Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

Published:Updated:
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
##~##
சா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யி லீலைகளின் கண்காட்சியே நடந்துகொண்டிருக்கிறது, பக்தை நளினியின் வீட்டில்! பகவானின் கருணை இங்கு எல்லை கடந்து பொங்குவதற்குப் பூர்வ அவதாரங்களுடன் தொடர்பும், பூர்வபுண்ணியமும் சேர்ந்திருப்பதே முழுமுதற் காரணம். சில வருடங்களுக்கு முன்பு, தங்கள் இல்லத்தில் சாயி நிகழ்த்திய அற்புதங்களை மகிழ்ச்சியுடன் கூறுகிறார், நளினி.

பகவானின் வழிகாட்டுதல் கிடைக்கத் தொடங்கி விட்டால், எதைப் பற்றிய சிந்தனைக்குமே இடமில்லா மல் போகிறது. அதே நேரத்தில், நம் வாழ்வின் முன்பின் நிகழ்வுகள், ஸ்வாமிக்கு தெளிவாகத் தெரியும் என்பதால், ஸ்வாமி சொற்படி நடந்து விடுவதே நல்லது. ''ஒருமுறை, 'இன்று ஆபீசுக்குப் போகவேண்டாம். வீட்டில் உட்கார்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்’ என்றார். அன்று ஆபீசில் முக்கியமான ஓர் (க்ஷீமீஜீஷீக்ஷீt) அறிக்கையை நான் தரவேண்டியிருந்தது. ஸ்வாமி சொன்னபடி, அவசரம் அவசரமாக விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிவிட்டு, 'ஸ்வாமி! மன்னிச்சுக்கணும். இன்னிக்குக் கட்டாயம் ஆபீஸ் போயாகணும்’ என்று மனதுள் சொல்லிக் கொண்டு, கிளம்பிப் போய்விட்டேன். அன்று முழுவதும் மின் வெட்டு. அந்த ரிப்போர்ட்டை அனுப்பவே முடியவில்லை.

வீட்டில் கல்யாணத்துக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சமும் இல்லை. ஆனால், ஸ்வாமிக்கு அந்த எண்ணம் இருந்தது. எனக்கோ என் கணவருக்கோ, ஏதேனும் சேமிப்புத் தொகை வந்தால், 'இந்தக் கடையில், இந்த டிசைனில் செயின் வாங்கு, நெக்லஸ் வாங்கு, வளையல் வாங்கு, வெள்ளித் தட்டு- டம்ளர் வாங்கு’ என்று சொல்லிச் சொல்லி, எங்கள் மகளின் கல்யாணத்துக்கு வேண்டிய சீர் பொருட்களைத் தயாராக்கி விட்டார், ஸ்வாமி. 'பூஜை அறையைச் சுத்தம் செய்; இந்த ஷெல்ஃபை சுத்தம் செய்’ என்பார். சில நேரம், இரவு 12 மணி வரை ஒழுங்குபடுத்திவிட்டு, அதற்குமேல் முடியாமல், 'ஸாரி ஸ்வாமி’ என்று படுக்கப் போய்விடு வேன். ஸ்வாமி தயாபரனாய் வந்து காட்டும் அன்புக்கு அளவே இல்லை. தாங்க முடியாத தலைவலியில் படுத்திருக்கும்போது, அந்த வேளைக்கு ஏற்றாற்போல, மணக்க மணக்கச் சமைத்து வைத்திருப்பார். மாயாபஜார் மாயமாய் பாத்திரங்கள் பளபள வென்று தேய்க்கப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். துணிகள் நன்கு துவைக்கப்பட்டு, பளீர் பளீரென்று துணி விளம்பரத்துக்குப் போட்டதுபோல் காய்ந்து கொண்டிருக்கும். பிள்ளைகளின் படிப்பு, எங்களின் நித்திய அலுவல்கள் எல்லாமே ஸ்வாமியின் வழிகாட்டுதலில்தான் நடக்கும். முன்கூட்டியே எச்சரிக்கை, முன்னேற்பாட்டு நடவடிக்கை, விசேஷ நாட்களில் வாழ்த்துக் கடிதம்-பரிசுகள் என்று தெய்வமாய், தாய்- தந்தையாய், தோழனாய் இருந்து சாயி, எங்களுக்குப் புரிந்துவரும் அனுக்கிரகத்தைச் சொல்லி மாளாது! இந்த அதீதமான அன்பையும் அருளையும் தாங்காமல், அழுதபடியே இருந்திருக்கிறேன். 'இப்படியெல்லாம் எங்களுக்குச் செய்கிறாயே, ஸ்வாமி! இதற்குப் பிரதியாய் எத்தனை ஜென்மமெடுத்து உனக்குச் சேவை செய்தாலும் தீருமோ!’ என மனம் உருகிக் கரைந்து கொண்டேயிருக்கும்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

பாடிக்கொண்டேயிருக்கும்போது ஒரு நாள், மகள் பவதாரிணி, 'ஸ்வாமி, நீ இத்தனையூண்டு உருவமாய் இருந்து கொண்டு, 'ஆஜானுபாகும் அரவிந்த லோசனம்’ என்று பாட வைக்கிறாயே’ என்று அலுத்துக்கொண்டாள். ஒருமுறை, நானும் கணவரும் அலுவலகம் சென்றிருந்த போது, மகள் மட்டும் வீட்டில் இருந்தாள். ஆறடி உயரமுள்ள ஒரு மனிதர், நாமம் அணிந்த வராய், ஆஜானுபாகுவான தோற்றத்தில் வந்து, 'உன் அப்பாவோட தோழன் நான். இந்த பார்சலைக் குடுத்துட்டுப் போக வந்தேன்’ என்று சொல்லி, மகளிடம் அந்த பார்சலைத் தந்துவிட்டு, புன்னகையுடன் பார்த்துவிட்டுப் போய்விட்டிருக்கிறார். இவள் உடனே அப்பாவுக்கு ஃபோன் செய்து, 'உங்கள் நண்பர் மோகனாமே... வந்து பார்சலைக் கொடுத்துவிட்டுப் போனார்’ என்று சொல்ல, அவர் திடுக்கிட்டார். 'இந்தா பாரு, என் ஃபிரண்டு மோகன் ரெண்டு மணி நேரமா என் பக்கத்துலயேதான் ஒக்காந்துண்டிருக்கான். யார் அங்கே வந்தது?’ என்று கேட்க, இவள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிப்போய்ப் பார்க்க, எப்போதோ நடந்து மறைந்து போயிருந் தார் அந்த மனிதர். அந்த பார்சலைப் பிரித்தால் ஒரு தங்க நாணயம், 100 ரூபாய் நோட்டு, பர்த்தி பாபா படம் ஆகியன இருந்தது.

ஒரு சில நாட்களுக்குப் பிறகு, ஓர் அழகான சிறுவன் வந்து விபூதி கேட்டிருக்கிறான். தன் பெயர் அரவிந்தலோசனன் என்று சொல்லி யிருக்கிறான். அந்த நேரம் பார்த்து வீட்டில் விபூதியே இல்லை. எங்கிருந்தோ தேடி ஒரு விபூதிப் பொட்டலத்தைக் கொண்டு வந்து பவதாரிணி கொடுக்க, வாங்கிக் கொண்டு... வீடு, பூஜையறை, விக்கிரகங்கள், ஹாலில் உள்ள படங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, தண்ணீர் கேட்டுக் குடித்து விட்டு, 'நாளைக்கு என் தங்கையுடன் வருகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே போய்விட்டானாம். மகளுக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் அலுவலகத்திலிருந்து வந்ததும் இதை அவள் சொல்ல... அன்று வந்த ஆஜானுபாகு மனிதரும், இன்று வந்த அரவிந்தலோசனனும் ஸ்வாமி பாபாதான் என்பது உறுதியாய்த் தெரிந்தது. 'அடடா... வந்த ஸ்வாமியை விட்டுவிட்டோமே!’ என்று மகள் புலம்பத் தொடங்கினாள்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

இதெல்லாம் சரி, 'நாளைக்கு தங்கை யோடு வருகிறேன்’ என்று சிறுவனாக வந்த ஸ்வாமி சொன்னாரே... அதென்ன என்று நாங்கள் யோசிக்கும்போதே, அடுத்த நாள் அந்த அற்புதம் நடந்தது. ஸ்வாமி, 'நான் வந்திருக்கிறேன்’ என்று சொல்லி, நடமாடத் தொடங்கியதிலிருந்து வீட்டிலிருக்கும், பூஜை அறையிலிருக்கும் அத்தனை தெய்வங் களுமே பிரத்யட்சப்பட்டன என்று சொன்னே னில்லையா... அந்த அதிசயம்தான் இப்போது நடக்கத் தொடங்கியது. 'சர்வதேவதா அதீத ஸ்வரூபன்’ என்று 'சாயி சகஸ்ரநாமாவளி’ ஸ்வாமியைப் போற்றுகிறது. சாயி கிருஷ்ணனல்லவா? காளி... சகோதரி, தங்கை அல்லவா! பூஜை அறையிலிருந்த, ஹாலில் இருந்த, அத்தனை கிருஷ்ண விக்கிரகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து, காளி படத்தைத் தாண்டி, நடுஹாலில் வரிசையாக வந்து நின்றன. ஆச்சர்யத்தில் மகள் கத்தினாள், 'அம்மா... இங்கே பாரேன்! எல்லாம் வரிசையாய் வந்து நின்னாச்சு. என்ன விசேஷம் இன்னிக்கு?’ என்று வரிசை கட்டி நின்ற கிருஷ்ண விக்கிரகங்களைப் பார்த்தபடி, என்னிடம் கேட்டாள். அஷ்டமியா, என்ன என்று பார்த்தால், அஷ்டமிதான். நடப்பதைப் பார்த்து, என்ன செய்வது என்று புரியாமல், பரபரவென்று சமையலறைக்குப் போய் பாயசம் வைத்தேன். நைவேத்தியம் தயாரிப்பதற்குள், எல்லா விக்கிரகங்களும் பசியோடு முகத்தை வைத்துக்கொண்டு, சமையலறையைப் பார்த்தபடியே திரும்பி நின்றன. 'நீ எப்ப பாயசம் வெச்சு, பசியைத் தீர்க்கப் போறே! பார் இவர்களை’ என்று மகள் பரபரக்க, பாயசம் வைத்து, ஆறவிட்டு, பூஜையறையில் வைத்ததுமே, அத்தனை கிருஷ்ண விக்கிரகங்கள் வாயிலும் பாயசம், முந்திரிப்பருப்பு! முகத்தில் பரம சந்தோஷம். அங்கங்கே திடீர் திடீரென்று கிருஷ்ணர் பாதம் பளீரிடும். 'ஸ்வாமி, இப்படி நீ பாதம்போட்டு நடந்தியானா, எப்படி நாங்க கால் வெச்சு நடக்கறது?’ என்று கேட்டால், ஷோகேஸில், பூஜையறைத் தட்டில், பாத்திரத்தில் இருக்கும் சாதம், சாம்பாரின் மேல் பாதம் போட்டு விடுவார். சாதத்தையோ, சாம்பாரையோ அள்ள

மனமே வராது. எப்போதாவது, நடந்ததைப் பேசிக்கொண்டே நானும் மகளும் படுத்திருக்கும் போது, திடீரென்று மகள் சத்தம் போடுவாள்... 'கொஞ்சம் தள்ளிப் படு; இங்கே பாரு’ என்பாள். பார்த்தால், எங்களுக்கு நடுவில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் படுத்திருக்கும்.

எந்த லோகத்தில் இருக்கிறோம் என்ற பிரமிப்பிலேயே பல தருணங்களில் திகைத்துப் போயிருக்கிறோம்.

கணவர் அனந்தராமனுக்கு அறுபது வயதானபோது, பட்டுப்புடவை, பட்டு வேட்டி, கல் வைத்த திருமாங்கல்யம் எல்லாம் பூஜையறையில் வைத்து, 'பர்த்தி வேணுகோபால ஸ்வாமி கோயிலில் திருமாங்கல்யதாரணம் நடக்கும்’ என்றார் ஸ்வாமி. அதன்படியே, ஆனந்தமாக அறுபதாம் கல்யாணம் நடந்தது.

கச்சேரி இருந்ததால், கல்யாணத்துக்கு வராத பவதாரிணிக்கு, வீடு வந்ததும் ஒரு ஃபோன் வந்தது. 'ஸ்வாமிநாதன் பேசறேன்’ என்றதும், 'ஓகோ... மிருதங்க வித்வான் ஸ்வாமிநாதன்’ என்று சிரித்தபடி, நன்றாகப் பேசிக் கொண்டிருந் திருக்கிறாள். அவரும் கலகலப்பாகப் பேசி முடித்துவிட்டு, 'நளினிக்கு இன்று காலை பர்த்தி வேணுகோபால ஸ்வாமி சந்நிதியில் திருமாங்கல்யதாரணம் ஆகி விட்டது’ என்று சொல்லி, ஃபோனை வைத்த பின்புதான் பேசியது ஸ்வாமி என்பது புரிந்தது பவதாரிணிக்கு. 'ஸ்வாமி...

ஸ்வாமி’ என்று கூப்பிட, ஃபோன் 'கட்’ ஆகிவிட்டது'' என நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தாள் நளினி.

இப்போது திருமணமாகி, அமெரிக்காவில் பணிபுரிந்தபடி சாயி சேவையில் ஈடுபட்டிருக்கும் பவதாரிணி, அடிக்கடி ஸ்வாமிக்காகப் பாடும் பாட்டு... 'வனமாலி ராதா ரமணா கிரிதாரி கோவிந்தா!’ - இந்த இல்லத்தில் சாயி புரிவதும் கிரிதாரியின் லீலைகளேயல்லவா?!

- அற்புதங்கள் தொடரும்

'பெயர் சூட்டி அருளிய சாயி!’

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

னக்கு இரண்டு மகள்கள். இளையவள் பிறந்து 27 நாட்களே ஆன நிலையில், ஸ்ரீசத்ய சாயி எங்கள் மகளை ஆசீர்வதித்தது, நெகிழ்ச்சியான சம்பவம்.

சாயி பகவான், நிகழ்ச்சி ஒன்றுக்காக ஊட்டிக்கு வந்திருந்தார். அவரைத் தரிசிக்க, குடும்பத்துடன் செல்வதாக இருந்தோம். என் இளைய மகள், பூச நட்சத்திர நாளில் பிறந்திருந்தாள். அடுத்த மாதம் வந்த பூச நட்சத்திர நாளில், பகவானைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் என்ன... தவிர்க்க முடியாத அலுவலக வேலையால், அன்றைய நாளில் என்னால் பகவானைத் தரிசிக்கச் செல்ல முடியவில்லை. என் மனைவி, மூன்று வயது மூத்த வளைக் கையில் பிடித்துக் கொண்டு, பிறந்த கைக் குழந்தையான இளையவளைத் தூக்கிக்கொண்டு, பாபாவைத் தரிசிக்கச் சென்றாள்.

நெடுநேரக் காத்திருப்புக்குப் பிறகு, பாபாவின் தரிசனம்! திருக்கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தபடியே, குழந்தைச் சிரிப்புடன் நடந்து வந்த ஸ்ரீசாயி, என் மகள்களை அருகில் அழைத்து, சின்னக் கரும்பலகையில், 'ஓம்’ என்று எழுதி இரண்டு பேரின் கைகளிலும் தந்தாராம். அதுமட்டுமா?! இளையவளை அப்படியே வாங்கி, தன் மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சினாராம். மூத்த மகளுக்கு 'பிரேமா’ என்று பெயர் சூட்டி, 'சந்தோஷம் பிரேம சந்தோஷம்’ என்று அருளிய பாபா, இளையவளுக்கு 'சாந்தி’ எனப் பெயரிட்டு, அன்பொழுக அழைத்தார். பிறகு, 'இப்படி பனி நேரத்தில் ஏன் சாந்தியை அழைத்து வந்தாய்?’ என்று கனிவுடன் கோபப்பட்டாராம் சுவாமி. பிறகு, பாபாவின் சிலிர்க்க வைக்கும் தரிசனத்தை என் மனைவி என்னிடம் விவரிக்க விவரிக்க, நெகிழ்ந்து போனேன், நான்.

சாயி பகவான் தொட்டு ஆசீர்வதித்து அருளிய இரண்டு மகள்களும் திருமணமாகி... பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் சந்தோஷமும் குதூகலமும் பொங்க, நிம்மதியாக வாழ்கின்றனர்.  இது சாயி பகவான் தந்த பிச்சை!

- டி.என்.வெங்கட், பெங்களூரு