Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

க்னத்தில் இருந்து கேந்திரம் (1, 4, 7, 10-ம் வீடுகள்), த்ரிகோணம் (1, 5, 9-ம் வீடுகள்), அஷ்டமம் (8-ம் வீடு)- இவற்றில் பாப கிரகங்கள் (வெப்ப கிரகங்கள்) இருக்கக்கூடாது. லக்னாதிபன், குரு இருவரும் லக்னத்தில் இருந்து கேந்திரத்தில் இருக்கவேண்டும். இப்படி யான அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், அவன் உலகவியல் சுகபோகங் களைச் சுவைத்து மகிழ்ந்து, நீண்ட ஆயுளுடன் பல செயல்பாடு களால் உலக நன்மையை வளர்த்து, பிறவிப் பயனை அடைவான் என்கிறது ஜோதிடம். அவனது முற்பிறவி கர்மவினை, அவனை முழு மனிதனாக்கி பெருமையுடன் விளங்கும் தகுதியை அளித்து நிறைவுற்றது என்று சொல்லலாம்.

கர்மவினையானது துயரத்தையும் அளிக் கலாம் மகிழ்ச்சியையும் அளிக்கலாம். நன்மை, தீமைகளைக் கலந்தும் அளிக்கலாம். அவனது முற்பிறவியின் செயல்பாட்டின் தரம் கண்ணுக்குப் புலப்படாது. அவன் தோன்றும் வேளையில் இருக்கும் கிரக அமைப்பு, அவனது  முற்பிறவியின் தரத்தைச் சுட்டிக்காட்டும்.

1, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வீடுகள் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியுறச் செய்யும் தகுதி இருப்பவை. அங்கு பாப கிரகங்கள் இல்லாமல் இருப்பது, அவன் அனுபவிக்கவேண்டிய மகிழ்ச்சியில் இடையூறு இல்லை என்பதை வரையறுக்கிறது.

லக்னாதிபன், குரு இந்த இருவரும் கேந்திரத்தில் இருப்பது, அவனது மகிழ்ச்சியை உணரவைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பிறந்தவேளைக்கு (லக்னம்) கேந்திரம் என்ற தகுதியும், த்ரிகோணம் என்ற தகுதியும் உண்டு. 1, 5, 9 த்ரிகோணத்தில் 1 லக்னம். 1, 4, 7, 10 கேந்திரத்தில் 1 லக்னம் இந்த இரண்டு தகுதிகள் லக்னத்துக்கு உண்டு. இரண்டு தகுதியை உடையவன், யோக காரகனாக மாறிவிடுவான். நன்மையை நம்மோடு இணைப்பவனாக மாறி விடுவான் என்று பொருள். எந்த கிரகமாக இருந்தாலும், கேந்திரத்திலும் த்ரிகோணத்திலும் அவனுக்கு இடமிருந்தால், அவன் நல்லவனாக செயல்பட்டு, அவனது கர்மவினைக்கு இணங்க, அதிலும் சுபபலனை முழுமையாகச் சுவைத்து மகிழவைப்பான். இது ஜோதிடத்தின் கோட்பாடு.

கடக லக்னத்துக்கு செவ்வாய் யோககாரகன். அவன் வெப்ப கிரகமானாலும், அவன் அமர்ந்த இடம் கர்மவினையின் நல்ல பலனை சுவைக்க வைப்பவனாக மாற்றிவிடுகிறது. செவ்வாய் (விருச்சிகம் 5-ம் இடம், மேஷம் 10-ம் இடம்). அதற்கு அதிபதியும் செவ்வாய். த்ரிகோணத்திலும் (5-ல்) செவ்வாய்க்கு இடம் உண்டு; கேந்திரத்திலும் (10-ல்) இடம் உண்டு என்பதால், அவனை ‘யோக காரகன்’ எனும் தகுதி உடையவனாகச் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.

சிம்ம லக்னத்துக்கும் செவ்வாய் (4-ம் வீடு விருச்சிகம்) கேந்திரத்துக்கும் உடையவன்; (9-ம் வீடு மேஷம்) த்ரிகோணத்துக்கும் உடையவன். அவனுக்கு அந்தத் தகுதியுண்டு. மகர லக்னத்துக்கு சுக்கிரன் யோக காரகனாக மாறுவான். கும்ப லக்னத்துக்கு அவன் யோககாரகனாக இருப்பான். மகர லக்னத்துக்கு 5-க்கு உடையவன் சுக்கிரன் (ரிஷபம்); 10-க்கு உடையவன் சுக்கிரன் (துலாம்). கும்பத்துக்கு 4-க்கு உடையவன் சுக்கிரன்; 9-க்கு உடையவனும் சுக்கிரன். அங்கு யோககாரகனாக கேந்திரத்தில் ஒன்றிலும் த்ரிகோணத்தில் ஒன்றிலும் அதிபதியாக இருக்கும் தகுதியை வைத்து, அவன் அளிக்கும் பலனை இறுதி செய்கிறது ஜோதிடம்.

லக்னதிபதிக்கு வெப்ப கிரகமானாலும் தட்ப கிரகமானாலும் 1 என்கிற ஸ்தானம் கேந்திரமாகவும் த்ரிகோணமாகவும் அமைவதால், லக்னாதிபதியாக வருபவன் தானாகவே யோககாரகனாக மாறி விடுகிறான். அந்த லக்னாதிபதி கேந்திரத்தில் ஒன்றில் வந்தாலும் நற்பயனை அளித்துவிடுகிறான். அல்லது முற்றிலும் சுப கிரகமான குரு கேந்திரத்தில் அமைந்தாலும் நற்பயனை அளித்துவிடுகிறான். லக்ன கேந்திரங்கள் பாபயோகம் இல்லாமலும் (இடையூறு), அஷ்டமம் (8-ம் வீடு) ஆயுர்பாவம், பாபயோகம் இல்லாமலும் (இடையூறு) இருக்கும் தறுவாயில், லக்னத்துக்கு உடையவனும் (யோககாரக தகுதியுடையவனும்), கேந்திரத்தில் (1, 4, 7, 10-ம் வீடுகளில்) ஒன்றில் இருப்பதும், சுப கிரகமான குரு கேந்திரத்தில் இருப்பதும் கர்ம வினையானது புண்ணிய பலனை முழுமையாக அளித்து மகிழவைத்துவிடுகிறது.

பாப கிரகங்கள் 2, 3, 6, 11, 12 இந்த வீடுகளில் ஒதுங்கிவிடுவதால், நெருடல் இல்லாத இன்பத்தைச் சுவைக்கும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. 2- மாரகஸ்தானம், 3-ஒத்துழையாமை, 6-எதிர்ப்பு, 11 - லாபத்தைச் சுட்டிக்காட்டினாலும், கர்மத்தின் அளவைப் பொறுத்துதான் செயல்படும். 12 - இழப்பு. இங்கெல்லாம் நேரடி யாக நமது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் இடமாக (வீடாக) இல்லாததால், அவர்கள் (வெப்ப கிரகங்கள்) தகுதியிருந்தும் இடையூறு செய்ய முடியாமல் இருந்துவிடுகிறார்கள்.

லக்னாதிபதியும், குருவும் தங்களது செயல் பாட்டில் இடையூறின்றி செயல்பட்டு வெற்றி பெற்று, ஜாதகனுக்கு கர்ம வினையின் நற்பயன்களை ஏற்கவைத்து மகிழ்விக்கிறார்கள். கொடுத்துவைத்தவனுக்குக் கிடைத்துவிடுகிறது. முன் ஜன்மத்தில் புண்ணியத்தைச் சேமித்து வைத்தவனுக்கு இப்பிறவியில் கிடைத்து விடும் என்கிறது ஜோதிடம். புண்ணிய பலனை (நற்பயனை) இவனோடு இணைக்கும் வேளையை லக்னாதிபதியும், குருவும் சேர்ந்து செய்தார்கள். அவர்களது செயலுக்குக் குந்தகம் விளைவிக்காமல் கேந்திரத்தில் இருந்தும், த்ரிகோணத்தில் இருந்தும் அஷ்டமத்தில் இருந்தும் முற்றிலும் விலகி, வெப்ப கிரகங்கள் தங்களுடைய ஒத்துழைப்பை அளித்தன. ஒரு வகையில் வெப்ப கிரகங்களின் ஒத்துழைப்பும், அவன் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்லலாம்.

கேந்திர, த்ரிகோண வீடுகளில் அமர்ந்த கிரகங் களும், லக்னாதிபதியின் தொடர்பும் சுப கிரகங்களின் ஒத்துழைப்பும் அவனது பூர்வஜன்ம புண்ணிய பலனை அனுபவிக்கும் அளவுகோல் என்று சொல்லலாம். மறைந்திருக்கும் கர்மவினையின் பலனை, பிறந்தவ னோடு இணைத்துவைக்கும் வேலையை, வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் நடைமுறைப்படுத்துகின்றன. அப்பாவி மக்கள் மகிழ்ச்சியைத் தழுவுவதும், மெத்தப்படித்தவன் துயரத்தில் துவண்டுபோவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்றும் துறந்தவன் உலகவியலை எட்டிப் பார்க்கிறான். உலகவியலில் ஊறியவன் ஆன்மிகத்தை விரும்பு கிறான். இருவரது எண்ணமும் நிறைவேறுவதில்லை.

சிந்தனையாளர்களும் சந்தி சிரிக்க வாழ்வது உண்டு; சிந்தனை வளம் பெறாதவர்களும் பெருமை பெற்று விளங்குவது உண்டு. படித்தும் வேலையில்லாமல் தவிப்பவர்களும் உண்டு; படிப்பின்றி வளமோடு வாழ்பவர்களும் உண்டு. சிந்தனைக்கு எட்டியதை நழுவவிட்டவர் களும் உண்டு; சிந்தனைக்கு எட்டாததைப் பெற்றவர்களும் உண்டு. இந்த விபரீதங்கள் அத்தனையும் கர்மவினையின் விளையாட்டு என்கிறது ஜோதிடம். இல்லை என்று எதிர்ப்பவர்கள் ஏராளம் உண்டு. அனால், உண்மை எது என்று சொல்ல யாராலும் இயல வில்லை. ‘தனக்கும் தெரியாது சொன்னதையும் கேட்கமாட்டான்’ என்று சொல்வார்கள்.

பிறப்பவனின் கர்மவினை, அவன் பிறக்கும் வேளையில் தென்படும் ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள், அந்த விபரீதங்களைச் சுட்டிக் காட்டிவிடும். அதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்தச் செய்யுள்: கேந்திரத் ரிகோணநிதஷேஷ நயஸ்ய பாபா:..!  முனிவர்களின் சுயசிந்தனை சிக்கலை விடுவித்து, தெம்பை ஊட்டி வாழவைக்கிறது. கடன் வாங்கிய சிந்தனை, சிக்கலை விரிவாக்கி வெளிவர முடியாமல் தவிக்கச்செய்கிறது. இதுவும் கர்மவினையின் விளையாட்டு எனச் சொல்லவைக்கும் ஜோதிடம்.

முன்னோர்கள் சொன்னார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதன், சுக்கிரன், சனி ஆகிய மூவரும் ஒரே ராசியில் அம்சகம் பெற்றவராக இருக்கவேண்டும். அவர்கள் ராசியில், லக்னத்தில் இருந்து ஒன்பதிலோ, லக்னத்திலோ இருக்கவேண்டும். அதேவேளையில், சந்திரன் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஒன்றில் இருக்கவேண்டும். இப்படி யான அமைப்பு ஜாதகத்தில் தென்பட்டால், அவன் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்வான். குறை மனதில் தென்படாதவாறு நிறைவடைந்துவிடும். பிறந்தவனுக்குப் பெருமை சேர்க்கும் முறையில், ஜாதகத்தில் கிரகங்கள் அமைந் திருக்கும். புதன் கல்வியையும், அலசி ஆராயும் திறனையும் சந்தர்ப்பத்துக்கு உகந்தவாறு செயல்பட்டு, பேராபத்தில் இருந்து எளிதில் வெளிவரும் திறமையை அளிப்பான். இதை, ஜோதிடத்தில் ‘ப்ரத்யுத்பன்மைதித்வம்’ - என்று சொல்வார்கள்.

சுக்கிரன், உலகவியல் சுகபோகங் களை ஏற்கவைப்பான். தாம்பத்திய சுகத்தை சுவைக்கவைப்பான். சனி, தனக்குக் கிடைத்த பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள பணிந்தும், பணிய வைத்தும் வெற்றி அடையும் திறனுக்கு ஊக்கம் அளிப்பான். சந்திரன் 6, 8, 12-ல் தனது வலிமையை இழந்து, அந்த கிரகங்களின் அதாவது 6 அல்லது 8 அல்லது 12-க்கு உடையவனின் தகுதியில் செயல்பட்டு, மறைமுகமாக ஒத்துழைப்பான். இடையூறைச் செய்ய வேண்டியவன் சந்திரன். அவனது சிந்தனை மாற்றம், வேறு வழியில் செல்லவைக்கும். அதற்கு இடம் அளிக்காமல், வீட்டின் அதிபதியின் தாக்கத்தில் அவனது செயல்பாடு, மற்ற மூன்று கிரகங்களின் உற்சாகத்துக்கு உரமூட்டுவதாக மாறிவிடுகிறது.

சந்திரன் சுப கிரகம். ஆனால் தேய்பிறையில் அசுபனாக மாறி விடுவான். சந்திரனின் இயல்பு மனதின் இயல்பை பிரதிபலிக்கும். வளர்ந்தும் தேய்ந்தும் இருப்பதால், மாறி மாறி சிந்தனைகள் நிலையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். மனப்போராட்டம்  மற்ற எல்லா போராட்டங்களைவிடவும் வலுவானது. ஆராய்ந்து எடுத்த முடிவிலும்... செயல்படும் தறுவாயில் சந்தேகத்தில் ஆழ்ந்துவிடும் மனம். போரில் வெற்றிக்கும் இடம் இருந்தாலும், செயல்படும்போது தோல்வியை எண்ணி தடுமாற்றத்தைச் சந்திக்கும் மனம். அவன் 6, 8, 12 ஆகிய மூன்றில் ஒதுங்கிவிட்டதால், சிந்தனைத் தடுமாற்றம் இல்லாமல், வாழ்க்கை நெருடல் இல்லாமல் விளங்க ஏதுவானது என்கிறது ஜோதிடம். 6, 8, 12 இந்த மூன்று வீடுகளை ‘த்ரிகம்’ என்று குறிப்பிடும் ஜோதிடம். 6- எதிர்ப்பு, 8-அழிவு, 12 -இழப்பு. இந்த மூன்றுமே நமக்கு விருப்பம் இல்லாதவை. அந்த வீடுகளும், அதன் அதிபதிகளும் தத்தமது இயல்பைச் செயல்படுத்துவதில் முனைந்து, வெற்றி பெற்றுவிடுவார்கள். இந்த மூன்றுக்கும் உடையவர்கள் மற்ற வீடுகளில் அமர்ந்தால், அந்த வீடுகள் தரவேண்டியதை தாறுமாறுவாக்குவார்கள். மற்ற வீட்டுக்கு உரியவர்கள் இந்த வீட்டில் இருக்கப்பெற்றால், அவர்கள் தன் வசமிழந்து, வீட்டிற்கு உடையவனின் இயல்பில் செயல்பட்டு விடுவார்கள்.

முள் இலையில் விழுந்தாலும், இலை முள்ளில் இணைந்தாலும் இலைதான் கெடுதலை ஏற்கும்; முள்ளுக்கு ஒன்றும் ஆகாது என்று சொல்வர். அந்த முள் போன்றது ‘இந்த த்ரிகம்’. இங்கு புதனும், சுக்கிரனும், சனியும் மிக நெருக்கமாக இணைந்தவர்கள். அதன் அடையாளம் ஒரே ராசியில் அம்சகம் பெற்றவர்கள். அம்சக ராசிநாதனின் பெருமையும் கேட்காமலேயே இம்மூவருடன் இணைந்து வலுவுக்கு வலு சேர்த்துவிடுகிறது.

கல்வி, செல்வம் விழிப்பு உணர்வு - இம்மூன்றும் திடமாக இருக்கையில், சிந்தனையும் (சந்திரன்) இடையூறு செய்யாமல் 6, 8, 12 இவற்றில் ஒடுங்கிவிட்டதால், அம்மூவரது பெருமை இடையூறு இன்றி செயல்பட்டுவிட்டது என்று விளக்கம் அளிக்கும் ஜோதிடம். சனி வெப்ப கிரகம். புதனும் சுக்கிரனும் தட்ப கிரகங்கள். இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கையில், சனியும் தனது இயல்பை அவர்களது விருப்பத்துக்கு இணங்க செயல்பட வைத்து, ஒத்துழைப்பை அளித்துவிடுகிறான். இப்போது இந்த மூவரின் சேர்க்கை, அவனது வாழ்க்கையை வளமாகவும், நீண்ட ஆயுளை அளிக்கவும், பெருமையை ஏற்கவைக்கவும் செய்துவிடுகிறது.

 புதன் தட்ப கிரகம்-சுப கிரகம். அவன் பாபியுடன் இணைந்தால், பாபியாக மாறுவான். சுக்கிரனுடன் இணைந்தால் சுபனாக மாறு வான். சனி, இருவரது இணைப்பில் தனது திறமையை அவ்விருவருக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விடுகிறான். அவனது கர்மவினை நல்ல பலனை அளிக்கும் விதத்தில், அவனது பிறந்த வேளையில் மூவரும் அம்சகத்தில் சேர்ந்திருக்கும் நேரத்தில், அதே நேரம், சந்திரன் த்ரிகத்தில் சஞ்சரிக்கும் நேரத்தில் அமையப் பெற்றது.

பிறக்கும் வேளையையும், அவன் உணரப் போகும் உணர்வையும் கர்மவினைதான் உருவாக் குகிறது. சிந்தனை கர்மவினைக்கு உகந்தபடி செயல்படும் என்கிறது ஜோதிடம் (‘புத்தி: கர்மானுஸாரினீ’).
கர்மவினையின் பயனை எதிர்க்கும் சிந்தனை உருவாக வழியில்லை. பகுத்தறிவுவாதியும் சங்கடங்களையும் சந்தோஷத்தையும் மாறி மாறி சந்திக்கி றான். விபரீத பலனையும் சந்திக் கிறான். என்றாலும் அதை ஆராயும் திறன் இல்லாததாலும், நம்பிக்கை இல்லாததாலும் கர்மவினையின் பயனை அப்படியே அனுபவிக்கிறான். கர்மவினையின் மாற்றத்துக்கு இணங்க சிந்தனை மாற்றம் தென்படும்.  கடவுளை ஏற்காதவனும் சுய சிந்தனையில் முன்னேற முடியாமல் தவிக்கிறான்!

உலகம் விசித்திரமானது. அதில் தோன்றிய மனித சிந்தனையும் விசித்திரமானது. மனதின் இயல்பும், இயற்கையின் இயல்பும் ஒன்றாக இருக்கும். விசித்திரமான படைப்புதான் இயற்கைக்குப் பெருமை. விசித்திரமான சிந்தனைதான் மனதுக்குப் பெருமை. அதில், பிறப்பின் இலக்கை எட்ட அந்தச் சிந்தனையைப் பயன்படுத்தத் தெரியவேண்டும்.

பிறந்தவேளை, ஜாதகத்தில் அமைந்த கிரகங்களை ஆராய்ந்தால், அவனது இயல்பு, கர்மவினையின் தரம் அத்தனையும் தெரிந்து விடும். ஆராய்ச்சியில் ஆழமாக இறங்கினால், ஜோதிடத்தின் பயன்பாடு தெரியவரும். ஆகவே, பல ஜோதிட நூல்களை கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism