Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

சிலையால வந்த சர்ச்சை!

நாரதர் உலா

சிலையால வந்த சர்ச்சை!

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா
நாரதர் உலா

‘‘நாராயண நாராயண! இது, சிலைகள் சர்ச்சை சீசன் போலும்..!’’ - இந்த இதழ் தகவலுக்கான முன்னோட்டத்தைக் கூறியபடியே வந்தமர்ந்தார் நாரதர். என்ன ஏதென்று நாம் கேட்பதற்குள்ளாக அவரே முந்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

நாரதர் உலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஹரித்துவாரில் வள்ளுவர் சிலை அமைப்பதில் பெரிய சர்ச்சை எழுந்தது நமக்குத் தெரியும். அதேபோல் இங்கே, வாணியம்பாடியில் காமராஜர் சிலை கேட்பாரற்று கிடப்பதாக வந்த செய்தியையும் படித்திருப்பீர்...’’ என்று பூடகமாகக் கூறி நிறுத்தினார் நாரதர். இந்தச் செய்தி களோடு, தன் பங்குக்கு தானும் ஏதோ சிலை மேட்டரைச் சொல்ல வருகிறார் என்பது நமக்குப் புரிந்தது.

ஆனாலும் அவரே சொல்லட்டும் என்று அமைதி காத்தோம். நமது உள்ளக் குறிப்பை உணர்ந்தவராக, தான் கொண்டுவந்த செய்தியை அவிழ்க்க ஆரம்பித்தார் நாரதர்.

‘‘திருவாரூர் பாடல் பெற்ற தலம். திருவாரூர் ஆழித்தேர் உலக பிரசித்தம். அந்தக் கோயிலில் கொண்டு வந்து வைக்கப்பட்ட ஒரு சிலையே இப்போது பக்தர்களின் வருத்தத்துக்கும் கோபத்துக்கும் ஆளாகி இருக்கிறது’’ என்று நாரதர் நேரடியாக விஷயத்துக்கு வராமல்,    சுற்றிவளைத்து பேசத் துவங்க... ‘‘என்ன சிலையை, எங்கிருந்து கொண்டு வந்து வைத்தார்களாம். அதைக் கூறும் முதலில்’’ என்று உரிமையோடு கடிந்துகொண்டோம். நாரதர் விஷயத்துக்கு வந்தார்.

‘‘குடவாசல் பகுதி கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தர் சிலை கிடைத்திருக்கிறது. அந்த புத்தர் சிலையைத்தான் கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். அதுதான் சர்ச்சைக்குக் காரணம்''

‘‘மூன்றரை வருடங்களாக இல்லாமல் இப்போது மட்டும் சர்ச்சை ஏனாம்?’’

‘‘புத்தரின் சிலை அங்கே வைக்கப்பட்ட சில நாட்களிலேயே, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் திருவடிக்குடில் சுவாமிகள் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, கோயில் அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, 24.3.14 அன்று தமிழக முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட தொல்லியல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். இது பற்றிய செய்தி அப்போது நாளிதழ்களில்கூட வெளிவந்திருக்கிறது’’

‘‘அதன்மேல் இன்னுமா நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்?’’

நாரதர் உலா

‘‘நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, திருவடிக்குடில் சுவாமிகள் கடிதம் எழுதி சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு தொல்லியல் துறை சார்பில் அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில், ‘ஒரு மாவட்டத்தில் புதைபொருட்களாகக் கிடைக்கும் சிலைகள், கல்வெட்டுகள், படிமங்கள் மற்றும் கலைப் பொருட்களை அந்த மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைப்பதுதான் மாவட்ட அருங்காட்சியகத்தின் முக்கியமான பணி. மேற்படி அருங்காட்சியகத்தில் வைக்கப் படும் பொருட்கள் அனைத்தையும் காட்சிப் பொருட்களாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர சமயம் சார்ந்த பொருளாகப் பார்க்கக் கூடாது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.'' என்று நாரதர் கூறிமுடிக்க, நாம் வேறோரு கோணத்தை முன்வைத்தோம்.

‘‘சைவமும் பௌத்தமும் மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சமயங்கள்தான் என்பதில் பக்தர்களிடையே எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது. ஆனால், வழிபாட்டு முறைகளில் இரண்டு சமயங்களுமே வெவ்வேறானவை. அதுமட்டுமல்ல, ஒரு காலத்தில் பௌத்த சமயத்துக்கும் சைவ சமயத்துக்கும் இடையே நிகழ்ந்த பூசல்கள் ஏராளம் உண்டு என்பார்கள். அப்படி இருக்கும் போது, புத்தரின் சிலையை பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் வைத்திருப்பது பக்தர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத் தும்தானே?’’ என்று நாரதரிடம் கேட்டதுடன், ‘‘இதுபற்றி திருவடிக்குடில் சுவாமிகளிடம் பேசினீரா?’’ என்றும் விசாரித்தோம்.

‘‘பேசாமல் இருப்பேனா? அவரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் கொட்டி தீர்த்துவிட்டார் சிவாலயங்கள் அனைத்துமே சிவாகமங்களுக்கு உட்பட்டு கட்டப்பட்டவை. கோயிலில் ஒருதுளி மண்ணும்கூட சமயப் பார்வைக்கு உட்பட்டதாகத்தான் பார்க்கப்படும். சமயப் பார்வைக்கு அப்பாற்பட்ட எந்தப் பொருளும் கோயிலுக்குள் இருக்கக்கூடாது. அதுவும் வேறு ஒரு சமயத்தைச் சேர்ந்த சிலை கண்டிப்பாகக் கோயிலுக்குள் இருக்கக்கூடாது.’ எனத் தெரிவித் தார்'' என்ற நாரதரிடம், தொடர்ந்து நமது கேள்வியை முன்வைத்தோம்.

‘‘திருவடிக்குடில் சுவாமிகள் 24.3.14 அன்றே கடிதம் எழுதியதாகவும், அதற்கு அந்த வருடமே டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து மறுப்புக் கடிதம் வந்ததாகவும் கூறினீரே? பின் இத்தனை நாட்களாக திருவடிக்குடில் சுவாமிகள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லையா?’’

‘‘இதுகுறித்தும் நாம் அவரிடம் கேட்டோம். அப்போது கோயிலில் திருப்பணிகள் நடை பெற்று வந்ததால், திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடப்பதற்குள் புத்தர் சிலையைக் கோயிலில் இருந்து எடுத்துவிடுவார்கள் என்று நினைத்ததாகவும், ஆனால், கும்பாபிஷேகம் நடந்த பிறகும்கூட புத்தர் சிலை அங்கேயே இருப்பதால்தான் மீண்டும் புத்தர் சிலையை எடுக்கவேண்டும் என்று 13.7.16 அன்று அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார். இனியும் புத்தர் சிலையை கோயிலில் இருந்து எடுக்கவில்லை என்றால், சைவ சமய அமைப்புகளை ஒன்று திரட்டிப் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்’’ என்றார் நாரதர்.

‘‘இதுபற்றி அறநிலையத்துறையினரிடம் விசாரித்தீரா?''

‘‘அறநிலையத்துறை வட்டாரத்தில் விசாரித் தபோது, அதுபற்றிய கடிதம் வந்திருப்பதாகவும், மேற்கொண்டு ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்கள்'' என்ற நாரதரிடம், சிலைக்கடத்தல் குறித்து நினைவூட்டி, அது தொடர்பான தகவல்கள் உண்டா என்று கேட்டோம்.

‘‘சிலைக்கடத்தல் தடுப்பு சி.ஐ.டி. பிரிவினர் பல வழிகளிலும் சிலைத் திருட்டு மற்றும் கடத்தல் விவகாரங்களை விசாரித்து வருவ தாகக் கேள்வி. மேற்கொண்டு தகவல்கள் கிடைத்ததும் வந்து சொல்கிறேன்’’ என்ற நாரதர் நம்முடைய பதிலை எதிர்பார்க்காமலேயே அந்தர்தியானமானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism