Published:Updated:

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!

Published:Updated:
நல்லது நடந்தது!

திருமண வரம் தரும் திருமணஞ்சேரிக்கு அருகில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவில் உள்ளது காளி கிராமம். ஸ்ரீகாமேஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவ பெருமான்; அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீஅபிராமி; அழகுத் திருக்கோலத்தில், ஸ்ரீபாலசுகாம்பிகை கோயில் கொண்டிருக்கும் அற்புதத் தலம் இது.

இங்குள்ள சிவாலயம் குறித்து, 'ஸ்ரீகாமேஸ்வரர் கோயிலை கவனிக்கக் கூடாதா?’ எனும் தலைப்பில், சக்தி விகடன் இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம். அருள்மிகு அபிராமி பரிபாலன டிரஸ்ட் எனும் அமைப்பு,  சுமார் நூறு வருடங்களுக் கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாத இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்ய பெருமுயற்சிகள் மேற்கொண்டது. பணிகளும் தொடர்ந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
'தடாலென்று நிதிப்பற்றாக்குறையால், திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன. சக்தி விகடன் இதழில், கோயில் பற்றிய கட்டுரை வெளியானதும் மளமளவென குவிந்தது நிதியுதவி. இரவு - பகல் பாராமல், வேலைகள் செய்து, கோயிலைச் சீரமைத்து, புதுப்பித்து, அப்படியே ஸ்ரீநித்திய கல்யாண பெருமாளுக்கும் அழகிய சந்நிதி அமைத்து, கடந்த 27.10.10 அன்று வெகு விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சக்தி விகடனுக்கும் வாசகர் களுக்கும் நன்றி'' என நெகிழ்ச் சியுடன் தெரிவிக்கிறார் இந்த அமைப்பின் மேனேஜிங் டிரஸ்டி சங்கரன் ஐயா.

''இதோ... வருகிற 14.11.11-ம் தேதி வரை (31.10.11 துவங்கி) முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. தினமும் லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் என அமர்க்களப்படவுள்ளது, ஸ்ரீகாமேஸ்வரர் கோயில். சென்னையில் இருந்து அர்ச்சகர் ஒருவரை நியமித்து, தினப்படி பூஜைகளுக்கு நியமித்துள்ளோம். அங்கேயே அவருக்கு வீடு-வாசல் என சகலமும் ஏற்பாடுகள் செய்து அமர்த்திவிட்டோம். திருமணஞ்சேரிக்கு வருபவர்கள், அருகில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஅபிராமி அம்பாள், ஸ்ரீபாலசுகாம்பிகை சமேத ஸ்ரீகாமேஸ்வரரையும் ஸ்ரீநித்திய கல்யாண பெருமாளையும் தரிசித்துச் செல்கின்றனர். இவை அனைத்துக்கும் பாலம் அமைத்துக் கொடுத்த சக்தி விகடனுக்கு, எங்கள் டிரஸ்ட் சார்பிலும் காளி கிராம மக்கள் சார்பிலும் நன்றிகள்!'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் சங்கரன் ஐயா.

நல்ல விஷயங்களுக்கு கை கொடுக்க விகடன் வாசகர்கள் எப்போதுமே தயாராக இருப்பார்கள். இந்த விஷயத்திலும் அப்படித்தான்!

- வி.ராம்ஜி
படங்கள்: ந.வசந்தகுமார்