Published:Updated:

‘கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘கடவுளுக்கு  நன்றி  சொல்லவே வந்தேன்!’
‘கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன்!’

‘கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன்!’

பிரீமியம் ஸ்டோரி
‘கடவுளுக்கு  நன்றி  சொல்லவே வந்தேன்!’

கோவை போத்தனூர் பகுதியில் அமைந்திருக்கும் பழைமையான கோயில் பேச்சியம்மன் கோயில். பேசாத குழந்தைகளை பேசவைக்கும் அற்புத சக்தி கொண்ட இந்தக் கோயிலில், இஸ்லாமியர்கள் தங்கள் திருமணத்துக்கு முன்பாக, தங்களுக்கு குறிப்பிட்ட பெண் அல்லது மாப்பிள்ளை பொருத்தமானவரா என்று திருவுளச் சீட்டு போட்டு உத்தரவு கேட்கும் சிறப்பு கொண்டது பேச்சியம்மன் கோயில்.

மகத்துவம் பொருந்திய கோவை போத்தனூர் பேச்சியம்மன் கோயிலில் கடந்த 28.6.16 அன்று திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், வாசகிகள் பெரும் திரளாக வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

‘கடவுளுக்கு  நன்றி  சொல்லவே வந்தேன்!’

“அறியாமை எனும் இருள் அகற்றி, இறைவனின் பேரருளை பெற்றுத் தருவதுதான் இந்த தீப ஒளி! இப்படியான கூட்டுப் பிரார்த்தனையில், நாம் எல்லோரும் ஒற்றுமையா கலந்துக்கிறது, நமக்குத்தான் பெருமை, நமது குடும்பத்துக்குத்தான் நன்மை” என, விளக்கு பூஜையின் மகிமைகளை சக வாசகிகளிடம் எடுத்துக்கூறி, திருவிளக்கு பூஜையை அவ்வளவு அழகாக நடத்திக் கொடுத்தார் பேச்சியம்மன் கோயிலின் நிர்வாக கமிட்டியை சேர்ந்த 75 வயது  ஜானகியம்மாள்.

“போன வருஷம் கோவையில் நடந்த விளக்கு பூஜையில், +2 படிச்ச என் பெண்ணுக்காக கலந்துகொண்டேன். அப்ப நான் வேண்டிக்கிட்ட மாதிரியே, என் பொண்ணு அதிக மார்க் எடுத்தது மட்டுமில்லாம, நாங்கள் வேண்டிகிட்ட மாதிரியே, என் பொண்ணை டாக்டருக்கு படிக்க வைச்சிருக்கேன். அதுனால, நன்றி சொல்றதுக்காகவே, நான் இந்த பூஜையில் கலந்துகிட்டேன். போன விளக்கு பூஜையில், என் பெண்ணுக்காக வேண்டிக்கிட்டவங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். இதேபோன்ற விளக்கு பூஜைகள் தொடர்ந்து நடக்கவேண்டும்னும் வேண்டிக்கிட்டேன்” என்று உணர்ச்சி பொங்க பேசினார் வாசகி சித்ரா.

‘கடவுளுக்கு  நன்றி  சொல்லவே வந்தேன்!’

“விளக்கு பூஜையில் கலந்துக்கணுமுனு ரொம் நாளா எனக்கு ஆசை. அதான், எங்க வீட்டைச் சுற்றி ஒட்டியிருந்த விளக்கு பூஜை போஸ்டர பார்த்த உடனே வந்து கலந்துகொண்டேன். நான் எதையும் எதிர்பார்த்து, இந்தப் பூஜைக்கு வரல. இந்த பூஜையில் கலந்துகிட்டதயே, நான் பாக்கியமாக கருதுறேன். எனக்கு அந்தச் சந்தோஷம் போதும்” என்று மகிழ்ச்சி பொங்க பேசினார் பிரியா.

அவர்களுடைய வேண்டுதல்கள் பலிக்கட்டும்; மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

- ரா.வளன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு