Published:Updated:

வாழ்க்கையை இனிக்கச் செய்யும் 'கல்கண்டு சாத' நைவேத்தியம்!

ஸ்ரீசாரதாம்பாள் மகிமை!

வாழ்க்கையை இனிக்கச் செய்யும் 'கல்கண்டு சாத' நைவேத்தியம்!

ஸ்ரீசாரதாம்பாள் மகிமை!

Published:Updated:
வாழ்க்கையை இனிக்கச் செய்யும் 'கல்கண்டு சாத' நைவேத்தியம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ர்நாடக மாநிலம் சிருங்கேரியில் அமைந்திருக்கிறது ஸ்ரீசாரதா பீடம். ஸ்ரீஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டதும், அவர் வழிபட்ட விக்கிரகமுமான ஸ்ரீசாரதாம்பாள் குடிகொண்டிருக்கும் அற்புதத்திருவிடம் இது!

ஸ்ரீசாரதாம்பாளின் அருள்மழை, தமிழகத்து பக்தர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன், திருச்சியில் அமைந்துள்ளது ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில்.

திருச்சி தென்னூர்- சாஸ்திரி சாலையில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள், ஸ்ரீசாரதாம்பாள். இங்கு வாழ்கிற வடமாநிலத்தைச் சேர்ந்த அன்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், ஸ்ரீசாரதாம்பாள்தான் கண்கண்ட தெய்வம்.

சித்திரை மாதப் பிறப்பில் கனி அலங்காரத்திலும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் வளையல் அலங்காரத்திலும் ஜொலிப்பாள் ஸ்ரீசாரதாம்பாள். வளையல் அலங்காரத்தில் அழகுறக் காட்சி தரும் அம்பிகையை தரிசித்து, மஞ்சள், வளையல், குங்குமப் பிரசாதம் பெற்றுச் சென்றால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் எனப் போற்றுகின்றனர், பெண்கள். மேலும் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சங்காபிஷேகம் என ஒவ்வொரு மாதத்திலும் சிறப்புற நடைபெறுகின்றன, விழாக்கள்!  

நம் வாழ்க்கையை இனிக்கச் செய்யும் ஸ்ரீசாரதாம்பாளுக்கு இனிப்புதான் பெரும்பாலும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இங்கு, வீணையின்றி காட்சி தருகிறாள் ஸ்ரீசரஸ்வதிதேவி. குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்க்கிற பெற்றோர்கள், இங்கு வந்து ஸ்ரீசரஸ்வதிதேவியையும் ஸ்ரீசாரதாம்பாளையும் வணங்கி, இனிப்பு நைவேத்தியம் செய்து பிரார்த்தித்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கின்றனர். இதனால், அந்தக் குழந்தைகள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

வாழ்க்கையை இனிக்கச் செய்யும் 'கல்கண்டு சாத' நைவேத்தியம்!

அதுமட்டுமா? நம்முள் இருக்கிற கர்வம், ஆணவம் ஆகியவற்றைப் போக்கி, சாந்த குணம் கொண்டவர்களாக்கி அருள்புரிவாளாம் அம்பிகை.

வாழ்க்கையை இனிக்கச் செய்யும் 'கல்கண்டு சாத' நைவேத்தியம்!

இங்கு, கிழக்கு நோக்கிய நிலையில், ஸ்ரீமகாலக்ஷ்மி சந்நிதி கொண்டிருக்கிறாள். வெள்ளிக்கிழமைகளில், இவளுக்குப் புடவை சார்த்தி, விளக்கேற்றி வேண்டிக் கொண்டால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். ஸ்ரீமகாலக்ஷ்மியின் சந்நிதிக்கு எதிரில், குபேர லக்ஷ்மி பூஜையும் நடைபெறுமாம். அதில் கலந்துகொண்டால், வீடு- வாகன யோகம் கிட்டும்; ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் என்பது ஐதீகம்!

கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி அன்று, சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி, இனிப்பு அப்பம் ஆகியவற்றைப் படைத்து தேவியை வணங்கி, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர்.

வட மாநிலத்து அன்பர்கள், அம்பிகைக்கு இனிப்புகளால் அலங்காரம் செய்து, வணங்கி வழிபடுகின்றனர். இதனைக் காணக் கண்கோடி வேண்டும். தீபாவளி நாளில் புதுக்கணக்கு துவங்கும் அந்த அன்பர்கள், அன்றைய நாளில் குடும்ப சகிதமாக கோயிலுக்கு வந்து, பக்தர்களுக்கு இனிப்புப் பிரசாதங்களை வழங்கி மகிழ்கின்றனர். இதனால், தொழில் சிறக்கும்; வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.  

வாழ்க்கையை இனிக்கச் செய்யும் 'கல்கண்டு சாத' நைவேத்தியம்!

ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீசக்கர மேரு அமைந்துள்ளது சிறப்பு. ஆனி மாதத்தில், 1008 கலசங்களால் ஸ்ரீசக்கர மகாமேருவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகமும் நடைபெறுகிறது.

இங்கேயுள்ள ஸ்ரீபைரவரும் விசேஷம். அஷ்டமி நாளில், இவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசித்துச் செல்கின்றனர்.

ஸ்ரீதன்வந்திரி பகவானும் இங்கு தனிச் சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், பிறந்தது முதலே ஏதேனும் நோயால் அல்லல்படும் குழந்தைகள் ஆகியோரை இந்த ஆலயத்துக்கு அழைத்து வந்து, ஸ்ரீதன்வந்திரி பகவானை வழிபட வைத்தால், அவர்கள் சகல நோய்களில் இருந்தும் விரைவில் நிவாரணம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீசாரதாம்பாளுக்குக் கல்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தியுங்கள்; உங்கள் வாழ்க்கையும் கல்கண்டு போல் இனிக்கும்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism