணே மாசத்துல நிறைவேற்றினார். கன்றோடு மாட்டை நேர்த்திக்கடனா செலுத்தினேன். அதே பருவத்துல விவசாயத்துல அதுவரை பார்க்காத மகசூல் கிடைச்சது. நெல், சிறுதானியங்களை பெருமாள்கிட்ட கொடுத்து கடனைச் செலுத்தினேன். இப்படி அஞ்சு வருஷமா பெருமாள்தான் என் விவசாயத்துக்கு நல்ல விளைச்சலைக் கொடுக்கிறார்; ஒவ்வொரு வருஷமும் மாடு, கன்று, நெல், சிறுதானியங்களை காணிக்கையாக்குறேன்’’ என்றார் பெருமாளின் சக்தியில் வியந்தும் மகிழ்ந்தும்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்தார்கள் அஸ்வினி - மணிகண்டன் தம்பதி. ‘‘எங்க மாமா பொண்ணைக் காதலிச்சேன். ரெண்டு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. பெருமாள்கிட்ட வந்து வேண்டிக்கிட்டேன்.  பிரச்னைகள் எல்லாம் ஒவ்வொன்றா சரியாச்சு. எங்க கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது. பெருமாள் அருளால எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருக்கு’’ என்றார் மணிகண்டன், முகமலர்ச்சியோடு. 

தொகுப்பு, படங்கள்: எம்.திலீபன்

எப்படிச் செல்வது?

அரியலூருக்குக் கிழக்கே 7 கிலோ மீட் டர் தொலைவில் உள்ளது கல்லங்குறிச்சி. அரியலூரில் இருந்து அரசுப் பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன. ரயிலில் வருபவர்கள் அரியலூரில் இறங்கி வரலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.30 - 12.30, மாலை 3 - 9.00 மணி வரை. சனிக்கிழமைகள் மிக விசேஷமாக இருக்கும் என்பதால், காலை முதல் இரவு வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

தொடர்புக்கு:

கோயில் தலைமை எழுத்தர் குமார் அலைபேசி எண்: 97866 05920

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism