Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 9

கயிலை... காலடி... காஞ்சி! - 9
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 9

ரெட்டைவட சங்கிலி... காமாட்சி அனுக்கிரஹமா?நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 9

ரெட்டைவட சங்கிலி... காமாட்சி அனுக்கிரஹமா?நிவேதிதா

Published:Updated:
கயிலை... காலடி... காஞ்சி! - 9
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 9
கயிலை... காலடி... காஞ்சி! - 9

த்வதந்ய: பாணிப்ப்யா: மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித - வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா ஸமதிகம்
ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ


அம்பிகையே! எல்லா தெய்வங்களும் தங்கள் திருக்கரங்களில் அபய வரத ஹஸ்தங்களை அபிநயம் செய்கின்றனர். ஆனால், நீயோ அப்படி எதுவும் அபிநயங்கள் செய்வதில்லை. காரணம், உன் திருவடிகளே உன்னைச் சரண் அடையும் பக்தர்களைத் துன்பக் கடலில் இருந்து மீட்டு, அவர்களை சந்தோஷம் அடையச் செய்கிறது.

- சௌந்தர்ய லஹரி

மஹா ஸ்வாமிகள் சொல்லியபடியே, எட்டு பவுனில் இரட்டை வட சங்கிலி வேண்டி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து அம்பாளுக்கு ஐந்து நமஸ்காரம் மற்றும் ஐந்து பிரதட்சிணம் செய்தாள். ஐந்தாவது நாளில் ஐந்து அர்ச்சனை தட்டுகள் வாங்கி பேத்தியின் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிரதட்சிணம் வந்தனர். நான்காவது பிரதட்சிணம் செய்யும்போது,

‘‘பாட்டீ, பாட்டீ’’ என்று பேத்தி சத்தமாக அழைத்தாள்.

பேத்தியின் உரத்த குரலைக் கேட்டு, ‘‘ஏன் இப்படி கத்தறே? கோயில்ல பிரதட்சிணம் பண்ணும்போது இப்படி சத்தமாகக் கூப்பிடலாமா? இப்ப என்ன பறிபோயிடுத்துன்னு இப்படி கத்தறே?’’ என்று சிடுசிடுப்புடன் கேட்டாள் பாட்டி.

‘‘ஒண்ணும் பறிபோகலை பாட்டி, ஒண்ணு கெடைச்சிருக்கு. கொஞ்சம் ஓரமா வாயேன், காட்டறேன்’’ என்றாள்.

கயிலை... காலடி... காஞ்சி! - 9

இருவரும் ஒரு ஓரமாகச் சென்றதும் பேத்தி தன்னுடைய கையை விரித்துக் காட்டினாள். அவளுடைய கையில் பதக்கம் கோர்க்கப்பட்ட இரட்டை வடச் சங்கிலி பளபளத்தது.

‘‘ஏதுடி இது? நோக்கு எப்படி கெடைச்சுது?’’

‘‘நோக்குப் பின்னால நான் குனிஞ்சிக்கிட்டே வந்தேனா, அப்ப ஒரு ஓரமா இது என் கண்ல பட்டுச்சு. இது அறுந்து கிடக்கே, பவுனா இருக்குமா? இல்லே கவரிங்கா இருக்குமான்னு பாரேன்’’ என்று சொன்னபடியே அந்த சங்கிலியை பாட்டியிடம் தந்தாள். அதை கையில் வாங்கிப் பார்த்த பாட்டி, ‘‘இது பவுனாத்தான் இருக்கும்ணு தோணுதுடி. எப்படியும் எட்டு பவுனுக்கு மேல இருக்கும். பெரியவா கிருபையால காமாட்சியேதான் நமக்கு அனுக்கிரஹம் செய்திருக்கா. சரி சரி, வா உடனே வெளியில போவோம்’’ என்று சொல்லி, தங்கச் சங்கிலி கிடைத்துவிட்ட சந்தோஷத்திலும், அங்கேயே இருந்தால் தொலைத்தவர்கள் வந்து கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்திலும் பேத்தியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டாள். அதனால், அன்று அம்பாளுக்கு உரிய பஞ்சஸங்க்யோபசாரத்தை (ஐந்துமுறை பிரதட்சிணம் செய்வது) பூர்த்தி செய்யவில்லை.

அன்று மதியம் ஒரு மணிக்கு பேத்தியையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்தாள் மீனாட்சி பாட்டி. அப்போது மடத்தில் ஒரு சிலரே இருந்தனர்.

மஹாபெரியவாளை பேத்தியுடன் நமஸ்கரித்து எழுந்த பாட்டி, கோயிலில் சங்கிலி கண்டெடுத்த விஷயத்தை மஹா பெரியவாளிடம் தெரிவிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்தாள். பாட்டி அதை மறைக்க நினைத்தாலும், பரமனின் அம்சமாக அவதரித்த மஹானுக்குத் தெரியாததும் ஒன்று உண்டா என்ன? பாட்டியைப் பார்த்து,

“இன்னியோட நோக்கு காமாட்சி யம்மன் கோயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம் கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்.....ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து! அந்த வஸ்து கிடைச்ச சந்தோஷத்துல .நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ணவிடலே. காமாட்சி பூர்ணமா அனுக்கிரகம் பண்ணிட்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே.. என்ன நான் சொல்றது சரிதானே?”என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது.  திக்கித் திணறியபடியே, ‘‘பெரியவா என்னைத் தப்பா எடுத்துக்கப்படாது. பேத்தி கையில் அது கிடைச்ச உடனே அம்பாளே அப்படி பிராகாரத்துல போட்டு, பேத்தி கையில் கெடைக்கிற மாதிரி பண்ணியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்’’

கயிலை... காலடி... காஞ்சி! - 9

‘‘பிரதட்சிணம் பண்ண மறந்த ஒனக்கு, அதை கடைக்கு எடுத்துண்டு போய் எடை போட்டு பாக்கவும், அறுந்ததை பத்தவைக்கவும் மறக்கலையே’’ என்ற பெரியவா தொடர்ந்து, ‘‘அந்த வஸ்து யாருதுன்னு நோக்குத் தெரியுமா? என்று கேட்டார்.

‘‘அம்பாள் காமாட்சியோடது’’ என்றாள் பாட்டி.

‘‘நீயே சொல்லு அதை ரகசியமா எடுத்து ஒன்னோட பொடவைத்தலைப்புல முடிஞ்சிக்கலாமா?’’

‘‘தப்புத்தான் பெரியவா, ரொம்ப ரொம்ப தப்புத்தான் ஸ்வாமி’’ என்று சொல்லியபடியே தன்னுடைய முந்தானையில் முடிந்து வைத்திருந்த தங்கச் சங்கிலியை எடுத்து ஸ்வாமிகளுக்கு முன்பு இருந்த தாம்பாளத்தில் வைத்தாள்.பாட்டிக்குக் கிடைத்த அந்த தங்கச் சங்கிலியைக் காரணமாகக் கொண்டு, மஹா ஸ்வாமிகள் பாட்டிக்கு மட்டுமல்லாமல் நமக்கும் மிகப் பெரிய படிப்பினையை உபதேசித்திருக்கிறார்.அந்த படிப்பினையை நாம் அறிந்துகொள்வதற்கு முன்பாக காமாட்சி அம்மன் கோயிலுக்குள் தங்கச் சங்கிலி வந்த வழியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த வழி..? பாட்டிக்கு அம்பிகை அருள்செய்த விதம் யாது?

- திருவருள் தொடரும்...