Published:Updated:

சிலை வைக்காதீங்க..மதுரை ஆதீனம் அட்வைஸ்!

சிலை வைக்காதீங்க..மதுரை ஆதீனம் அட்வைஸ்!
சிலை வைக்காதீங்க..மதுரை ஆதீனம் அட்வைஸ்!
சிலை வைக்காதீங்க..மதுரை ஆதீனம் அட்வைஸ்!

கடந்த சிலநாட்களாக அடக்கி வாசித்து வந்த மதுரை ஆதீனம், சிலைகள் வைக்கக்கூடாது என்றும் பொது இடங்களில் வைத்துள்ள சிலைகளை அகற்றவேண்டும் என்றும் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் அருணகிரி, தமிழக அளவில் பிரபலமானவர். அவரை நித்தி விவகாரம்தான் அகில உலக அளவில் பிரபலமாக்கியது. 'கடவுளே சொன்னார்' என்று நித்தியை மடாதிபதியாக்கி, பிறகு அவர் மடத்துக்குள் நுழையக்கூடாது என்று நித்தி மீது வழக்கு தொடர்ந்து... என சமீபகாலம் வரை பரபரப்புடன் இருந்த மதுரை ஆதீனமும் சரி... நித்தியும் சரி... அப்படியே அமுங்கிப் பம்மினார்கள்.


இப்போது சிலை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆதீனம்.
" தேசத்துக்காக உழைக்கும் தலைவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய போலீசார்,

##~~##
சிலைகளுக்குப் பாதுகாப்பு தரவேண்டி இருக்கிறது. இந்தச் சிலைகளால், கலவரங்களும் உயிரிழங்களும் ஏற்படுகின்றன. எனவே பொதுஇடங்களில் சிலைகள் வைப்பதற்குத் தடை விதிக்கவேண்டும்.
 
தலைவர்களுக்கு சிலை வைக்கவேண்டும் என்று உறுதியாக நினைத்தால், மக்களுக்கு இடையூறு இல்லாமல், தனியிடம் தேர்வு செய்து அங்கே அவர்களுக்கு சிலை வைக்கலாம். முதல்கட்டமாக, பொதுஇடங்களில் அமைத்துள்ள சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும். அடுத்து இனி, சிலை வைப்பதற்கு தடை விதிக்கவேண்டும் " என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மதுரை ஆதீனம்.
எப்படியோ... சிலை விவகாரத்தின் மூலம் மீண்டும் 'உள்ளேன் ஐயா' என்று ஆஜர் கொடுத்திருக்கிறார் மதுரை ஆதீனம் அருணகிரி.