Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'இத்தினி வருஷமா பேசப் போறீங்களே, உங்களுக்குக் கிடைச்சது என்ன?’ - பக்கத்து வீட்டுப் பரமசாமி, ஆர்வத்துடன் கேட்டார். நண்பருக்கு இல்லமே பெருங்கோயில்; இல்லாளே குலதெய்வம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'புரியலை! என்ன கிடைச்சதுன்னா என்ன அர்த்தம்? சன்மானமா, பொன்னாடையா?’ என்று நான் கேட்க, அவரும் சிரித்துக்கொண்டே, 'அனுபவங்களைத்தான் கேட்டேன் சுவாமி!’ என்றார், வெள்ளந்தியாக.

##~##
அடேங்கப்பா... எத்தனையோ உண்டு. பயணங்களில், மேடைகளில், கோயில்களில், உணவகங்களில் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒருமுறை, இரவு 10 மணிக்கு பட்டிமன்றம் துவங்குவதாக இருந்தது. எனக்கோ ஆச்சரியம் ப்ளஸ் குழப்பம்... வழக்கமாக எல்லா ஊர்களிலும், 10 மணிக்கு பட்டிமன்றத்தை முடித்து, மைக்செட்டையே கழற்றிவிடுவார்களே!

பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை நடுவே, பரக்கலாக்கோட்டை என்று ஒரு கிராமம். அங்கே, ஸ்ரீமத்யபுரீஸ்வரர் கோயிலில், இரவு 10 மணிக்குப் பட்டிமன்றம். மறக்க முடியாத அந்த அனுபவத்தைப் பரமுவுக்கு விளக்கத் தொடங்கினேன்.

'அது மணலும் மணல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் அமைந்த கோயில்...’ எனத் துவங்கியதும் பதறிவிட்டார். 'இப்படிச் செந்தமிழ்ல பேசினா, நான் வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடுவேன்’ என்றார் நடுக்கத்துடன்.

'அந்தக் கோயிலுக்குள்ளே பெரிய ஆலமரம்; மத்தபடி அங்கே கருவறையும் இல்லை; மூலவரும் இல்லை...'' என்று சொல்ல, அவர் சட்டென்று எழுந்து, 'ஐயோ... சாமியே இல்லாத கோயில் அதென்ன கோயில்? கடவுளே, கலி முத்திப் போச்சா?’ என்றார் படபடப்புடன். அவரின் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக, 'பதறாதீங்க பரமு! அந்த ஆலமரத்தோட அடிப்பகுதிதான் கர்ப்பக்கிரகத்துல இருக்கிற சாமி! வாரத்துல ஒருநாள் (திங்கட்கிழமை), அதுவும் ராத்திரி 10 மணிக்கு மேலதான் கோயில் நடை திறப்பாங்க!’ என்றேன்.

உடனே நண்பர், 'என்னது... ராத்திரியில நடை திறக்கிற கோயிலா? நீங்க நல்லாப் பேசுவீங்கன்னு தெரியும்; பொய்யை உண்மை மாதிரியே பேசுறவர்னு இப்பத்தானே தெரியுது!’ என்றார் கடுப்புடன்.

'ஆத்தைக் கண்டதுமில்ல; அழகரைச் சேவிச்சதுமில்ல’ன்னு மதுரைப் பக்கத்தில் கிண்டலாகச் சொலவடை ஒன்று உண்டு. நண்பருக்கு விஷயத்தைப் புரியவைப்பதற்குள், போதும்போதும் என்றாகிவிட்டது. பரக்கலாக்கோட்டை சிவன்  கோயிலில், திங்கட்கிழமைகளில் இரவில் மட்டும் நடை திறப்பது வழக்கம்; பொங்கலின்போது பகலிலும் நடை திறந்திருக்கும்: அங்கே தருகிற ஆலமர இலை விசேஷம் என விவரித்தேன்.

அனைத்தையும் கேட்டு முடித்ததும், நண்பர் ஆவலோடு, 'சரி, அந்தக் கோயில்ல என்ன பிரசாதம் விசேஷம்?'' என்று கேட்டார்.

''அதான் சொன்னேனே... ஆல இலைதான் பிரசாதம்!''என்றேன். 'கால்ஷியத்துக்கு என்ன பண்றே?’ - 'அதான் சொன்னேனே, பால் தர்றேன்’ டி.வி. விளம்பரம் கதையாக, நண்பர் பரமு மீண்டும், 'ஆல இலை சரி, அதுல என்ன பிரசாதம்? கல்கண்டு சாதம், மிளகு தோசை, புளியோதரைன்னு எதுனா உண்டா?'' என்றார்.

ஆலமரமே ஈஸ்வரன்; அந்த மரத்தின் இலையே ஈஸ்வர பிரசாதம். 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ன்னு பாரதி பாடிய மாதிரி, ஈஸ்வரனின் அம்சத்திலிருந்தே ஒரு துளி பிரசாதமாகக் கிடைக்கிறதே, அதுவே விசேஷமில்லையா!

எதைப் புரிந்து உணர வேண்டுமோ, அதைக் கோட்டைவிட்டுவிட்டு, வேறெதையோ தேடிக்கொண்டு இருக்கும் 'பக்கத்து வீட்டுப் பரமு’க்கள் நம்மில் எத்தனை பேர்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism