Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

எங்கள் ஊர்க் கோயிலில் பிரதோஷ பூஜையில் பெண்கள் ருத்ரம், சமகம் மற்றும் ஸ¨க்தமெல்லாம் சொல்கிறார்கள். பெண்கள் ருத்ரம் முதலான மந்திர ஸ்லோகங்களைச் சொல்லலாமா?

- கணபதி ராமன், புனே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொல்ல வேண்டியவர்கள், சொல்வதில்லை; சொல்லத் தேவையில்லை எனக் கருதுவோர் சொல்கின்றனர். இந்த இரண்டு தரப்பினருமே தவறு செய்கின்றனர். இதில் ஒருவரது தவற்றைப் பறைசாற்றுவது பெருமைக்கு உரியது அல்ல! பேசத் தெரிந்தவர்கள் அனைவரும் எதையும் பேசலாம் என்கிற சுதந்திரத்தைத் தந்துவிட்ட பிறகு, அதில் ஆராய்ச்சி செய்வது உள்நோக்கம் கொண்டது!

சொல்ல வேண்டியவர்கள் சொல்லாது போனாலும் பலன் இல்லை; சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பவர்கள் சொன்னாலும் சிறப்பு இல்லை. இரண்டு பேரின் செயல்பாட்டுக்கும் பலன் கிடைக்காது.

ஆறாவது அறிவு, சரியான வழியில் வளராததால் ஏற்பட்ட  குறை, நம்மை அலைக்கழிக்கிறது. வேறென்ன சொல்ல..?

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம் செய்யலாம் என்கிறார்கள். இந்த ஹோமங்களை தனிப்பட்ட முறையில் வீட்டில் செய்யலாமா? அல்லது, கூட்டு வழிபாடாக ஆலயங்களில் செய்யவேண்டுமா? இந்த ஹோமங்கள் செய்ய உகந்த நாள், நியதிகள் குறித்து விளக்குங்களேன்.

- ஏ.ஆர்.ஆர்.சுதர்சனன், சென்னை-26

திருமணத் தடை நீங்கச் செய்யப்படும் பரிகாரங்களை, வீட்டில்தான் செய்ய வேண்டும்; ஆலயத்தில் செய்வது சரியல்ல. தனிப்பட்ட ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற, கூட்டுப் பிரார்த்தனை  பயன்படாது. பொதுவான அறம் வளரவே அது பயன்படும். தனது பாபத்தை விலக்க ஏற்கும் பரிகாரத்தை, கோயிலில் செய்வது தவறு. தவற்றைத் திருத்தச் செயல்படும் பரிகாரத்துக்கு கோயிலை அணுகுவது முறையல்ல. உலக நன்மைக்காகச் செயல்படும் கோயில்களை, நம் விருப்பத்தை நிறைவேற்றும் இடமாக மாற்றக்கூடாது. சிந்தனை மாற்றம், சௌகர்யம், ஏழ்மை, இயலாமை அத்தனையும் சேர்ந்து, கோயிலை பரிகாரத் தலமாக மாற்றியிருக்கிறது. வருவாயை ஈட்டும் நோக்கத்திலும், பரிகாரத்தைக் கோயிலில் வைத்துக்கொள்ளச் சம்மதிக்கிறார்கள்.

ஆறு கால பூஜையுடன் இணைந்த ஆலயங்கள், மக்களின் ஆன்மிக உணர்வை வளப்படுத்தி, பிறவிப்பயனை அடைய உதவுகின்றன. இறையுருவங்களின் பலவித பணிவிடைகளை நடைமுறைப்படுத்தி, அதன்படி பக்த ஜனங்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஏற்பட்ட ஆலயங்கள், தற்போது தனிமனிதனின் விருப்பத்தை நிறைவேற்றப் பயன்படுத்துகிற பரிகார ஸ்தலமாக மாறியிருப்பது காலத்தின் கட்டாயம். மக்களின் எண்ணங்கள் காலத்தை ஒட்டி மாறிக்கொண்டே இருப்பதால், விழிப்பு உணர்வு ஏற்பட்டுத் திருந்தும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் வருவதுபோல், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'இள மகாமகம்’ வரும் என்கிறார் பெரியவர் ஒருவர். இள மகாமகம் என்று உண்டா? உண்டு எனில், எப்போது வரும்? அதன் மகிமை என்ன?

- வி.சந்தான கிருஷ்ணன், கும்பகோணம்

##~##
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல்நாள் வரும் சதுர்த்தசியை, மாத சிவராத்திரி என்று சொல்வது உண்டு. மாசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசி, மகா சிவராத்திரி. அதைச் சிறப்புறக் கொண்டாடுகிறோம். அதற்காக, மாதந்தோறும் வருகிற சிவராத்திரியை, இளம் சிவராத்திரி என்று சொல்வதில்லை.

மாசி மகம், மாக ஸ்நானத்துக்கு உகந்த நாள். அன்று நீராடினால், பெரும்பேறு கிடைக்கப் பெறலாம். சிம்ம ராசியில் குரு இருக்கும் வருடத்தில் வருகிற மாசி மகம், மகாமகம் அதாவது மாமாங்கம் எனப்படும். அப்போது மகாமகக் குளத்தில் நீராடுவது சிறப்பு. குருவின் ஒரு சுற்று முடிய, 12 வருடங்கள் தேவை. ஆகவே, 12 வருடத்துக்கு ஒருமுறை வருகிற மாசி மகாமகம், சிறப்புப் பெறுகிறது. சில தருணங்களில் குருவின் அதிசாரம், வக்கிரம் ஆகிய நிலைகளால், 12 வருடம் நிறைவுறுவதற்குள், மகாமகம் வந்துவிடும். சிம்மத்தில் குரு இருக்கும்போது நிகழவேண்டிய மாமாங்கம், அவர் கன்னிக்குச் சென்ற பிறகு நிகழ்வது உண்டு.  

சிம்மத்தில் குரு இருக்கும் வேளையில், நம் சிந்தனையை ஆன்மிக வழியில் செலுத்தவேண்டும். உலகவியலைத் தவிர்க்கவேண்டும். சூரியன் வீட்டுக்கு குரு விஜயம் செய்கிறான். சிஷ்யனான சூரியன், குரு வழிபாட்டில் மூழ்கியிருக்கும் வேளையில், இரண்டு பேரின் பேரருள், உலகவியல் நிறைவுக்கு முழுமை சேர்க்காமல் போகலாம். ஆகவே, திருமணம் முதலான சிற்றின்பத்தை நினைத்துச் செயல்படும் விஷயங்களைத் தள்ளிப்போடப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ஸிம்ஹஸ்தே குரௌ விவாஹ நிஷேத:). திருமணத்துக்கு குரு பலம் தேவை என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் நாம். அதில் நெருடல் இருப்பின், திருமணத்தைத் தள்ளிப்போடுவது பொருந்தும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1945-ஆம் வருடம், பிப்ரவரி 26-ஆம் தேதி மாமாங்கம் வந்தது. இதையடுத்து 57-ஆம் வருடம் மாமாங்கம் வரவேண்டும். ஆனால், 56-ஆம் வருடம், பிப்ரவரி 25-ஆம் தேதி வந்தது மகாமகம். இதனை 'இள மகாமகம்’ என்று சொன்னால் பொருந்தும். முதுமை அடையாத ஒன்றை இளசு என்போம். அப்படியாக, இதையும் சொல்லி மகிழலாம்.

இதையடுத்து 68-ஆம் வருடம் பிப்ரவரி 14-ஆம் தேதி மகாமகம் வந்தது. இது, முழுமை பெற்றது என்பதால் மகாமகம் என்றானது. குரு, சிம்ம சாரத்தை வைத்து 12 வருடங்கள் என்பது பொருந்துமே தவிர, நம் வருடக் கணக்கு பொருந்தாது. அதனால்தான், ஒரு வருடம் குறைந்து வந்திருந்த இள மகாமகத்தைக் கணக்கிட்டு (56-ஆம் வருடம்), 68-ஆம் வருடம் மகாமகம் வந்தது. இளசு- முதுமை என்பதெல்லாம் நம் சிந்தனையில் விளைந்தவை. இளசுக்குத் தனிப்பெருமை இல்லை. வானசாஸ்திரத்துடன் இணைந்த மகாமகத்துக்கு நம் மாற்றுவிளக்கம், சிறப்பு தராது. அடுத்த மாமாங்கம், 80-ஆம் வருடம், மார்ச் 1-ஆம் தேதி  மாசி மகாமகம் வந்தது. அது முழுமை பெற்ற பிறகு வந்தது. கிரக சாரத்தின் அடிப்படையில் நிகழும் மாற்றத்தை, அதாவது வருடத்தின் ஏற்றக் குறைவைக் கொண்டு, சிறப்பு தருவது பொருந்தாது.

நம் பிறந்த நாள், நட்சத்திர அடிப்படையில், வருடம் முடிவதற்குள் அல்லது முடிந்த பிறகு வருவது உண்டு. அதைக் கொண்டு, பிறந்த நாள் தனிச்சிறப்பு பெறுவதில்லை. எல்லா மாமாங்கமும் ஒன்றுதான்! 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும். காலம் கடந்து எதிர்பார்ப்புடன் வருகிற பண்டிகையே, சிறப்புக்கு உரியது!  

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

எங்கள் வீட்டு பூஜையறையைத் திறந்தே வைத்திருப்போம். ஆனால், பூஜை மற்றும் வழிபாட்டு நேரம் தவிர, மற்ற நேரங்களில் சார்த்தி வைத்திருக்கவேண்டும் என்கிறார் மூதாட்டி ஒருவர். அது சரியா?

- எஸ்.ஏ.ராஜு, சின்னாளப்பட்டி

பூஜை முடிந்ததும், அறையைச் சார்த்திவிடலாம். இறைவன் குடியிருக்கும் பூஜையறைக் கதவைத் திறந்தபடி வைத்திருந்து, குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், பிற வேலைகளில் கவனம் செலுத்துவதும், சாப்பிடுவதும், அரட்டை அடிப்பதுமான செயல்கள் இறைவனை அவமதிப்பதாகும்! பூஜையறைக் கதவை மூடிவைப்பதில் தவறேதும் இல்லை.

நம் வீட்டில் ஒரு அறையை இறைவனுக்கு ஒதுக்கியிருப்பதாக நினைக்காதீர்கள். இறைவன் குடியிருக்கும் வீட்டில் நாம் வாழ்கிறோம் என நினையுங்கள். இதனால் பணிவு, பரிவு, பக்தி ஆகியன தழைக்கும். பகவானுக்கு கௌரவம் தருவதற்காக, பூஜையறைக் கதவைச் சார்த்துவதே உத்தமம்.

சனி பகவானை, 'சனைச்சரன்’ என்று அழைப்பதே பொருந்தும் என, காஞ்சி மகா பெரியவர் விளக்கியதாக பத்திரிகை ஒன்றில் படித்தேன். ஆனால், ராவணனுக்கும் சனி பகவானுக்கும் ஈஸ்வர பட்டம் கிடைத்த பெருமை உண்டு என்று சில நூல்களில் படித்தேன். ஆக, சனைச்சரன் என்பது சரியா?

சனீஸ்வரன் என்பது சரியா?

- பி.வி.குப்புசாமி, திருச்சி

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சனைச்சரன் என்ற பெயரே ஜோதிடத்தில் உண்டு. செய்யுள் வடிவில் கிரகங்களைச் சொல்லும்போது, சுருக்கமாக சனி என்று குறிப்பிடுவர் (நிஹந்தா பாபகிருத்சனி:). சனீஸ்வரன் என்ற பெயர் தவறானது. ராவணனுடன் ஈஸ்வர பட்டம் இணைந்த தகவலும், பிற்பாடு வந்த சொற்பொழிவாளர்களின் இடைச்செருகல்தான்! அது கர்ண பரம்பரையாக வளர்ந்து, பாமரர்கள் மனதில் பதிந்துவிட்டது.

பட்டமளிப்பு விழா ஏதும் நடைபெற வாய்ப்பு இல்லை. தவிர, அவர்களுக்கு இருக்கும் தகுதிக்கு, ஈஸ்வர பட்டம் தேவையில்லை. சனைச்சரனைப் பெருமைப்படுத்த, சான்றில்லாத பல கதைகளும் உண்டு. குசேலனின் ஏழ்மையைப் பறைசாற்ற, அவருக்கு 27 குழந்தைகள் என்றும், அஸ்வினி முதல் ரேவதி வரை, அவர்களது பெயர்கள் என்றும் சொல்லி, கதாகாலட்சேபத்தை களைகட்டச் செய்வது உண்டு. சனைச்சர கிரகத்தை அறி முகம் செய்தது, ஜோதிடம். அது சொல்லும் பெயர், சனைச்சரன். சாஸ்திரத்தில் உள்ள உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். கர்ண பரம்பரைக் கதையை நம்புவதைவிட சாஸ்திரத்தை நம்புவதே உத்தமம். 

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism