
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதுமட்டுமா? எம பயம் போக்கி அருளும் திருத்தலம் எனத் தெரிவிக்கிறது, ஸ்தல புராணம். இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீதான்தோன்றி நாதரையும் ஸ்ரீதையல்நாயகி அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... இங்கு ஸ்ரீசனீஸ்வர பகவான், தனிச் சந்நிதியில் இருந்தபடி, அழகுறத் தரிசனம் தருகிறார். சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசனீஸ்வரரைத் தொடர்ந்து தரிசித்து எள் தீபமேற்றி வழிபடுவதை, தஞ்சாவூர்- கும்பகோணம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளாக வந்து, ஸ்ரீசனீஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர். ஸ்ரீசனீஸ்வரருக்கு உரிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாத நைவேத்தியம் செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றால், சனி தோஷம் விலகும்; சங்கடங்கள் அகலும் என்பது ஐதீகம்!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருவைகாவூர் செல்லும் பேருந்தில் சுமார் 15 கி.மீ. பயணித்தால், பட்டவர்த்தி திருத்தலத்தை அடையலாம். திருவையாறில் இருந்து அண்டக்குடி வந்து, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு பயணித்தாலும் இந்தத் தலத்தை அடையலாம்.
எம பயம் போக்கும் பட்டவர்த்தி தலத்துக்கு வந்து, ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீதான்தோன்றிநாதரையும் ஸ்ரீசனீஸ்வரரையும் வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!
- கோ.சுதர்சனன்
படங்கள்: இ.ராஜவிபீஷிகா