தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பாபநாசத்தில், ஸ்ரீராமலிங்க ஸ்வாமி கோயில் என்று சொன்னால், யாருக்கும் தெரியவில்லை. 108 சிவாலயம் என்றால், சட்டென்று வழிகாட்டுகிறார்கள்.

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாபநாசம். இந்தத் தலத்தில், ஸ்ரீராமபிரான் பிரதிஷ்டை செய்து பூஜித்த 108 சிவலிங்கங்களைத் தரிசிக்கலாம். எனவே, இங்கேயுள்ள சிவனாருக்கு, ஸ்ரீராமலிங்க ஸ்வாமி எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபர்வதவர்த்தினி.

பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தலத்தில் ஸ்ரீராமபிரான் சிவ பூஜை செய்து வரம் பெற்றார். எனவே இந்தத் தலம், பாபங்களை நாசம் செய்கிற தலம் எனும் பெருமையைப் பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

.ஸ்ரீராமபிரானுக்காக, காசியம்பதியில் இருந்து அனுமனால் கொண்டுவரப்பட்ட சிவலிங்கமும் (ஸ்ரீஅனுமந்த லிங்கம்) இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே, காசிக்கு நிகரான திருத்தலம் இது! இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு.... அனைத்து ஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதியில் சனீஸ்வர பகவானைத் தரிசிக்கலாம். இங்கு, ஸ்ரீசனீஸ்வர பகவான் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்..
கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம் ரொம்பவே விசேஷம். இந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீராமலிங்க ஸ்வாமி முதலான 108 சிவலிங்கத் திருமேனியையும் தரிசித்து, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள் நைவேத்தியம் செய்து, எள் தீபமேற்றி வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும்; சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

சனிப்பெயர்ச்சி அன்று, இங்கு தனிச் சந்நிதியில் எழுந்தருளும் ஸ்ரீசனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் பரிகார பூஜைகள் ஆகியன நடைபெறும்.

சனிப் பெயர்ச்சியில், எந்த ராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்துகொள்ள வேண்டுமோ, அவர்கள் இங்கு வந்து, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு உகந்த கறுப்பு நிற வஸ்திரத்தைச் சார்த்தி, எள் நைவேத்தியம், பால், தயிர் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வணங்குவது, சனி பகவானால் உண்டான தோஷங்கள் யாவும் விலகும்; வியாபாரம் சிறக்கும்; லாபம் கொழிக்கும்; தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்.

சனிப் பெயர்ச்சி நாளில் பாபநாசம் ஸ்ரீசனீஸ்வரரை வணங்குங்கள்; சகல நன்மைகளையும் தந்து, நம் சஞ்சலத்தையெல்லாம் போக்கியருள்வார் ஸ்ரீசனீஸ்வர பகவான் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

- கோ.சுதர்சனன்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா