
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''டென்ஷனான வேலை; யோகா பண்ணினா தேவலைன்னு ரொம்ப வருஷமா நினைச்சுக்கிட்டே இருந்தேன். அது, சக்தி விகடன் மூலமா இப்ப நிறைவேறியிருக்கு'' என்று நெகிழ்ந்தார் வாசகர் கார்த்திகேயன்.
''நண்பருக்கு சர்க்கரை நோய் இருந்துச்சு. சமீபத்துல அவர், இந்தப் பயிற்சியை எடுத்துச் செஞ்சதுல, சுகர் கொஞ்சம் கட்டுபாட்டுக்குள்ளே வந்துருக்குன்னார். எனக்கும் என் மனைவிக்கும் சர்க்கரை நோய் இருக்கு. அதனால, பயிற்சியில கலந்துக்கிட்டேன். சக்தி விகடனுக்கும் உலக சமுதாய சேவா சங்கத்துக்கும் நன்றிகள்!'' என்று பூரிப்புடன் தெரிவித்தார் வாசகர் ராமகிருஷ்ணன்.
''காலேஜ் ஃபைனல் இயர் படிக்கறேன். ஒருபக்கம், நல்லாப் படிச்சு, ஸ்கோர் பண்ணனும்; இன்னொரு பக்கம், கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைக்கணும். இப்படியான பரபரப்பும் படபடப்புமா இருக்கிற டென்ஷன்ல இருந்து, மனவளக் கலை பயிற்சி ரொம்பவே ரிலாக்ஸ் தருது!'' என்று உற்சாகத்துடன் பேசினார் விக்னேஷ்.
அந்த ரிலாக்ஸ் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!
- கோ.சுதர்சனன்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா
