Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்சத்திர வரிசையில் 3-வது, கிருத்திகை. இது, ஆறு தாரைகளை உள்ளடக்கியது (ஷட்கிருத்திகா முக்ய:). வேள்வியைத் துவக்க உகந்தது என்கிறது வேதம் (கிருத்திகா ஸ்வக்னிமாததீத:). அதன் தேவதை, அக்னி பகவான் (ஏதத்வா அக்னேர் நக்ஷத்திரம்).

வேள்வி செய்பவன், பரம்பொருளின் முகத்தில் இருந்து வெளிவந்தான். வேள்விக்கு ஆதாரமான அக்னியும் அதே முகத்தில் இருந்து தோன்றியவன். ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த தீப்பொறி, சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு துகள்களாகச் சிதறியது. அவற்றை கிருத்திகை நட்சத்திரத்தின் ஆறு தாரைகள் ஏந்தி, ஆறுமுகனை உலகுக்கு அளித்தனர். அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ ஆகிய பெயர் களைக் கொண்ட ஆறு தாரைகள், தீப்பொறிகளை தெய்வக் குழந்தையாக மாற்றி அளித்த அன்னைகள் என்கிறது புராணம் (சுபுணிகா எனும் தாரையைச் சேர்த்து, ஏழு தாரைகள் உண்டு என்கிறது வேதம்).

கிருத்திகைக்கு நெருப்புடன் தொடர்பு இருப்பதால், அதை அக்னி நட்சத்திரம் என்கிறது வேதம் (அக்னி நட்சத்திர மித்யபசாயந்தி). சூரியன் எனும் வெப்பம், கிருத்திகை நட்சத்திரத்துடன் இணையும் நாட்களை 'கத்திரி’ என்பர். வெப்பம் (சூரியன்) அக்னியுடன் (கிருத்திகை) இணையும்போது, பொறுக்க முடியாத அளவுக்கு வெப்பம் மாறுவதால், கத்திரி வெயில் வாட்டுகிறது என்கிறோம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

நட்சத்திர வரிசையில், கிருத்திகையை நாம் 3-வதாகச் சொன்னாலும், முதல் நட்சத்திரமாகவே கிருத்திகையைப் பார்க்கிறது வேதம். கிருத்திகையில் ஆரம்பித்து பரணியில் முடிக்கிறது. வாழ்வுக்கு ஆதாரம் வெப்பம். ஒரு பொருள் தோன்றுவதற்கும், மாறுபாடு அடைந்து, விரிவு அடைவதற்கும் வெப்பம் வேண்டும். ஆகவே, கிருத்திகை முதலிடம் வகிக்கிறது. உயிரினங்கள், ஒடுங்கி அடங்குவதற்கு, யம தர்ம ராஜனின் அபபரணி, கடைசியில் வந்தது. தோற்றம், அதன் மாற்றம், மறைவு ஆகிய மூன்றையும் நடைமுறைப்படுத்துவதில் பங்கு இருப்பதை, கிருத்திகை முதல் அபபரணி வரை உள்ள நட்சத்திர வரிசை, சுட்டிக்காட்டுகின்றன.

கிருத்திகை முதல் விசாகம் வரையிலான 14 நட்சத்திரங்களை, தேவ நட்சத்திரம் என்றும் (கிருத்திகா:ப்ரதமம், விசாகே உத்தமம் யானிதேவநட்சத்திராணி), அனுஷம் முதல் பரணி வரையிலான 14 நட்சத்திரங்களை, யம நட்சத்திரம் என்றும் குறிப்பிடுகிறது வேதம் (அனூராதா: ப்ரதமம் அபபரணீ ருத்தமம் யானி யம நக்ஷத்த்ராணி). ஜோதிட அடிப்படையில் பார்த்தால், அனுஷம் முதல் பரணி வரை 13 நட்சத்திரங்கள் இருக்கும். ஆனால், 14 உண்டு என்கிறது வேதம்.

உத்திராடத்துக்கும் திருவோணத் துக்கும் இடையே 'அபிஜித்’ எனும் நட்சத்திரம் உண்டு. அதையும் சேர்த்து, 14 எனக் கணக்கிடுகிற வேதம், அதனை 28-வது நட்சத்திரம் என்கிறது (பிராம்மணோவா அஷ்டாவிம்சோ நட்சத்திராணாம்). ராசி புருஷனின் தலையிலும் முகத்திலும் இடம் பிடித்த நட்சத்திரம் இது! கால் பங்கு சிரசிலும் முக்கால் பங்கு முகத்திலுமாக இருக்கிறது. மேஷம், ரிஷபம் ஆகிய ராசிகளில் சம்பந்தம் இருப்பதால், இதன் இயல்பு பாதத்தின் விகிதாசாரப்படி அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் தென்பட வாய்ப்பு உண்டு.

கிருத்திகையில் இருந்து 10-வது நட்சத்திரம் உத்திரம். அதன் 10-வது உத்திராடம். இந்த மூன்று (கிருத்திகை - உத்திரம் - உத்திராடம்) நட்சத்திரங் களுக்கும் ஆரம்ப தசை, சூரிய தசை. ஆறு வருடங்கள் இருக்கும் இது! குறைந்த எண்ணிக்கையில் இருக்கிற தசையும் இதுவே! ஆறு தாரைகளுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது தசா வருடம். இவர்கள், அளவுக்கு மீறிய உணவை ஏற்பார்கள்; பெண்ணாசை அளவற் றிருக்கும்; எதிர்ப்பைப் பொறுக்க முடியாமல், சீறுவார்கள்; சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும்; பெயர் மற்றும் புகழுடன் வாழ்வர் என கிருத்திகையில் பிறந்தவரின் குணாதிசயங்களை விளக்குகிறார் வராகமிஹிரர்.

கிருத்திகையில் பிறந்தவர்கள், அறம் செய்ய விரும்புபவர். செல்வச் செழிப்புடன் வாழ்வர். வேதம் மற்றும் தத்துவங்களை கற்றறிவர்.  குலப்பெருமை, செல்வாக்கு, அழகு ஆகியவற்றுடன் திகழ்வர். பிறருக்குத் தானம் செய்வர் என மாறுபட்ட விளக்கம் தருகிறார் பராசரர்.

கிருத்திகையின் முதல் பாதத்தில் பிறந்தவர், களையாக கம்பீரமாக இருப்பர். 2-வதில் அறிஞனாகவும் 3-வதில் சூரனாகவும் திகழ்வர். 4-ல், அதிகக் குழந்தைகளைப் பெற்று வாழ்வர் என பாதத்தின் பலனை விளக்குகிறது பிரஹத் ஸம்ஹிதை.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

உடன்பிறப்பு அற்றவர், சுயமரியாதை உடையவர், நீண்ட ஆயுள் கொண்டவர், உதவிக்கரம் நீட்டுபவர், அரட்டையிலும் அலசலிலும் நாட்டம் கொண்டவர் என வரையறுக்கிறது ஜோதிடம்.

மிருதுவும் கடினமும் கலந்த நட்சத்திரம், கிருத்திகை; நடுத்தரம் என்று சொல்லலாம். கடின வேலைகளுக்கு இந்த நட்சத்திரம் உகந்தது. விலங்கினங்களைக் கட்டியாள்வது, நெருப்பு உலோகம் கலந்த வேலை, உலைகளுடன் இணைந்த வேலை ஆகியவை இந்த நட்சத்திர இணைப்பில் சிறப்புப் பெறும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். அதேநேரம், சுபகாரியங்களுக்கு இதனைத் தவிர்க்கச் சொல்கிறது.

ஆன்மிக விஷயங்களில், கிருத்திகையின் மிருதுவான இயல்பு ஒத்துழைக்கும். கார்த்திகை விரதம் போல் கடும் விதிமுறை இருந்து செயல்படும் வழிபாடுகளையும் நிறைவு செய்யும். ஈசனை வழிபட, கார்த்திகை தீபம் சிறந்த நாள். கிருத்திகை நட்சத்திரத்துக்கு ராசி அதிபதி செவ்வாய்; மற்ற மூன்று பாதங்களுக்கு சுக்கிரன் அதிபதி. என்றாலும் அம்சகத்தில், குரு, சனி, செவ்வாய் ஆகியோரது தொடர்பு இருப்பதால் சளைக்காத உழைப்பும், தடுமாறாத சிந்தனையும், சுறுசுறுப்பான செயல்பாடும் இருக்கும். உலகவியலிலும் ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் இருக்கும். உடல் உழைப்பும் சிந்தனை வளமும் சரிசமமாகச் சேர்ந்து, இரு தரப்பினரையும் ஈர்க்கும் திறனைப் பெற்றிருப்பார்கள், இவர்கள்!

அம்சகாதிபதி பலவானாக இருந்தால், சுணக்கமின்றிச் செயலில் இறங்கி வெற்றி பெறுவர். ராசியிலும் அம்சகத்திலும் தென்படும் சந்திரன், பிறந்த நட்சத்திரத் தையும் பாதத்தையும் சுட்டிக்காட்டுவான். சந்திரன், மனதுக்குக் காரகன். அவனுடன் நட்சத்திரம் இணைந்திருப் பதால், அதன் இயல்பு மனதுடன் இணைந்திருக்கும். கிரகங்களும் நட்சத்திர பாதத்துடன் இணைந்தே இருக்கும். கிரகங்கள் சொல்லும் பலனில், நட்சத்திரங்களுக்கும் பங்கு உண்டு. இருபத்தேழு நட்சத்திரங்களில், ஏதேனும் ஒரு நட்சத்திரத்துடன் இணைப்புப் பெற்ற கிரகங்களின் அமைப்புதான், ராசி மற்றும் அம்சகம்!

ஒரு பாவத்தை அலசி ஆராய்வதற்கு, நவக்கிரகங்களின் ஒத்துழைப்பு அவசியம். பாவத்தின் இரண்டு பக்கங்களில் இருக்கும் கிரகங்கள், அதன் கேந்திரத்திலும் த்ரிகோணத்திலும் இருப்பவை, உபசயத்திலும் அபசயத்திலும் இருக்கிற கிரகங்கள், பாவத்தில் இருக்கும் கிரகம், அதோடு சேர்ந்த கிரகம், அதைப் பார்க்கும் கிரணங்கள், பாவாதிபதி நின்ற ராசிநாதன், பாவாதிபதியின் அம்சகநாதன், காரக கிரகம், லக்கினாதிபதி ஆகியோரின் தொடர்பு மற்றும் கிரகங்களின் ஷோடச பலன்கள் ஆகிய அனைத்தையும் அலசி ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்துப் பலன் சொல்லவேண்டும். பலன்களைச் சொல்வதற்குப் பயன்படுத்துகிற அத்தனை கிரகங்களும் நட்சத்திரங்களுடன் இணைந்தவையே!

நட்சத்திரங்களைப் பற்றிய விளக்கங்கள், ஜோதிடத்தில் மாறுபட்டிருக்கும். இது குறை அல்ல; நிறையே! நவக்கிரகங்களின் தாக்கம் நட்சத்திரத்தில் தென்படும்போது, அதன் இயல்பில் மாறுபாடு இருப்பது பொருந்தும். கிருத்திகையில் பிறந்த அனைவரும் ஒரே இயல்புடன் தென்படமாட்டார்கள். அவர்களின் பூர்வ புண்ணியம், முன் ஜென்ம வாசனை, கிரகங்களின் இணைப்பு ஆகிய அனைத்தும், கிருத்திகையில் பிறந்தவர்களை தனித்தனி இயல்பு கொண்டவர்களாகக் காட்டும்! துல்லியமான அவர்களின் தரம், வெளிச்சத்துக்கு வர உதவுகிறது என்கிறது ஜோதிடம்.

ஸுவர்ணா, கனகா, ரக்தா, கிருஷ்ணா, ஸுப்ரபா, பஹுரூபா, அதிரிக்தா என ஏழு ஜ்வாலைகள் அதாவது நாக்குகள், அக்னி பகவானுக்கு உண்டு. கிருத்திகை நட்சத்திரத்துக்கு, வேதக் கண்ணோட்டத்தில் ஏழு தாரைகள் உள்ளன. அக்னியுடன் அதன் இணைப்பு துல்லியமாக உள்ளது. 'ரம் அக்னயே நம:’ என்று சொல்லி, அக்னி பகவானை வழிபடவேண்டும். உயிரினங்களின் உடலை இயக்குபவன் அவன். நம் உடலில் இருக்கிற அக்னி பகவானைப் போற்றுவது சிறப்பு. 'அக்னே நய’ எனும் மந்திரத்தை வேதம் தெரிந்தவர்கள், ஓதி வழிபடலாம்.

தெரியாதவர்கள், 'த்வமக்னே ஸர்வதேவானாம் சரீராந்தரகோசர: த்வம் ஸாக்ஷீ மம தேஹஸ்ய த்ராஹிமாம் தேவ ஸத்தமா’ எனும் ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கலாம்.

விண்வெளியில் கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்தாலும், பிரபஞ்சத்தின் அத்தனைப் பொருட்களிலும் ஊடுருவியிருப்பவன், அக்னி பகவான். நாம் உணரும் வெப்பமானது, அவனது உறைவிடம். நம்மில் உறைந்திருக்கும் அக்னி பகவானை, மனதில் இருத்தி வழிபட்டால், உடலியக்கமானது தடையின்றி நடைபெறும். நமது தவறுகளைப் பொசுக்கி உருத் தெரியாமல் செய்துவிடுவான் அக்னி பகவான். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட, மெய்ஞ்ஞானத்தின் துணை மிகவும் அவசியம். ஆகவே, அக்னி பகவானை ஆத்மார்த்தமாக வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism